அறுவை அப்டேட் - ப்ளேட்பீடியா - ஜூன் 2012

ஒவ்வொரு மாதமும்தான் எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது! ப்ளேட்பீடியா அப்டேட் பதிவு என்றதும் தெறித்து ஓடும் உங்களைப் போல?! :) எழுத ஆரம்பித்ததில் இருந்து, எழுதுவதற்கும் எனக்கும் இடையே ஒரு காதல் - மோதல் உறவு துவங்கிவிட்டது! நிறைய எழுத ஆசை இருந்தாலும், எழுத உட்கார்ந்தால் அப்படி ஒரு அலுப்பு, சலிப்பு! ஆனால் ஓரிரண்டு பத்திகளை தாண்டி விட்டால் விரல்கள் விடாமல் கீபோர்ட்டை தானாய் தட்டுகின்றன! எழுதி முடித்ததும் படித்தால் பிடிப்பது போல்தான் இருக்கிறது - ஆனால், அதையே ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் பயங்கர மொக்கையாக தோன்றுகிறது! கணக்குப்படி பார்த்தால் இது எனது 48-வது பதிவு! இன்னும் ஒரு பதிவை ஒப்பேற்றிவிட்டால், அடுத்த பதிவை 50-ஆவது பதிவு என மார்தட்டிக்கொள்ளலாம்! ஆனால், நிச்சயம் என்னால் முடியாது! மூன்று மாதங்கள் முன் பதிவெழுதத் தொடங்கிய போது - உணர்ச்சி வேகத்தில் தத்துபித்து என்று எதை எதையோ எழுதியாகிவிட்டது - ஆர்வக்கோளாறு! இப்போது அவற்றை படித்தால் சகிக்கவில்லை! அதே நேரத்தில், நான் அனுபவித்து எழுதிய சில பதிவுகளை எப்போது படித்தாலும் அது ஒரு அற்புதமான உணர்வை அளிக்கிறது, மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது, ஆங்காங்கே மாற்றம் செய்யத் தோன்றுகிறது!

மீள்பதிவுகள்:
சரமாரியாக எழுதிக்கொண்டே இருந்து யாரும் படிக்காவிட்டால் என்ன பயன்?! புதிதாக படிக்க வருபவர்கள் 'ப்ளாக் ஆர்கைவ்' சென்று பழைய பதிவுகளை பார்வையிடுவதில்லை! முக்கியமான பழைய பதிவுகள் அவர்களை சென்றடைய ஒரே வழி, அவற்றை மீள்பதிவு செய்வதுதான்! ஆனால், இது ப்ளேட்பீடியாவை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களை எரிச்சலூட்ட வாய்ப்பிருக்கிறது! எனவே, பழைய பதிவுகள் எந்த மாற்றமும் இல்லாமல் மீள்பதிவு செய்யப்பட்டால் அந்த பதிவின் தலைப்பு "(மீள்பதிவு)" என்ற குறிப்புடன் துவங்கும் - ஏற்கனவே படித்த நண்பர்கள் இவற்றை புறக்கணிக்கலாம்! - இது புது வாசகர்களை பெற விரும்பும் ஒரு வழியே அன்றி ஹிட்ஸ் கவுன்ட்டை பதிவு எண்ணிக்கை மூலம் கூட்ட முயற்சிக்கும் குறுக்கு வழியல்ல!

புதிப்பித்த பதிவுகள்:
பழைய பதிவுகளில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டு (அல்லது நீக்கப்பட்டு) அவை புதுப்பிக்கப்பட்டால் (அல்லது மாற்றி அமைக்கப்பட்டால்) - அப்பதிவுகள் புதிய மற்றும் பழைய வாசகர்கள் இருவரையும் சென்றடைய வேண்டும்! அதே நேரம் நெடு நாள் வாசகர்கள் அவற்றை பிரித்து இனம் காணவும் வழி செய்ய வேண்டும்! எனவே, இவ்வாறு மாற்றியமைக்கப்படும் பதிவுகளின் தலைப்புக்கள் "(புதிப்பித்த)" என்ற குறிப்புடன் துவங்கும்!

நீக்கவிருக்கும் பதிவுகள்:
முதல் பத்தியில் குறிப்பிட்டது போல் சில உபயோகமற்ற பதிவுகள் ப்ளேட்பீடியாவில் இருந்து இன்னமும் ஓரிரு நாட்களில் முற்றிலும் நீக்கப்படப் போகின்றன! இந்த முயற்சி இதோடு நில்லாமல் தொடர்ச்சியான ஒன்றாக அமையும், எனவே நீக்கப்படும் பதிவுகளின் விவரங்களை (ரொம்ப முக்கியம்!) காண கீழ் கண்ட பக்கக்தை பாருங்கள்!
டெம்ப்ளேட் டெம்பர்:
ரொம்ப நாளாகவே ப்ளாக் டெம்ப்ளேட் மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் - அதற்கு முக்கிய காரணம், இதற்கு முன்னிருந்த டெம்ப்ளேட் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொண்டது! Threaded comments வசதியும் வேலை செய்யவில்லை! ஒரு வழியாக நிறைய நேரம் செலவழித்து ஜூன் முதல் வாரத்தில் முதல் வேலையாய் புதிய டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்தேன்! (இந்த டெம்ப்ளேட் பிடித்திருக்கிறதா?!) ஆனால், டெம்ப்ளேட் மாற்றுவது ஒரு மொக்கை பிடித்த வேலை, பழைய டெம்ப்ளேட்டில் நீங்கள் பல Widget-கள், Custom Script எல்லாம் போட்டு வைத்திருந்தால் - தொலைந்தீர்கள்! அவற்றை புது டெம்ப்ளேட்டுக்கு இறக்குமதி செய்வதற்குள் மண்டை காய்ந்து விடும்! அப்புறம் Layout டிசைன் செய்ய ஓரிரு மணிகள் பிடிக்கும்! இந்த புதிய டெம்ப்ளேட் வேகமாக லோட் ஆகிறது, ஆனால் எவ்வளவு முயன்றும் Facebook Plugin-கள் வேலை செய்யவில்லை! மறுபடியும், வேறு டெம்ப்ளேட் மாற்றித் தொலைக்க வேண்டுமா என்று எண்ணினாலே டெம்பர் எகிறுகிறது!

(கழுத்தின் மேல்) தொங்கும் ப்ளேடுகள்:
ஆன்லைன் ஷாப்பிங் தொடர் அந்தரத்தில் தொங்குகிறது - சீக்கிரம் முடிக்க வேண்டும்! நான் சிஸ்அட்மின் - ஆக எனது Career -ஐ தொடங்கியது பற்றிய சுயபுராணத் தொடரை ரொம்ப தயக்கத்திற்குப் பிறகே ஆரம்பித்தேன் - ஆனாலும் அது நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது! ரொம்ப நாளாக தொங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு தொடர் பதிவு - காமிக்ஸ் வேட்டை! இதை இந்த மாதம் மீண்டும் கையிலேடுப்பதாய் உத்தேசம்! :) அப்புறம் மழுங்கிய மனிதர்கள் வேறு, கிடப்பில் புழுங்கிக் கொண்டிருக்கிறது! இதற்குத்தான் இப்படி எக்குதப்பாக தொடர் பதிவுகளை ஆரம்பிக்ககூடாது! :) முதலில் ஆரம்பித்ததை முடிக்க வேண்டும்!!!

விடக்கூடாத குறிப்புக்கள்:
சென்ற மாதம் மொத்தம் 14 பதிவுகள், அவற்றில் 8 டெக்னிகல் பதிவுகள் என கிட்டத்தட்ட ப்ளேட்பீடியா டெக்னிகல் ப்ளாக் ஆக மாறவிருந்தது, நல்லவேளை - ஸ்பைடர்மேன் காப்பாற்றி விட்டார்! சோதனை முயற்சியாக, Karbonn Tablet-இன் விடியோ ரிவியூ பதிவுகள் - YouTube-இல் நல்ல வரவேற்பை பெற்றன! Windows Movie Maker மூலம், இந்த வீடியோக்களை  எடிட் செய்தது நல்ல அனுபவம்! ப்ளாக்கர் நண்பன் தளத்தின் விருந்தினர் பக்கத்தில் எழுதிய SEO பதிவும் நல்ல வரவேற்பை பெற்றது, நண்பர் அப்துல் பாஷித்துக்கு நன்றி! இருந்தாலும் நான் மிகவும் இரசித்து எழுதியவை சிஸ்அட்மின் தொடர், சலூனில் சில Sci-Fi சிந்தனைகள் மற்றும் தூர்தர்ஷன் நினைவுகள்! ஆனால், சத்தமில்லாமல் சதம் அடித்தது (மீண்டும்) IRCTC பதிவுதான்! அதற்கு முக்கிய காரணம் எனக்கு இன்னமும் அறிமுகம் இல்லாத நண்பர், மென்பொருள் பிரபுதான்! அவரது பரிந்துரையின் பேரில் - மூத்த (பதிவுலகில்!) பதிவர் கிரி - தனது ரயில் அனுபவப் பதிவில் IRCTC பதிவுக்கான இணைப்பை வழங்கி இருக்கிறார்! நான் எதேச்சையாக IRCTC பதிவின் ஹிட் கவுன்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடுவதைப் கவனித்து Refferal Traffic-ஐ பார்த்த போதுதான் இது தெரிய வந்தது! அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! கடந்த மாத டாப் 10 பதிவுகள் மற்றும் பரிந்துரைத்த தளங்களை கீழே பார்க்கலாம்!





ரிப்போர்ட் கார்ட்:
சென்ற வார தமிழ்மண டாப் 20 லிஸ்டில் ப்ளேட்பீடியா 6-வது இடம் பெற்றிருந்தது! (இதை தெரிவித்த நண்பர் பாஷித்துக்கு நன்றி!) ஆனால் மூன்று வாரத்திற்கும் மேலாக ப்ளேட்பீடியாவின் தமிழ்மண ஆல்டைம் ரேங்க் 1271-ஆக மாறாமல் இருப்பது என்ன மாயம் என்று தெரியவில்லை - அவர்கள் ரேங்கிங் வழிமுறை எப்படி என்று புரியவில்லை ;)  அலெக்ஸா குளோபல் ரேங்கில் நல்ல முன்னேற்றம் (எட்டு லட்சத்து சொச்சம்!). தட்டுதடுமாறி 25000 ஹிட்ஸை தாண்டியுள்ளது! கூகிள் அனலிடிக்ஸ் மூலம் ஆராய்ந்ததில் புதியவர் வருகை அதிகரித்திருப்பது தெரிகிறது!



ப்ளேட்பீடியாவை பின்தொடர்பவர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது! ஜூன் தேர்தல் முடிவுகளை பார்த்தால் Asterix மற்றும் Tintin தமிழில் வந்தால் வரவேற்பு இருக்கும் என தெரிகிறது (எடிட்டர் விஜயனின் கவனத்திற்கு!). ஜூன் மாத அப்டேட் பதிவு ரொம்பவே சீரியஸாக மாறி விட்டது, இல்லையா நண்பர்களே! :) உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி, மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்! :) :) :)

கருத்துகள்

  1. நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பா உங்கள் ப்ளேடு அறுவை தான் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது

    மீள்பதிவுகள்,புதிப்பித்த பதிவுகள் சொன்னது சூப்பர்...

    ரிப்போர்ட் கார்ட் எப்போ கையெழுத்து வாங்க போறீங்க....
    நண்பா Refferal Traffic linkwithin.com என உள்ளதே அது என்ன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! ஒவ்வொரு பதிவின் அடியிலும், சின்ன சின்ன பெட்டிகளாக - "You might also like:" என்ற பகுதி உள்ளதல்லவா? அதுதான் LinkWithin! அதாவது உங்கள் ப்ளாக்கில் உள்ள இதர பதிவுகளின் preview காட்டும் வசதி! இதன் மூலம் புது வாசகர்கள் பழைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்! :) http://www.linkwithin.com/-க்கு சென்று உங்கள் வலைப்பூவை பதிவு செய்து இந்த Widget-ஐ பெறலாம்! :)

      நீக்கு
    2. நன்றி நண்பா அடுத்த ஆன்லைன் ஷாப்பிங் EMI பத்தி கொஞ்சம் சொல்லவும்...

      நீக்கு
    3. EMI - இதைப்பற்றி நான் சொல்ல அதிகம் ஏதும் இல்லை நண்பரே! அது வங்கிகள் தரும் ஒரு Offer! சில தளங்களில் இந்த Offer இருக்கும், சிலதில் இருக்காது! Zero interest என்று சொல்லிவிட்டு வேறு வழிகளில் ஈடு கட்டிவிடுவார்கள்! :)

      நீக்கு
    4. தேங்க்ஸ் நண்பா இருந்தாலும் கொஞ்சம்மாய் ஒரு மூலையில் இதை பற்றி எழுதவும் கண்டிப்பா எழுதணும்....TEMPLATE நல்லா தான் இருக்கு வேணும் என்றால் ஒரு POLL வைத்து நண்பர்களிடம் கேட்டு பாருங்க TEMPLATE மாற்றலம்மா வேண்டாம்மா என்று....ப்ளேடு தொடர்ந்து போட்டு கொண்டே இருங்கள் விட்டு விடாதிங்க....

      நீக்கு
  3. வாவ் சூப்பர்

    தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சேவைகளை ;-)//
      உங்கள் கண்ணடிப்புக்குப் பின் 'அறுவைகளை' என்ற சொல் மறைந்திருப்பது புரிகிறது! :D

      நீக்கு
  4. நல்லதொரு வளர்ச்சி நண்பா!(நீங்கள் அல்ல, உங்கள் ப்ளாக்) மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

    பதிவுகளை நீக்க வேண்டாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பா! பதிவுகளை நீக்குவது, மிகுந்த யோசனைக்கு அப்புறம் எடுத்த முடிவு! :) அப்படியே பார்த்தாலும் அவற்றில் உபயோகமானவை என்று ஒன்றும் இல்லையே!

      நீக்கு
    2. முதல் பதிவு

      இது ஒரு நினைவு சின்னம் மாதிரி. பல பதிவுகள் எழுதி முடித்தப் பிறகு முதல் பதிவை படிக்கும் போது "இதை நாமா எழுதினோம்?" என்று எண்ணம் வரும். அதை மிஸ் பண்ணிடாதீங்க...

      அராபிக் அம்மா - அழகான அன்பு!

      அழகிய வீடியோ. நீக்குவது உங்கள் விருப்பம்.

      நீக்கு
    3. // முதல் பதிவு//
      எனக்கும் அந்த குழப்பம் இருந்தது - இப்போது தெளிவாக உள்ளேன். முதல் பதிவு கட்டாயம் நீக்கப்படும்! அதாவது நீக்கப்படும் பதிவுகள் லிஸ்டில் இருந்து! :)

      //அராபிக் அம்மா - அழகான அன்பு!//
      இது மீண்டும் மற்றொரு பதிவின் ஒரு பகுதியாக வெளிவரும்! :) ஒரு Youtube வீடியோவிற்காக ஒரு பதிவை டெடிகேட் செய்ய விருப்பம் இல்லாததே காரணம்!

      நன்றி நண்பரே!

      நீக்கு
  5. வளருங்கள் வளருங்கள் வாழ்த்துக்கள்(இதை நம்பியார் பாணில படிங்க:))

    (26483 HITS. முடியல:))

    //வேறு டெம்ப்ளேட் மாற்றித் தொலைக்க வேண்டுமா என்று எண்ணினாலே டெம்பர் எகிறுகிறது!// சரியான இம்சை புடிச்ச வேலை பாஸ்

    பதிலளிநீக்கு
  6. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia