இதை பிரெஞ்சில் வெளியிட்ட Dupuis (டுபுக்ஸ் என்றெல்லாம் தவறாக படிக்கக்கூடாது!) நிறுவனத்தின் இணையதளத்தில், இது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் படிக்கத் தகுந்தது என போட்டிருக்கிறது - எனவே இதை குழந்தைகள் காமிக்ஸ் என சொல்ல முடியாது - கொஞ்சம் சுழற்றியடிக்கும் கதைக்களன்கள் கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம்! கதைக்கான ஓவியங்கள் சுமார் என்றும் சொல்லிட முடியாது - வேண்டி விரும்பி இவ்வாறாக வரையப்பட்டுள்ளது தெரிகிறது - ஒரு அமெச்சூர் டிடெக்டிவ்வை தெள்ளத் தெளிவான சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினால் எடுபடாது, இதுதான் சரி! உண்மையில் கதை மாந்தர்களின் சித்திரங்கள்தான் மொக்கையாக குண்டு அல்லது சப்பை மூக்குகளுடன் வரையப்பட்டுள்ளன - ஆனால் தெருக்கள், சாலைகள், சுற்றுப்புற கட்டிடங்கள், பொருட்கள் இவை யாவும் மிக நுணுக்கமாக சித்தரிகப்பட்டுள்ளன!
ஜெரோமிடம் கார், பைக் எல்லாம் கிடையாது - மொபெட் மட்டும்தான். எடிட்டர் விஜயன் தவறாக சைக்கிள் என குறிப்பிடுகிறார், உண்மையில் அது பழைய லூனா போன்ற ஒரு வகை மொபெட் - Solex நிறுவன தயாரிப்பு - ரொம்ப முக்கியம் ;) - தம் மொபெட்டில் அட்ரஸ் எல்லாம் ஒட்டிக்கொண்டு ரெயின் கோட்டு, தொப்பி சகிதம் துப்பறிய கிளம்பிவிடுவார் மனிதர்! உடனே நான் ஜெரோம் சீரிஸை சிறு வயதிலேயே கரைத்துக் குடித்தவன் என விபரீத கற்பனையை வளர்க்காதீர்கள் - எல்லா புகழும் பிரெஞ்சு விக்கிபீடியாவிற்கே! இது போன்ற துப்பறியும் கட்டுரைகளை(!) இன்டர்நெட் இல்லாமல் எழுத முடியாது! :D குறிப்பாக நாளைக்கு!
இதுவரை 22 ஜெரோம் ஆல்பங்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்ணை மூடிக்கொண்டு நடுவில் இரண்டு புத்தகங்களை உருவிய கதையாய் ஆல்பம் என் 15 & 16-இல் வெளியான ஒரு முழு நீள ஜெரோம் சாகசத்தை வெளியிட்டதை கூட பொறுத்துக் கொள்ளலாம்! ஆனால் இப்படியா மொட்டையாகவா கதையை ஆரம்பிப்பது?! ஜெரோம் யார், அவர் எங்கு வசிக்கிறார், ஒரே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கும் ஜெரோமுக்கும் என்ன தொடர்பு? இதை பற்றி ஒரு prologue இன்னமும் விரிவாக போட்டிருக்கலாம்! நட்ட நடுக்காட்டில் விட்டது போன்ற ஒரு ஃபீலிங்! இன்னும் படிக்காதவர்களுக்காக மேற்சொன்ன விடுபட்ட குறிப்புடன் கதைச் சுருக்கத்தை பார்க்கலாம்!
பாரிஸ் மாநகரின் ஒரே டிஸ்ட்ரிக்ட்டில் (நம்மூர் பாஷையில் ஏரியா!) வசிக்கும் ஒரு சில கதாபாத்திரங்களை சுற்றியே பெரும்பாலான ஜெரோம் கதைகள் பின்னப்பட்டுள்ளன (என்று ஆராய்ந்த வரையில் தெரிகிறது!). ஜெரோம் வசிக்கும் அபார்மென்ட்டின் கேர்-டேக்கர் மிசஸ் ரோஸ் என்ற நேர்மையான மூதாட்டி! ரோஸின் தோழர் ஒரு வயதான வாட்ச்மேன்!

அதனுள் ஒரு அழகிய பெண்ணின் நிர்வாண ஓவியமும் இருக்கிறது! ரோஸின் மீது மிகுந்த நன்மதிப்பு கொண்ட ஜெரோம் அவருக்கு அந்த ஓவியத்தை மட்டும் தனியாக பரிசளிக்கிறார் (கலாச்சார அதிர்ச்சி - நம்மூர் பாட்டிகளுக்கு இப்படி பரிசளித்தால் என்ன ஆகும்?!). ஓவியத்தோடு கூடவே பிரச்சினையையும் வாங்கியது அவருக்கு அப்போது தெரிந்திருக்க நியாமில்லைதான்!
மூதாட்டியின் போஸ்ட்மேன் நண்பர் பரிசளிக்கப்பட்ட அந்த ஓவியம் ஒரு பிரபல ஓவியரால் வரையப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என இனம் காணுகிறார் - அதை விற்கவும் யோசனை சொல்லுகிறார், ஆனால் மிசஸ் ரோஸுக்கு அதில் உடன்பாடு இல்லை. அது நிச்சயம் களவாடப்பட்ட பொருளாய் இருக்க வேண்டும் என நினைத்து ஜெரோமிடமே திருப்பித் தந்து விடுகிறார்! ரோஸின் நேர்மையை கண்டு நெகிழும் ஜெரோம், அவ்வோவியத்தை அதன் உண்மையான உரிமையாளரிடம் சேர்ப்பிக்க எண்ணி, அவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்! ஒரு வழியாக அதன் உரிமையாளர் ஒரு கறார் கணக்கு டீச்சரான 'மேடம் டி ஷெகுர்' என்பதை கண்டறிந்து அந்த குண்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தும் விடுகிறார்! விலை உயர்ந்த ஓவியம் என்ற ஒன்றை தாண்டி அந்த ஓவியத்தின் பின்னே ஒரு சோகக் கதை - அதுதான் "சிகப்பு கன்னி மர்மம்" - இக்கதையின் முதல் பாகம்!
'மேடம் டி ஷெகுர்'-இன் வீட்டில் ஜெரோம் விருந்துண்ணும் போது இரண்டு மூன்று நபர்கள் ஒரு சில காரணங்களுக்காக வந்து செல்கிறார்கள்! மூதாட்டி ஓவராய் ஊற்றி கொடுத்ததில் ஃபிளாட் ஆகும் ஜெரோம் கண் விழித்துப் பார்க்கும் போது பெருத்த ஆபத்தில் சிக்கி இருப்பது தெரிகிறது - மூதாட்டி சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருக்கிறார், துப்பாக்கி ஜெரோமின் கையில், கதவை பலமாய்த் தட்டும் போலிஸ்! மூதாட்டியை சுட்டது யார்? ஜெரோமா? அல்லது நடுவில் வந்த சில நபர்களா? ஆனால் ஜெரோம்தான் என போலிஸ் கமிஷனர் முடிவெடுத்து கேஸை க்ளோஸ் செய்ய முயல்கிறார்!
அப்போதுதான் ஆஜராகிறார் ஜெரோமின் காதலி பாபெட்! கமிஷனரை ஏதோ தனது அசிஸ்டன்ட் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு, அவரை தன் போக்கில் வரவழைத்து - இவர் துப்பறியும் விதம் கவிதை! சிறையில் இருந்தவாறே இவர் துப்புத் துலக்க ஜெரோம் உதவுகிறார்! கதையில் ஒரு சஸ்பென்ஸ் ஃபேக்டர் மிஸ்ஸிங்தான் என்றாலும், குற்றவாளி யாராய் இருக்கக் கூடும் என எளிதில் யூகிக்க முடிந்தாலும் - கதை முழுக்க ஒரு இனம் புரியாத கவர்ச்சி - ஓவியங்களிலும், வசனங்களிலும்! - இப்படியாக 'தற்செயலாய் ஒரு தற்கொலை!' - இக்கதையின் இரண்டாம் பாகம்!
நிர்வாண ஓவியம் மட்டுமன்றி இன்னும் சில விஷயங்கள் கலாசார அதிர்ச்சி அளிக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டு எடிட்டர் விஜயன் அவர்கள் பல இடங்களில் கத்திரி போட்டிருக்கிறார், கதையின் ஜீவன் அந்த கத்திரியால் சற்று துண்டிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை! மனிதர் தமிழ் மெகா தொடர்களை பார்த்ததில்லை போலும் - அந்த கலாசார புரட்சிகளை பார்த்திருந்தால் இதை ஒரு கலாசார அதிர்ச்சியாக எண்ணியிருக்க மாட்டார்!
எடிட்டர் விஜயனிடம் ஒரு கேள்வி: நான்கு வருடம் முன்பு டிசைன் (பிரிண்ட்?) செய்த அட்டை வீணாகக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்த கதையை, சிறிய அளவில், சுமாரான தாளில், கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்தது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா? லார்கோ இதழைப் போன்று A4 சைஸில் முழு வண்ணத்தில் வந்திருந்தால் இந்த இதழ் இன்னும் பெரிய தாக்கத்தை வாசகரிடையே ஏற்படுத்தியிருக்கும்! ஆனால், வரும் இதழ்களில் இந்த குறையை நிச்சயம் தவிர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் பலமாக இருக்கிறது! ஜெரோமுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் - வழக்கமான அதிரடி நாயகர்களுக்கிடையே தென்றலாய் வந்த இளம் ஹீரோ இவர் - நிச்சயம் ரிப் கிரிபியின் இழப்பை ஈடு கட்டுவார்!
உண்டு மயங்கும் ஒரு மந்தகாச மதியத்தில் இதை படிக்கக்கூடாது!.., 'ஈ' அடிக்கும் ஒரு ஈவ்னிங் டைமில் இதை படிக்கக்கூடாது!.., கொசு கடிக்கும் ஒரு கொடுங்குளிர் இரவிலும் இதை படிக்கக்கூடாது! - நிச்சயம் பிடிக்காது! மனம் லேசாய் இருக்கும் ஒரு இளவேனிர்க் காலையில், இதமான சூட்டில் தேநீர் குடித்தவாறு, இரசித்துப் பார்த்துப் பார்த்து படிக்க வேண்டிய காமிக்ஸ் இது! ஒரு வேளை உங்களுக்கு அப்படியும் பிடிக்கவில்லை என்றால் உங்களிடம் ஏதோ இரசனை வேறுபாடு (குறைபாடு?) உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது! ;)
மிஸ்டர் பின் தெரியும்(ரசிகன் அவருக்கு) இவர் யார் என்று தெரியாது படிக்க intresting அவ்வளவாய் வரவில்லை...இதை எங்கு வாங்கினீர் நண்பா எனக்கு தெரியாது அதான் கேட்டேன்....
பதிலளிநீக்குலயன் / முத்து இதழ்களுக்கு சந்தா கட்டியுள்ளேன்! :) இதை மட்டும் வாங்கவேண்டுமானால்:
பதிலளிநீக்குhttp://www.ebay.in/itm/2-x-Muthu-Comics-New-Titles-/221064205013?pt=IN_Books_Magazines&hash=item33787412d5
இளம் வயதினர் இப்பொழுதெல்லாம் காமிக்ஸ் அதிகம் படிப்பதில்லை!
பதிலளிநீக்குலிங்க் கொடுத்தமைக்கு நன்றி! ஓய்வில் அவசியம் பார்க்கவேண்டும்!
நன்றி பகிர்விற்கு!
கிருஷ்ணாலயா இப்பொழுது கிருஷ்ணாலையா ( http://krishnalaya-atchaya.blogspot.com ) முகவரி மாற்றத்துடன். தளத்திற்கு வருகைதந்து கருத்திடுங்கள் தோழரே!
நிச்சயம் பார்க்கிறேன், நன்றி!
நீக்குபோடு ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ஸ்...
பதிலளிநீக்குநன்றாக கூறியிருக்கிறீர்கள் :D
சென்னை பித்தரின் பதிவில் போட்ட அதே டெம்ப்ளேட்டா? :D
நீக்குநண்பரே எனக்கு தெரிந்து நிறை குறை இரண்டையும் கூறுவது உங்கள் பதிவுகளும் பின்னுட்டமும் தான்.
பதிலளிநீக்குஉங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றும் ஒரு வசனம்,
பாடல் எழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் எந்த வகை என்று உங்களுக்கே தெரியும் :)
ஜோக்ஸ் அபார்ட் நீங்கள் ஒரு நல்ல விமர்சகர்.
வாழ்த்துக்கள்.
//நிறை குறை இரண்டையும் கூறுவது உங்கள் பதிவுகளும் பின்னுட்டமும் தான்.//
நீக்கு//குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.//
ஒன்றுக்கொன்று இடிக்கிறதே?! (இதிலும் குற்றம் கண்டுபிடிப்பா?) :) :) :)
நண்பரே, உண்மையில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பதிவிடுவது இல்லை! நீங்கள் முதல் பத்தியில் சொன்னது போல - எனக்கு தவறு என்று தோன்றுவதை தவறு என்று சொல்கிறேன், பிடித்ததை பாராட்டுகிறேன். அவ்வளவுதான்! :)
//ஜோக்ஸ் அபார்ட் நீங்கள் ஒரு நல்ல விமர்சகர்.//
அவ்வளவு பெரிய ரேஞ்சுக்கு நான் இன்னமும் செல்லவில்லை! வாழ்த்துகளுக்கு நன்றி! :)
நல்லதொரு பகிர்வு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (த.ம.ஓ. 3)
பதிலளிநீக்குஓட்டுக்கு நன்றி நண்பரே! நீங்கள் ஒரு காமிக்ஸ் படித்து அதை இங்கே பகிர்ந்தால் இன்னமும் மகிழ்வேன்!
நீக்குMikaum thiramaiyana pathiuu valthukal...
பதிலளிநீக்குthanks buddy!
நீக்குJerom vaithiruppthu cycle enchu than nanum ninaithen...
பதிலளிநீக்குJerom oviyam vankiyathu fremukkaka!
பதிலளிநீக்குAntha fremil oviyathai eduthu vitdu thannudaiya loverin matdi vaithar enchu thonchukirathu...
Unkal pathivai paditha pin meendum kathaiklai badithen enakkum jerom bidikka aarambithu vittar...
பதிலளிநீக்குKoncham theneer koncham comics
பதிலளிநீக்குnallathan irukkum !
Book kaikku vantha piraku ennal udane badikkamal irukka mudiyathe...
Koncham beer..
பதிலளிநீக்குkoncham comics...
Aaka ithu enakku romba pidikkuthu..!
Jerom fremilirunthu oviyathai pirithu vitdathai kavanitheerkaka...
பதிலளிநீக்குநன்றி நண்பரே! இப்போதுதான் நன்கு கவனித்தேன்! பதிவை திருத்தும் செய்து விடுகிறேன்! :)
நீக்குJromin mobedil pedal irukku
பதிலளிநீக்குseyin irukku
enginnai kanom...
அது Moped முன்சக்கரத்தின் மேல் மாட்டப்பட்ட எஞ்சின் நண்பரே! இப்பதிவில் மூன்றாவதாய் இருக்கும் படத்தை பாருங்கள்!
நீக்குKathaiyil enakku piditha katdam
பதிலளிநீக்குjerom vidiya vidiya thanni adithu flat aavathuthan...
Ada nammai pola oru hero[ jeero ]
ஆமாம் சுவையான இடம் அது! :)
நீக்குBasdinin thanthai yar enrda unmaiyai
பதிலளிநீக்குeditar edit
sdithathu sarithan
inke siruvakalum badikka vendum
allava...
I don't agree! kids these days are matured enough to swallow this!
நீக்குKathaiyin mudivu nenchil oru inam puriyatha parathai eardukirathu...
பதிலளிநீக்குEnave jerom i varaverkalam enkira mudivukku nanum vanthullen enpathai solli kondu
பதிலளிநீக்குvadai perukiren
SORRY
vidai perukiren...
நல்ல தீர்ப்பு! :D
நீக்குSila eluthu pilaikalai portharulka...
பதிலளிநீக்கு1. Loverin photovai
2. Siruvarkalum
Aamam athu mobedthan
பதிலளிநீக்குengin munnala irukku....
Innum oru eluthu pilai..!
பதிலளிநீக்கு3. Kavanitheerkala?
Unkalidam ulla palaiya comicskal padri pathivida vendum...
பதிலளிநீக்குwill try
நீக்குComics padri evlavu badithalum alukkathu
பதிலளிநீக்குbalaiya kathaikalai unkal paniyil vimarsanam seithal nanrdaka irukkum...
விமர்சனம், ஏதோ “ஓகே ஓகே” டைரக்டர் ராஜேஷ் ஸ்டைலில் காமெடி கலந்து உள்ளது படிக்க அருமையாக இருக்குது! :) Msakrates சொன்னது போல உங்கள் ஸ்டைலில் பழைய காமிக்ஸ்களை விமர்சனம் செய்தால் ,அந்த கதைகள் பிடிக்காத வாசகர்களும் மீண்டும் விரும்பி படிப்பார்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்கு//உங்கள் ஸ்டைலில் பழைய காமிக்ஸ்களை விமர்சனம் செய்தால் ,அந்த கதைகள் பிடிக்காத வாசகர்களும் மீண்டும் விரும்பி படிப்பார்கள்!//
தயவு செய்து பழைய காமிக்ஸ்கள் எனக்கு அன்பளிப்பாய் தந்து இவ்விமர்சனப் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்! :D :D :D
Jokes apart, will certainly try! :)