நான் எடுத்த முதல் கத்துக்குட்டி வீடியோ பேட்டியும், மிஷ்கினின் போட்டோவும்!

பக்காவாக பேட்டி எடுக்க நான் ஒன்றும் பத்திரிக்கை நிருபர் இல்லையே?! கேமராவுக்கு முன் இருப்பவர்களுக்குதான் பதட்டம் இருக்கும் என்று நான் நினைத்திருந்தது தவிடுபொடியான சம்பவம் சனிக்கிழமை நடந்தேறியது! :) முதலில் இந்த மூன்று நிமிடப் வீடியோ பேட்டியைப் பாருங்கள் - பிறகு பேசிக்கொள்ளலாம்! :)


உண்மையில் முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு. S.விஜயனை பேட்டி காண வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவர் வலைப்பூ வாசகர்களுக்காக பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. அதனாலேயே எந்த ஒரு முன்னேற்ப்பாடுடனும்  செல்லவில்லை. என்ன பேச வேண்டும் என்று முடிவெடுக்காமலேயே எடுத்த சொதப்பலான கத்துக்குட்டி பேட்டி இது! :) அவர் சரளமாக பேசப் பேச என்னுள் ஒரே குழப்பம். அடுத்து என்ன கேட்பது என்ற கவலையிலேயே அவர் பேசுவதை கவனிக்க முடியாமல் ரைட்டு, ரைட்டு என்று தடுமாறிக்கொண்டிருந்தேன்! கடைசியாக கேட்க வேண்டிய கேள்வியை (வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?), பேட்டியின் நடுவில் கேட்ட முதல் ஆள் நானாய்த்தான் இருக்கும்! ;) தயக்கமின்றி மிகவும் உற்சாகத்துடன் பேசினார், அவருக்கு தமிழ் வலைப்பூ வாசகர்கள் சார்பாக ஒரு பெரிய நன்றி! :)

இந்த குட்டி பேட்டியைத் தவிர விஜயன் அவர்களிடம் பெரிதாக ஏதும் பேசவில்லை! 'விழாவில் கலந்து கொண்டிருக்கும் மற்ற பதிப்பகங்களின், இந்திய காமிக்ஸ் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவது சாத்தியமா?' என்று கேட்டேன்! 'வெளிநாட்டு பதிப்பகங்களிடம் வேண்டுமானால் எளிதில் பேசி படைப்புகளை வாங்கி விடலாம், உள்ளூர் படைப்புகளை வெளியிடும் பதிப்பகங்களோ முகம் கொடுத்துப் பேசக் கூட தயங்குகின்றன...' என்று கருத்து தெரிவித்தார். எனக்கென்னவோ அவர் மனது வைத்து முயற்சித்தால் அது நடக்கும் என்றே தோன்றுகிறது! விழாவில் நான் வாங்கிய, இந்தியாவில் தயாரான சில காமிக்ஸ்களின் ஆர்ட் வொர்க் அவளவு பிரமாதமாக இருக்கிறது! நம் நாட்டுப் படைப்புகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!

விஜயனை சந்திப்பது இது இரண்டாவது தடவை. 2007-இல் சந்தித்தபோது 'கொஞ்சம் சீரியஸான மனிதரோ?' என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதென்னவோ உண்மைதான் - அந்த பிம்பம் இந்த கண்காட்சியில் கலைந்தது, வாசகர்கள் அனைவரிடமும் பாரபட்சமின்றி உற்சாகத்துடன் பேசினார். அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொன்னார். அவரின் வலைப்பூவில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள்தான், சொல்லப்பட்ட பதில்கள்தான் - எனவே அவற்றை இங்கே எழுதி போரடிக்க விரும்பவில்லை! ;) சிறிது நேரம் கூட அமராமல் முழுக்க முழுக்க நின்று கொண்டே வாசகர்களிடம் அயராமல் பேசி கொண்டிருந்தார்!

நான் கிளம்பும் போது, 'கருத்துக்கள், விமர்சனங்கள் என்ற பெயரில் குறை சொல்லி எழுதி உங்களை கடுப்பேற்றி வருவதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்' என்று அன்புடன் கேட்டுக்கொண்டேன்! :) பெரிய புன்னகையுடன், உறுதியாக கை குலுக்கியவாறே 'நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் கார்த்திக், நான் எதையும் மனதில் வைத்துக் கொள்வது கிடையாது' என்றார் - 'இது ஒன்று போதும் விஜயன் சார், அடுத்த விமர்சனத்தில் அடி பின்னிறலாம்!' என்று மனதில் நினைத்துக் கொண்டேன்! ;) வாசகர்கள் பலரும் அவருக்கு கடிதங்கள் வாயிலாகவும், வலைப்பூக்கள் வாயிலாகவும் அழகுத் தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதி வருவது அவருக்கு பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்! நான் வாங்கிய Wild West ஸ்பெஷல் இதழில் அவரின் ஆட்டோகிராஃப் கேட்டேன், புன்னகையுடன் மறுத்து விட்டார் - ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் போட்டுக் கொடுத்தார் என கேள்விப்பட்டேன்! (பத்த வச்சாச்சு!) :D

ஞாயிறு அன்றும் மனைவி, குழந்தையுடன் சிறிது நேரம் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்! விழா நடந்த இரண்டு நாட்களிலும், எக்கச்சக்கமான வாசகர்கள் நமது ஸ்டாலை முற்றுகையிட்டிருந்தனர்! பார்வையாளர்கள் நமது ஸ்டாலை கடந்தபோது, சற்று நின்று, புருவம் உயர்த்திச் சென்றதே இதற்கு சாட்சி! தமிழ் தெரியாத பலர், ஆங்கிலத்தில் வெளியான நமது பழைய லயன் காமிக்ஸ் வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்! அவர்கள் வாழ்க்கையிலேயே, மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் இவைகளாகத்தான் இருக்கும்! :) திரு,ராதாகிருஷ்ணன் அவர்கள் விற்பனை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். இரத்தப் படலம் இதழின் கடைசி காப்பி ஒன்று (அப்போ எனக்கு வித்ததா சொன்னது?!) பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது - வாசகர்கள் பலரும் அதை விலைக்கு கேட்டு, கிடைக்கததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்! :)

நான் கவனித்த இன்னொரு விஷயம் என்னவென்றால், நமது தமிழ் காமிக்ஸ் ஸ்டாலை தவிர்த்து வேறு எந்த ஒரு பிராந்திய மொழி (ஹிந்தியும் அடக்கம்) காமிக்ஸ் இதழ்களையும் கண்காட்சியில் காண இயலவில்லை! திரும்பிய பக்கமெல்லாம் ஆங்கிலம், ஒரு ஓரத்தில் தமிழ்! அனைத்து பிராந்திய மொழிகளிலும் காமிக்ஸ் இதழ்கள் வர வேண்டும் என்பதே என் விருப்பம், அப்போதுதான் இந்த அற்புதமான பொழுதுபோக்கு வடிவம் அதிகம் பேரைச் சென்றடையும். கண்காட்சி குறித்த அடுத்த பதிவில் சந்திக்கும் வரை, விழாவுக்கு வந்திருந்த தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் ஒரு சிறு பகுதியை கண்டு மகிழுங்கள்! :)

சென்ற பதிவில் என் புகைப்படங்களைப் பார்த்த கோவை மாயாவி (சுருக்கமாகச் சொன்னால் கோயாவி?!), நான் டைரக்டர் ஷங்கர் போல் இருப்பதாக ஒரு கருத்து தெரிவித்தார்! கீழ்க்கண்ட போட்டோவில் நான் மிஷ்கின் போல் தெரிகிறேனா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்! ;)


சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அட்டயைத்தான் கேலி பண்ணறாங்களோ?!


எனக்கு அஞ்சு காப்பி வைல்ட் வெஸ்ட் பார்சேல்...!


மறுபடியும், போட்டோ எடுக்க வந்துட்டான். எல்லாரும் மூஞ்சிய திருப்பிக்கங்க! ;)


Wild  West  ஸ்பெஷல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (மஞ்சள் டி -ஷர்ட் வாசகர்)!

காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்!:
Comic Con Express 2012 @ Bangalore


45 comments:

 1. //


  இந்த குட்டி பேட்டியைத் தவிர விஜயன் அவர்களிடம் பெரிதாக ஏதும் பேசவில்லை! 'விழாவில் கலந்து கொண்டிருக்கும் மற்ற பதிப்பகங்களின், இந்திய காமிக்ஸ் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவது சாத்தியமா?' என்று கேட்டேன்!

  //


  அற்புதமான கேள்வி நண்பரே ,இந்த ஒரு கேள்விக்கே உங்களுக்கு சிறந்த பேட்டி எடுப்போர் என அவார்டை உருவாக்கி கொடுக்கலாம் ............ஆசிரியர் மனது வைத்தால் முடியும் என்ற தங்களது பதிலுக்கு அடுத்த அவார்ட் தாங்களே சொல்லவும்................அற்புதமான முக்கிய கேள்வி,நமது புராதன கதைகளை வண்ணத்தில் வெளியிட்டால் அற்புதமாக இருப்பதுடன் அனைவரையும் திரும்ப வைக்கும் ..............வாண்டு மாமா கூட ............கலக்குங்கள் பேட்டியை பார்த்த பின்னர் அடுத்து............

  ReplyDelete
  Replies
  1. நான் குறிப்பிட்டது புராணங்களையும், வாண்டு மாமா கதைகளையும் அல்ல! :) அடுத்த பதிவில் சொல்கிறேன்! :)

   Delete
  2. சாரி,இதுவும் எனது சின்ன ஆசை ,உங்களது அது பற்றிய பதிவை நோக்கி .............

   Delete
  3. மிஷ்கினை பார்த்ததில்லை ஆகவே .............

   Delete
 2. கார்த்திக் உங்களுக்கு நன்றி என்று சொல்லி முடிக்க விருப்பமில்லை .....................ஆசிரியரை போல நானும் வார்த்தைகளை தேடுகிறேன்.........................

  ஆசிரியரின் உற்ச்சாகம் அடேயப்பா..................................மன நிறைவுடன்

  ReplyDelete
  Replies
  1. //ஆசிரியரின் உற்ச்சாகம் அடேயப்பா// yes, he was visibly happy!

   Delete
 3. நண்பரே, இந்தப் கோயாவி பதிவுகளை படியுங்கள் - செம காமெடியாக இருக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே பார்த்துள்ளேன் நண்பரே,anyway thanks .......................தாக்கலையே?

   Delete
  2. //தாக்கலையே//
   புரியல!

   Delete
 4. இல்லை மேலே நீங்க சொன்ன கோயாவிக்கும் இதுக்கும் எதோ................ இல்லையே ?
  என்னைய வச்சு காமெடி கீமெடி ................

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, சும்மாதான் நண்பரே! - கோவை மாயாவின்னு கொஞ்சம் மாத்தி எழுதுனவுடன் கோயாவி பெயர் ஸ்ட்ரைக் ஆச்சு! கோவிச்சுக்கிட்டீங்களா?! வேணும்னா அந்த கமெண்டை தூக்கிர்றேன்! :)

   Delete
 5. Bladepedia வரலாற்றில் முதல்முறையாக, வீடியோவை வெளியிட்டு விட்டீர்கள்..
  ஆனால் ஒன்று, இதை லைவாக பார்த்த (சில) காமிக்ஸ் நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! ;-)

  ReplyDelete
  Replies
  1. //Bladepedia வரலாற்றில் முதல்முறையாக//
   இல்லை! இது மூணாவது வீடியோ! :) இதுக்கு முன்னாடி கார்பன் டாப்லெட் பத்தி 2 வீடியோ போட்டிருந்தேன்! ;)

   //இதை லைவாக பார்த்த (சில) காமிக்ஸ் நண்பர்களில் நானும் ஒருவன்//
   :) நான் சொதப்பியதை நேரில் பார்த்த நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்றும் சொல்லலாம்! ;)

   Delete
  2. Bladepedia வரலாற்றில் முதல்முறையாக, ஒரு காமிக்ஸ் பேட்டி (அதுவும் விஜயன் சாருடைய!) வெளியிட்டு இருக்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் நான் சொன்னேன் சார் :-)

   Delete
 6. நோ நோ .......அப்படியே இருக்கட்டும் நண்பரே ...........

  ReplyDelete
 7. பதிவுக்கு நன்றி கார்த்திக்.
  வீடியோ பார்கவில்லை மாலை வீடு சென்று பார்கிறேன்.

  //விழாவில் கலந்து கொண்டிருக்கும் மற்ற பதிப்பகங்களின், இந்திய காமிக்ஸ் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவது சாத்தியமா?//
  விமானிக பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் ராவனாயன் போன்ற கதைகளை கூறுகிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. அவையும்தான், தவிர மேலும் சில காமிக்ஸ்களை பார்த்தேன்!

   Delete
  2. நான் விமாநிகவின் மோக்ஷ மற்றும் கல்கி படித்துள்ளேன்.
   அதன் படங்கள் நன்றாகவே இருக்கும்.
   ஆனால் கதை மிகவும் நார்மலாகவே இருக்கும்.

   Delete
  3. நான் இது வரை இந்த காமிக்ஸ்களை படித்ததில்லை - சில புத்தகங்கள் வாங்கியுள்ளேன் - படித்து விட்டு முடிந்தால் விமர்சிப்பேன்!

   Delete
  4. கார்த்திக் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது.
   உங்களது கேள்வி அதற்க்கு ஆசிரியர் கூறிய பதில்களும் மிகவும் நன்றாக இருந்தது.
   வீடியோ வை டவுன்லோட் செய்து வைத்து விட்டேன்.
   உங்களுக்கு மிகவும் நன்றி.

   Delete
 8. Namathu stalil athika gootdam enpathu arinthu makilchi...

  ReplyDelete
 9. வீடியோ பதிவு மிக அருமை.கமல் பாணியில் சொல்ல வேண்டுமானால் ,"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு"பாட்டாவே படுச்சிட்டேன் .
  GRAZIE MILLE,CIAO

  ReplyDelete
 10. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. alagana COMADI yana ungal padivu santhosathiym,magailchiym vara vithana.NANDRI.

  ReplyDelete
 12. Thanks Karthik, I am in 1 of the photos you have taken :).
  We should meet sometime.

  You are doing a great work

  ReplyDelete
  Replies
  1. Oh good! In which photo? :) Yes, we can meet sometime...

   Delete
  2. 2nd one with my Daughter, Blue strips :)

   Delete
  3. Oh, cool! Sorry I forgot your name - meeting so many people in a single day has its own effects! :D

   Delete
 13. எதிர்பார்த்ததைவிட அடக்கமான பண்பான மனிதராகத் தெரிகின்றார் எங்கள் எடிட்டர் ஐயா. வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி. பல மைல் தொலைவில் இலங்கையில் இருந்து விஜயன் ஐயாவைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்! :) நானும் எதிர்பார்த்ததிற்கு மாறாக கலகலப்பாகவே பேசினார்!

   Delete
 14. வீடியோ நன்றாக இருந்தது. கேட்ட கேள்விகளும் அதற்கு எடிட்டரின் பதில்களும் சரியாக இருந்தது. நீங்கள் பதட்டமாக இருந்த மாதிரி தெரியவில்லை. Casual talk மாதிரி தான் இருந்தது.

  வாசகர்களின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று எடிட்டர் கூறிய அந்த காட்சிகள், அவர் முழு மகிழ்வுடன் கூறியது நன்கு தெரிந்தது.

  நன்றிகள் உங்களின் காமிக் கான் பதிவுகள் மற்றும் கவரேஜீக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஆம், அவர் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது அந்த மகிழ்ச்சி! :)

   Delete
 15. என்னுடைய தனிப்பட்ட கருத்து, வெளிநாட்டு காமிக்ஸ்கள் தமிழில் வந்தாலே (எனக்கு) போதுமானது என்பது.

  ReplyDelete
  Replies
  1. தேசமலர், கலைப்பொன்னி காமிக்ஸ் ரேஞ்சில் நான் சொன்னவற்றை நினைத்திட வேண்டாம்! ஓவியங்களைப் பார்த்தால் வாயடைத்துப் போய் விடுவீர்கள்!

   Delete
 16. thanks karthi , for விஜயன் பேட்டி .விஜயன் முகத்தை உங்க ப்ளாக் ல தான் பார்த்தேன் .
  இப்போ வீடியோ பதிவு மூலம் அவர் குரலையும் கேட்டு விட்டேன் .
  பேட்டியை சட்டுன்னு முடித்து விட்டீங்க , நேரமின்மை காரணமா ?
  நல்லா energitica பேட்டி எடுத்து இருக்கீங்க , நீங்க மீடியா person ஆக போய் இருக்கலாம் .வஞ்சபுகழ்ச்சி கிடையாது .உண்மை .

  ReplyDelete
  Replies
  1. அவருடைய பல பேட்டிகள் Youtube-இல் இருக்கின்றன! S.Vijayan அல்லது Lion Comics Editor என்று தேடுங்கள்!

   //நேரமின்மை காரணமா//
   என்ன பேசுவதென்ற தெளிவு இல்லாததே காரணம்! :)

   //நீங்க மீடியா person ஆக போய் இருக்கலாம்//
   தமிழ்நாடு தப்பித்தது! :)

   Delete
 17. சூப்பர் ஆன பேட்டி. வாசகர்களின் உற்சாகம் பற்றியும், அதனால் அவருக்கு கிடைத்த சந்தோசமும் குறிப்பிட்டபோது அவர் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள். ரைட் ரைட் :D

  ReplyDelete
 18. COMICON பற்றிய அனைத்து பதிவுகளும் அருமை நண்பரே. நேரில் பார்க்க முடியாத வருத்தம் தற்போது கிடையாது. விஜயன் சார் குறும்பேட்டி நன்றாக உள்ளது.

  பிரபல விமர்சகர் என்பதால் விஜயன் சாரிடம் உங்களுக்கு ஏதும் தனி கவனிப்பு கிடைத்ததா ? :-) (இல்லை பெருந்தன்மையாக மறைத்துவிடீர்களா? :-) ).

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia