பெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு!

சென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது! அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது! கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது! ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம்! இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான(!) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே!!! :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு!'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது! ஹலோ, நில்லுங்க! காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல?! எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு?!

இடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில் அன்புக்குரிய லயன் / முத்து காமிக்ஸ் எடிட்டர் மற்றும் காமிக்ஸ் வலைப்பதிவர் திரு.S.விஜயன்!


திரு.விஜயனுடைய வலைப்பூவுக்கு ஒருதரம் சென்று பாருங்கள் அவருக்கு உள்ள ரசிகப் பட்டாளம் எத்தகையது என புரியும்! ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டங்கள் இருநூறு, முன்னூறைத் தாண்டும்! துரதிர்ஷ்டவசமாக தமிழ் மண நிர்வாகிகளுக்கு இவரது வலைப்பூவை திரட்டியில் இணைக்க மனம் வரவில்லை! என்ன காரணமோ?! வலைப்பூ துவக்கிய சில மாதங்களில் ஹிட்ஸ் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது - எந்த ஒரு திரட்டிகளின் துணையும் இன்றி! ஆச்சரியமான விஷயம் அல்லவா?! காமிக்ஸ்சை விரும்பாதவர்களும் அவர் பதிவுகளை ஒரு தரம் படித்துப் பாருங்கள் - அவர் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கும்!

கீழே, இடம் இருந்து வலம்: நான், பதிவர்கள் காமிக்காலாஜி ரஃபீக், முதலைப்பட்டாளம் கலீல் மற்றும் ஒரு தமிழ் காமிக்ஸ் வாசக நண்பர் திரு.பழனிவேலு.


ஃபேஸ்புக்கில் கும்மி அடித்ததைத் தவிர நண்பர் ரஃபிக்குடன் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை, இரண்டு நாட்கள் முன்தான் போனில் பேசினேன். எனினும் அவர் வலைப்பூவுக்கு நான் நீண்ட நாள் வாசகன். அழகான ஆங்கிலத்தில் தமிழ் காமிக்ஸ் பற்றிய தகவல்களை, தமிழகம் தாண்டி எடுத்துச் சென்ற பிரபல பதிவர் இவர். கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இவர் பதிவுகள் ஏதும் இடாதது வருத்தமான விஷயம். ஆனால், இந்நிகழ்வை முன்னிட்டு மீண்டும் பதிவிட தொடங்கியிருக்கிறார்! அவர் கழுத்தில் தொங்கும் "மீடியா" ஐடென்டிடி கார்டை கவனியுங்கள் - அவரும், அவருடைய வலைப்பூவும் அந்தளவுக்கு இந்திய காமிக்ஸ் வட்டாரத்தில் பிரபலம்!

முதலைப்பட்டாளம் கலீல் - இவருடனும் எனக்கு தொடர்பில்லை! இவரை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது, அன்பாக பேசினார். இவருடைய வலைப்பூவில் காமிக்ஸ் குறித்த பல அரிய தகவல்கள் சிதறிக் கிடக்கும்! எடிட்டர் இவருடைய காமிக்ஸ் சேகரிப்பு பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டார்!

கீழ்க்கண்ட படத்தில் இருப்பவர் திரு. ஸ்ரீராம்! விழா நாயகன்! அட்டகாசமான டெக்ஸ் மற்றும் டைகர் படம் பொறித்த டிஷர்ட் அணிந்து வந்திருந்தார். கோபாலுடன் எனக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு இந்த புண்ணியவான்தான் காரணமாம்! கும்மலாம் என நினைத்தேன், ஆனால் அவரின் அழகுச் சிரிப்பில் அந்த எண்ணம் பறந்து போனது! :) மிகவும் நட்புடன் பேசினார்! மனிதரும் ப்ளாக் வைத்து நடத்துகிறார் - ஆனால் கறார் பேர்வழி. யாருக்கும் பின்னூட்டத்தில் பதில் சொல்ல மாட்டார். ;)


மேலும் ஒரு படம்!


கடைசியாக வாசக நண்பர் பிரசன்னாவுடன் திரு.ரஃபிக். இடதில், ரஃபிக் - வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் வாங்கிய ஆதாரத்துடன்! ;)


மொத்தத்தில் காமிக்ஸ் ஜாம்பவான் பதிவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது! நேரம் கிடைக்காததால் சிறிய பதிவாக இடுகிறேன் மன்னிக்கவும். அடுத்த பதிவு இன்று மாலையில்! :)

காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்: 
Comic Con Express 2012 @ Bangalore

கருத்துகள்

  1. பாத்துட்டேன்... பாத்துட்டேன்... தலையோட போட்டோவை பாத்துட்டேன்...

    :) :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனிச்சீங்களா சகோ, இந்த இருட்டிலும் ப்ளேட் என்னமா எம்.ஜி.ஆர் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுராருன்னு!

      நீக்கு
    2. அட நானும் பார்த்துட்டேன்..

      நீக்கு
    3. @ Abdul:
      தலைய மட்டும்தான் பார்த்தீங்களா? ஃபுல் போட்டோ பாக்கலயா?! ;)

      @ History:
      //தகதகன்னு மின்னுராருன்னு// தல மேல 1000 வாட்ஸ் பல்பு எரிஞ்சா தகரம் கூட மின்னும்! ;)

      @ Harry:
      //அட நானும் பார்த்துட்டேன்.. //
      நீங்க என்ன பார்த்தீங்க?! பின்னாடி யாராவது ஃபிகரையா?! :)

      நீக்கு
    4. @Karthik
      //தலைய மட்டும்தான் பார்த்தீங்களா? ஃபுல் போட்டோ பாக்கலயா?!//

      நீங்க பெங்களூர்ல இருப்பதால் தமிழ் மறந்துடுச்சு போல..

      //தலையோட போட்டோவை பாத்துட்டேன்//
      தலையோட = தலையுடன்

      தலையுடன் போட்டோ பார்த்தேன் என்று சொன்னேன்.

      #சமாளிப்போம்ல!

      நீக்கு
    5. முடியல! :) ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க!

      நீக்கு
    6. எல்லாம் ப்ளேட்பீடியான்னு ஒரு ப்ளாக் வந்ததில் இருந்து தான்...

      :) :) :)

      நீக்கு
    7. //முடியல! :) ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க!//

      ஹி ஹி.. ஆமா நண்பா.. பாசித் இப்போ ரொம்ப குசும்பு புடிச்ச ஆளா மாறிட்டு வாராரு..

      நீக்கு
    8. @ Karthik Somalinga
      //
      @ Harry:
      அட நானும் பார்த்துட்டேன்..
      ---
      நீங்க என்ன பார்த்தீங்க?! பின்னாடி யாராவது ஃபிகரையா?! :)
      //

      no adult comments plz, we are just 13!

      நீக்கு
    9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    10. @ Karthik Somalinga

      //தலையோட போட்டோவை பாத்துட்டேன்//

      இது உருவக அணியை உள்ளடக்கி கூறப்பட்ட கருத்துரை ஆகும்! கடல் கடந்து வசித்தாலும் சகோ.பாஸித் அவர்களின் தமிழ் பற்று என்னை சிலாகிக்க வைக்கிறது! ஆனால் இந்தியாவில் இருந்தே தாங்கள் தமிழை மறந்தது சற்று வேதனை அளிப்பதாக உள்ளது!!

      உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும்!

      #கருத்தில் உதவி - விக்கி!

      நீக்கு
    11. தடம் மாறிய சுவடுகள் - தமிழ் பேராசிரியராக மாறிய வரலாற்று ஆசிரியர்! :D

      நீக்கு
    12. நாங்கெல்லாம் அந்த காலத்திலேயே தமிழ்ல 100-க்கு 114 மார்க் எடுத்தவங்களாக்கும்..

      #இப்போவாவது நம்புறீங்களா நான் ஸ்கூல் போயிருப்பேன்னு! :)

      நீக்கு
    13. //கருத்தில் உதவி - விக்கி!//

      ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு

      நீக்கு
    14. ஏதோ அணி, அணி னு சொல்றீங்களே! கிரிக்கெட் அணியா? இல்லை ஃபுட்பால் அணியா?

      ஓ! நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணி கம்மென்ட் போட்டீங்களா? சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி நண்பா......!!!

      :D :D :D

      நீக்கு
  2. Comic con mudinthathum
    lion stal la
    attai postarkalai kettu vankunka ....

    பதிலளிநீக்கு
  3. நேற்று இரவு 12 .10 வரை காத்திருந்தேன்,பதிவிடுவதாக கூறி ஏமாற்றி விட்டீர்கள்,ஆனால் இப்போது பார்த்தால் அற்புதம் பிரபல வலையுலக நண்பர்களையும் காட்டி விட்டீர்கள்,முதலில் ஆசிரியருடன் நிற்கும் தங்கள் புகை படத்தை பார்த்து டைரெக்டர் சங்கர் என நினைத்தேன், வலையுலக பிரபலங்களை காட்டியதற்கு மேலும் நன்றிகள்,குழப்பிய நண்பரா இவர் என்னவொரு அமைதி,ம்ம்ம்மம்மம்ம்ம்ம் .உங்கள் முகத்தை பார்த்தால் நெருங்கி பழகிய நபர் போன்ற உணர்வு ,பார்த்து யாரேனும் மீண்டும் ..........நான் அவன் இல்லை என உங்களை புலம்ப வைத்து விட போகிறார்கள் ...........சிங்கத்தை தங்கள் அருளால் தரிசித்து விட்டேன் ,நன்றி............மேலும் அடுத்த தங்கள் தொகுப்பு மற்றும் அந்த அற்புதமான விளம்பரங்களின் படங்களுக்காக தவமிருக்க போகும்.............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும், நான் ஒரு குடும்பஸ்தன்! ;) இன்று இன்னொரு பதிவு நிச்சயம்! :)

      //டைரெக்டர் சங்கர்// :) :) :) அடுத்த ஒரு பதிவில் மிஷ்கின் வருவார் ;)

      //குழப்பிய நண்பரா இவர் // சரியான கில்லாடி சகோ அவர்! ;) ஆனால் சிரிப்பு சான்சே இல்லை! :D

      //யாரேனும் மீண்டும் ..........நான் அவன் இல்லை என உங்களை புலம்ப வைத்து விட போகிறார்கள் // மறுபடியும் மொதல்ல இருந்தா?!

      //தங்கள் அருளால்// உண்டியல்ல ஏதாவது போட்டுப் போங்க! :D

      நீக்கு
  4. அருமையான அறிமுகங்கள்
    எப்படி இத்தனை நாள் இந்தப் பதிவுகளைப்
    படிக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! பெருமளவில் கவனிக்கபடாதவர்களில் காமிக்ஸ் பதிவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்! அவர்கள் தமிழ்மணத்தில் இணையாதது ஒரு காரணம்! ஆதரவுக்கு மிக்க நன்றி சார்! :)

      நீக்கு
  5. அனைத்துப் பதிவர்களின் உண்மை முகங்களை (ஒவ்வொருத்தரும் காமிக்ஸ் நாயகர்கள் முகம் வைத்திருப்பதால்) பார்த்ததில் மகிழ்ச்சி. இன்னொரு மகிழ்ச்சி, எல்லாரும் என்னை விட வயதானவர்களாக இருப்பது :-).

    ரஃபீக் Wild West Special வாங்கிய ஆதாரம் மிகவும் முக்கியமான நிகழ்வு. பிற்காலத்தில் இது முக்கியத்துவம் பெறும் என்பது என் கணிப்பு..

    மறந்துவிடாதீர்கள்.. மறந்தும் இருந்துவிடாதீர்கள் (க்ளோஸப் போஸ்ட் :) )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்மை முகங்களை// இதை விட கொடூரமாக இருக்கும் - இது சும்மா மேக்கப்பு! :D

      //ரஃபீக் Wild West Special வாங்கிய ஆதாரம் மிகவும் முக்கியமான நிகழ்வு//
      :) :) :)

      நீக்கு
  6. தமிழ்மணம் எடிட்டர் ப்ளாக்கை ஒரு கம்பெனியின் Official Page ஆக நினைக்கின்றது போலும். அதனால் தான் இணைக்க மறுக்கிறார்கள் என நினைக்கின்றேன்.

    உங்கள் தளத்திற்கு வரும் அனைவரும், கண்டிப்பாக எடிட்டரின் ப்ளாக்கினைப் பார்ப்பார்கள். அதுவே போதும் என நினைக்கின்றேன்.

    மேலும், காமிக்ஸ் காதலை உண்டாக்குவது அவ்வளவு எளிதல்ல. இந்த Wild West Special இரண்டு கதைகளையும் படித்து முடித்தபின்னர், காமிக்ஸ் வாசகனாக இருப்பதற்கு பெருமையாக இருக்கின்றது.

    இரண்டு கதைகளும் படித்து முடித்தபின், காமிக்ஸ் படிக்காதவர்கள் அவர்களின் வாழ்வில் மிக அழகான ஒரு ரசிப்புத்தன்மையை இழக்கிறார்கள் என்ற எண்ணமே மிஞ்சியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Official Page ஆக நினைக்கின்றது போலும்// may be! ஆனால் மற்ற சில பதிவர்களின் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது! உதாரணம் கிருஷ்ணா!

      //உங்கள் தளத்திற்கு வரும் அனைவரும், கண்டிப்பாக எடிட்டரின் ப்ளாக்கினைப் பார்ப்பார்கள்.// அது நடந்தால் மகிழ்ச்சியே!

      //காமிக்ஸ் வாசகனாக இருப்பதற்கு பெருமையாக இருக்கின்றது// true!

      //காமிக்ஸ் படிக்காதவர்கள் அவர்களின் வாழ்வில் மிக அழகான ஒரு ரசிப்புத்தன்மையை இழக்கிறார்கள் // very true!

      நீக்கு
    2. //Official Page ஆக நினைக்கின்றது போலும்//
      அப்படி தான் நினைக்கிறேன்.

      //சில பதிவர்களின் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது! உதாரணம் கிருஷ்ணா!//

      காமிக்ஸ் தளங்கள் என்றில்லை, ஏனைய பிற புதிய தளங்களையும் தற்போது தமிழ்மணம் அனுமதிக்கவில்லை. பல தளங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளது, குட்டி ப்ளேட் உள்பட.


      http://www.tamilmanam.net/user_blog_status.php

      நீக்கு
    3. அப்பட்டமான உண்மை ,கண்டிப்பாக நாம் பெருமைப்படலாம் ,நண்பர்களே .............

      நீக்கு
  7. nanber karthik averkaluku,ungal blog i arambathil irunthu padithu varugiren.anal nan MOBILE il kanbathal comments iduvathili.virivel ungalidem W.W.spl in vimirsanathi edirparkiren.nandri.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பகிர்வு! காமிக்ஸ் ரசிகர்கள் இந்த ப்ளாக்கை முன்னிறுத்துவார்கள் என்று தமிழ் மணம் உணர்ந்தால் சரி!

    இன்று என் தளத்தில்
    ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
    நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! உங்களை எடிட்டரின் ப்ளாகில் பல பேர் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்! கவனம்! ;) பின்னூட்டம் போட்ட பின்பு வரும் பதில்களை நீங்கள் பார்ப்பதில்லை போலும்! :D

      நீக்கு
    2. இன்று அட்ராசக்க வலைப்பதிவில் நண்பர் எஸ். சுரேஷ் ஒரு கமெண்ட் போட்டார் முக்கியமாக "இன்று என் தளத்தில்" என்பதே இல்லாமல் ....

      கார்த்தி என்ன பண்ணுனீங்க .... :)

      நீக்கு
  9. ஹாய் கார்த்திக் ,போட்டோ ல நல்லா இருக்கீங்க , கலீல் ,ரபிக் , அவர்கள் ப்ளாக் ல் தான் அறிமுகம் ,
    நீங்க அவர்களோட போட்டோ போட்டு அமர்களபடுத்திவிட்டீங்க.
    காமிக்ஸ் con ல் நம்ப தமிழ் காமிக்ஸ் வரவேற்பு எப்படி இருந்தது ,next நீங்க விஜயன் சார் கிட்ட காமிக்ஸ் சம்பந்தமா என்ன பேசிகிட்டீங்க என்று அடுத்த பதிவில் விரிவாக சொன்னால் நன்று .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! வரும் பதிவுகளில் அது பற்றி எழுதுவேன்! :)

      நீக்கு
  10. மிக அருமையான பதிவு கார்த்தி.

    நாங்கள் பெங்களூர் வர முடியாத குறையை நீங்கள் நிவர்த்தி செய்து விட்டீர்கள்.

    நான் உங்களது மாமனார் ஊருக்கு இந்த வாரம் சென்று விட்டதால் என்னால் அங்கு வரமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களது மாமனார் ஊருக்கு இந்த வாரம் சென்று விட்டதால்// :) :) :)

      நீக்கு
  11. எல்லா புகைப்படங்களும் பிரமாதமாக இருக்கின்றன! அடி ஆத்தி.. நான் இம்புட்டு அழகாவா இருக்கேன்...? ரொம்ப நன்றி கார்த்திக் சார் :-)

    By the way, எல்லாவற்றையும் ஒரு பென் டிரைவிலோ அல்லது ஒரு DVDயிலோ காப்பி செய்து தரமுடியுமா? I can come and pick it up from your home if you agree :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல (டைப்ப?!) மறந்துவிட்டேன்!! இரண்டாவது புகைப்படத்தில் இருப்பவர் பழனிச்சாமி அல்ல, பழனிவேலு :-)

      நீக்கு
    2. நன்றி பிரசன்னா, விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, விரைவில் மீண்டும் சந்திக்கலாம்! உங்களுக்கு அவசரத் தேவையெனில் ஈமெயில் முகவரியைப் பகிரவும்!

      //பழனிச்சாமி அல்ல, பழனிவேலு :-)//
      thanks! :) have corrected it...

      நீக்கு
    3. அவசரமெல்லாம் ஒன்றுமில்லை சார்.. தங்களுக்கு எப்போது முடிகிறதோ அப்போது சொல்லுங்கள் போதும். என்னிடம் அதிவேக இணைய இணைப்பு இல்லை, ஆதலால் ஈமெயிலில் பதிவிறக்கம் செய்ய இயலாது.. ஆபிசில் பதிவிறக்கம் செய்தால் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் :-(

      BTW, என்னுடைய ஈமெயில் முகவரி prasanna29(at)gmail(dot)com :-)

      நீக்கு
  12. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே. மறக்க முடியாத இனிய நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! :)

      நீக்கு
  13. //கீழ்க்கண்ட படத்தில் இருப்பவர் திரு. ஸ்ரீராம்! விழா நாயகன்!//

    நண்பா மிகவும் பெரிதாக பேசி விட்டீர் நான் எதோ டெக்ஸ் மீது உள்ள பிரியத்தால் அப்படி வந்தேன் விழா நாயகன் என்றும் விஜயன் சார் தான்..

    இப்போது தான் நான் நமது wild west special இதழினை பற்றியும் நமது காமிக் காண் பற்றிய பதிவும் இட்டு முடித்தேன்..

    Will try to reply to all the comments as much as possible please bear with me as sometimes i am unable to check things up.

    yours
    Shriram.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாயகர்கள் படத்துடன் வலம் வந்த நாயகர் நீங்கள் மட்டும்தானே?! :)

      //இப்போது தான் நான் நமது wild west special இதழினை பற்றியும் நமது காமிக் காண் பற்றிய பதிவும் இட்டு முடித்தேன்..//
      சூப்பர், அங்கே போய் படித்து பின்னூட்டம் இடுகிறேன்!

      //Will try to reply to all the comments as much as possible.//
      lets see! ;) whether you reply or not is secondary - but don't stop posting wonderful Comic posts in your own style! :)

      நீக்கு
    2. //பதிவும் இட்டு முடித்தேன்//
      and you forgot to post it?! ;)

      நீக்கு
  14. (காமிக்ஸ்சை விரும்பாதவர்களும் அவர் பதிவுகளை ஒரு தரம் படித்துப் பாருங்கள் - அவர் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கும்!)

    நூறு சதவீதம் உண்மை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia