ட்விதைகள் - பார்த்தவுடன் புரிந்திருக்கும், ட்விட்டர் கவிதைகள்!
கிட்டத்தட்ட 17 - 18 வருடங்களுக்கு முன் ஒரு சில அமெச்சூர் கவிதைகளை
டைரியில் எழுதியிருக்கிறேன்! அதன் பிறகு அவ்வப்போது கவித்துவமான வரிகள்
மனதில் ஓடும், அடுத்த நாளே மறந்து விடும் - நிறைய பேருக்கு அப்படித்தான் என
நினைக்கிறேன்! ப்ளாக் எழுதுவது என்று ஆரம்பித்ததும், இழந்த கவிதைகள் மனதை
இடறிக்கொண்டே இருந்தன! மனதில் தோன்றும் வரிகளை ட்விட்டரில் கொட்டி, பத்து
பதினைந்து சேர்ந்ததும் ஒன்றாய் ஒட்டி பதிவாய் வெளியிடும் வெட்டி
முயற்சியின் வெளிப்பாடு இது! தூக்கம் வராத நேற்றிரவின் துக்க வரிகள் இவை!
;) கோர்வையான எண்ணங்கள் போலன்றி பிய்த்துப்போட்ட பரோட்டாவாய்(!) என் மனதின்
மேலோட்டமாய் களையெடுத்த காதல் பிதற்றல்கள்! அத்தனையும் அக்மார்க்
அமெச்சூர் - தைரியமிருப்பவர்கள் வாசிக்கலாம்! :) அதிதைரியசாலிகள்
ட்விட்டரிலும் என்னைத் தொடரலாம்! :D
♂ ♥ ♀
பல மணி பேசிக் களைத்த அவள்
சில நொடி நான் பேசவும்
நாளை பேசலாம் என கைபேசி துண்டித்தாள்!
நாளையும் பேசுவாள், நானும் கேட்பேன்...
♂ ♥ ♀
என்றும் இல்லாத இனிமை
என்னிடம் இன்று காட்டுகிறாள்
கடைவீதியில் காரோட்டுவேன்
நாளை நான் அவளுக்காய்!
கடைவீதியில் காரோட்டுவேன்
நாளை நான் அவளுக்காய்!
♂ ♥ ♀
நான் நேரம் தவறினால் நெருப்பாகும் அவளுக்கு
அவள் நேரம் தவறுகையில்
என் புன்னகைத்த முகம் ஏனோ உறுத்துவதில்லை...
அவள் நேரம் தவறுகையில்
என் புன்னகைத்த முகம் ஏனோ உறுத்துவதில்லை...
♂ ♥ ♀
காமமுடன் அவள் உடலை நான் வர்ணிக்க அனுமதிக்கும்
ஒரு சில போதை நிமிடங்களுக்காய்
நாள் முழுதும் பொறுத்துக்கொள்வேன் அவள் பிதற்றல்களை.
ஒரு சில போதை நிமிடங்களுக்காய்
நாள் முழுதும் பொறுத்துக்கொள்வேன் அவள் பிதற்றல்களை.
♂ ♥ ♀
இறுகப் பற்றும் அவள் மேல் உடையின் இறுக்கம்
என் மீதும் பற்றிக்கொண்டது
சற்றே இடம் மாறி...
என் மீதும் பற்றிக்கொண்டது
சற்றே இடம் மாறி...
♂ ♥ ♀
பிரிவுக்கு சற்று முன் வெடித்த வாக்குவாதத்தில்
அவள் முற்றிலும் புரிந்திருப்பாள்
நிஜமான என்னை!
அவள் முற்றிலும் புரிந்திருப்பாள்
நிஜமான என்னை!
♂ ♥ ♀
கோபத்தில் வீசி எறிந்த கைபேசிகள் சொல்லும்
எங்கள் பிரிவுகளின் எண்ணிகையை...
தெறித்துப் பிரிந்த பாகங்கள் சொல்லும்
என் மனத்துண்டுகளின் எண்ணிக்கையை...!
எங்கள் பிரிவுகளின் எண்ணிகையை...
தெறித்துப் பிரிந்த பாகங்கள் சொல்லும்
என் மனத்துண்டுகளின் எண்ணிக்கையை...!
♂ ♥ ♀
நான் நீண்ட நேரம் பேச அவள் அனுமதிக்கும் கணங்கள்
பிரிவுக்குப் பின்னான எனது கெஞ்சல்கள்...
பிரிவுக்குப் பின்னான எனது கெஞ்சல்கள்...
♂ ♥ ♀
மீண்டும் இணைந்தாலும்
பிரிவுக்கு முன்னான வாக்குவாதங்கள்
அவள் மனதில் அடுத்த பிரிவுக்கு
ஆழமாய் அஸ்திவாரம் அமைத்திருக்கும்!
பிரிவுக்கு முன்னான வாக்குவாதங்கள்
அவள் மனதில் அடுத்த பிரிவுக்கு
ஆழமாய் அஸ்திவாரம் அமைத்திருக்கும்!
♂ ♥ ♀
நான் மட்டும் எப்படி மறக்கின்றேன்
அவள் அனலாய் பேசியதை
கோர்வையாக ஞாபகத்தில் இருத்தி பட்டியலிடுகிறாள்
என் சுடு சொற்களை!
அவள் அனலாய் பேசியதை
கோர்வையாக ஞாபகத்தில் இருத்தி பட்டியலிடுகிறாள்
என் சுடு சொற்களை!
இத்தனை பிதற்றல்களா...? நல்ல வரிகள்...(TM 2)
பதிலளிநீக்குபொறுமையாய் படித்ததிற்கு நன்றி நண்பரே! :)
நீக்குArumaiyo arumai...!
பதிலளிநீக்குneenka kandippa love pannirupinka...
செம்பு அடிவாங்கியிருக்கு என்பதை சரியாய் கண்டுபிடித்த இவருக்கு 100 பொற்கிழிகள் வழங்க ஆணையிடுகிறேன்! :D :D :D
நீக்கு:) :) :) யாருப்பா அந்த சிம்பு?! ;)
நீக்கு//பல மணி பேசிக் களைத்த அவள்
பதிலளிநீக்குசில நொடி நான் பேசவும்
நாளை பேசலாம் என கைபேசி துண்டித்தாள்!
நாளையும் பேசுவாள், நானும் கேட்பேன்...//
இதே தான் இதான் எல்லா இடத்துலயும் நடக்குது போல
அதேதான்! :)
நீக்குநீங்க பெரிய கீச்சர் போல ஆனா ட்விட்டர் உங்க லிங்க் மட்டுமே ட்வீட் செய்யுரிங்க இப்போ ஏதொ லைட்டா ட்வீட் செய்து இருகிங்க.....யாரையாவது follow பண்ணுக.....
பதிலளிநீக்கு:) :) :) பண்ணணும்! யாரை ஃபாலோ பண்ணலாம்? பூனம் பாண்டே?!
நீக்குநல்ல வந்துள்ளதே தொடரலாம்!
பதிலளிநீக்குஉங்களின் அடுத்த 50 ஆவது சிறப்பு பதிவு நன்றாக அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
தேவையற்றதாய் எனக்கு தோன்றிய சில பதிவுகளை நீக்கி விட்ட காரணத்தினால், 50-வது பதிவுக்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது! :)
நீக்குபதிவு நல்லதோ மொக்கையோ போட்டது போட்டதுதான். இந்த டகால்டிகா டிகால்டி வேலையெல்லாம் நடக்காது ...
நீக்கு:) :) :)
நீக்குமிகவும் தைரியமான கவிதைகள்... வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு:)
நீக்குஅருமை.. தொடருங்கள்
பதிலளிநீக்குநன்றி ராஜா! இது ஒரு பழைய பதிவுதான் :) அதற்கப்புறம் கவிதை எழுதும் தைரியம் வரவில்லை! :D
நீக்குகொஞ்சம் கவிதை வாசனை அடிக்குது..
பதிலளிநீக்குஆனா சரியான கிக்குலே எழுதுன மாதிரி தெரியுது.. நடத்துங்க..
எல்லாம் பொண்ணுங்க பின்னாடி உட்ட கிக்குதான் (உதை)! :D
நீக்கு