பிருந்தாவனமும் ப்ளேட்பீடியாவும்!

அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களே!

நான் உங்களுக்கு இம்மியளவும் இதற்கு முன் அறிமுகமில்லாதவன் என்ற போதும், உங்கள் வலைத்தளத்தில் எனது வேண்டுகோளுக்கிணங்க, எனது காமிக்ஸ் (சித்திர கதை / சித்திர நாவல்) தளத்திற்கு அறிமுகம்  கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

இன்றைய தேதியில் எஞ்சியிருக்கும் காமிக்ஸ் படிக்கும் வாசகர்கள் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்பது மிகவும் ஓர் ஆச்சரியமான விஷயம்! பெரும்பாலோருக்கு குறிப்பாக தமிழில் காமிக்ஸ் வெளியாகின்றன என்ற சேதியே ஆச்சரியத்தை தரக்கூடியது என்பது எனக்கு ஆதங்கத்தைத்தான் தருகிறது :(. அந்த ஆதங்கத்தின் முதல் வெளிப்பாடே உங்களுக்கு நான் எழுதிய கடிதம்.

எஞ்சியிருக்கும் சொற்ப வாசகர்களிலும், பலர் காமிக்ஸ் இதழ்களை ஏதோ மஞ்சள் பத்திரிக்கை வாசிப்பது போல மற்றவர்களிடம் இருந்து மறைத்து படிப்பது இன்னொரு வேதனை தரும் சங்கதி! (நானும் அதை செய்திருக்கிறேன்). காமிக்ஸ் என்ற ஒரு சிறந்த காணும் ஊடகம் இதன் காரணமாய் வேகமாக மறைந்து வருகின்றது என்பதை ஜீரணிப்பதே கடினமாக உள்ளது. 1970 - 1990 காலகட்டத்தில் காமிக்ஸ் இதழ்கள் தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்திட்டன. பல பதிப்பகங்கள் அயல் நாட்டு மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளை அச்சேற்றின!

இன்று எஞ்சி இருப்பன முத்து மற்றும் லயன் காமிக்ஸ் மட்டுமே (அவைகள் இரண்டும் ஒரே பதிப்பகத்தை சார்ந்தது என்பது வேறு விஷயம்). இவற்றை பதிப்பிக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் உரிமையாளர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காமிக்ஸ் பதிப்பில் பழம் தின்று விதை விதித்த அவர்களது நிறுவனத்திற்கும் தமிழில் காமிக்ஸ் வெளியிடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக இன்றளவும் இல்லை. லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் பல தடவை மரித்து உயிர்தெழுந்தது  ஒரு சோக சரித்திரம்.

இத்துறையில் ஒரு போட்டியாளரும் அவர்களுக்கு இல்லை என்பதே காமிக்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் துயரமான விஷயம்தான். அயல்நாடுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவரவர் வயதிற்கேற்ற காமிக்ஸ்கள் வாங்கி படித்து மகிழ்வது, புத்தக வாசிப்பே வெகுவாய் மரித்திட்ட தமிழ்நாட்டில் கைகூடுமா?!!

அது வெறும் கனவாகவே இருந்திட கூடாது என்ற உத்வேகத்தில் என்னால் இயன்றதை செய்து வருகிறேன். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகிறேன்! உங்களது பதிலில் காமிக்ஸ் புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் அனுப்பி வைத்திட சொல்லி இருந்தீர்கள். நான் லயன் மற்றும் முத்து இதழ்களுக்கான ஒரு வருட சந்தா உங்கள் பெயரில் நாளை முதல் வேலையாய் கட்டவுள்ளேன். உடனே உங்கள் முகவரியை எனது மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்துங்கள்!

நீண்டதாய் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த  கடிதத்தை பொறுமையாக படித்த உங்களுக்கும், உங்களது வலைத்தள பின்தொடர்வாள வாசக நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல!

அன்புடன்,
-கார்த்திக்
பெங்களூரு

***

நீங்கள் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே வருகை எண்ணிக்கை எகிறியதை இதன் மூலம் காணலாம்!

 

***
 
@ கேபிள்சங்கர்  & யுவகிருஷ்ணா: விரைவில் உங்களுக்கு தொல்லை அளித்திடுவேன்... :)

உங்களுக்கும் எனது மனதார்ந்த நன்றிகள்!

***

சில பயனுள்ள சுட்டிகள் (சின்ன சுட்டிகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான்!):

முத்து & லயன் அதிகாரபூர்வமான தளங்கள்:
http://www.lion-muthucomics.blogspot.com
http://www.lion-muthucomics.com

சக (மூத்த!) பதிவர்களின் தளங்கள் (எவ்வகையிலும் இவை வரிசைப்படுத்தப்படவில்லை!):
http://www.comicology.in
http://www.tamilcomicsulagam.blogspot.com
http://muthufanblog.blogspot.com
http://mokkaicomics.blogspot.in
http://browsecomics.blogspot.in
http://akotheeka.blogspot.in
http://poongaavanamkaathav.blogspot.in
http://kakokaku.blogspot.in
http://kanuvukalinkathalan.blogspot.in/search/label/காமிக்ஸ்

மேற்கண்டவை ஒரு சில மட்டுமே! விரைவில் கூடுதல் இணைப்புக்களை அளித்திடுவேன்! :) இப்பொழுது மணி கிட்டத்தட்ட 3am!

***

ஜாக்கி சேகரின் வாசகர்கள் அல்லாதவர்கள் நலனிற்காக அந்த கடிதமும் அவரின் பதில் இடுகையும், கீழே!

கார்த்திக்: Apr 3, 2012
திரு. ஜாக்கிசேகர் அவர்களே,

நான் உங்கள் பதிவுகளை ஓரிரு வருடங்களாக படித்து வருகிறேன். இயல்பிலேயே பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி செல்லும் எனக்கு, மனதில் பட்டதை எழுதும் உங்கள் பாணி மிகவும் பிடிக்கும்!

நான் காமிக்ஸ் புத்தகங்களின் பெரும் ரசிகன். இந்த காலத்து பள்ளி மாணவர்களும், கல்லூரி இளைஞர்களும் காமிக்ஸ் பற்றிய எந்த அறிதலும் இல்லாது அவற்றை குழந்தைகளுக்கான புத்தகங்கள் என நினைத்து புறக்கணிப்பது வேதனையை தருகிறது! உதாரணத்திற்கு லயன் காமிக்ஸ் ஆசிரியரின் இந்த பதிவை பாருங்கள்! இது குழந்தைகள் விஷயமல்ல!

காமிக்ஸை விடுங்கள், பொதுவாகவே தமிழில் வாசிக்கும் வாடிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் உங்களை போன்ற நட்சத்திர வலை பதிவர்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து மிகவும் வியந்து போகிறேன்! கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா  மற்றும் உங்களுடைய சமீப பதிவுகளில் ஓரிரு பின்னோட்டம் எழுதி எனது காமிக்ஸ் பற்றிய வலைதளத்திற்கு சுட்டி கொடுத்தவுடனேயே  எனது வலைதளத்திற்கு வருவோர் எண்ணிக்கை கூடியது எனக்கு  மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! காமிக்ஸ் பற்றிய அறிதல் இல்லாத இத்தலை முறையினர் எனது பதிவுகளையும், எனது சக காமிக்ஸ் பதிவர்களின் (தோழர்களின்) வலைத்தளங்களையும் எனது  வலைத்தளத்தில் உள்ள சுட்டிகள் மூலம் பார்த்து காமிக்ஸ் பற்றி சற்றேனும் அறிந்து கொண்டால் அதுவே எனக்கு போதுமானது!

நேரம் கிடைத்திடும் போது எனது தளத்தை ஒருமுறை வாசிக்க வேண்டுகிறேன்! அனுபவமிக்க உங்களுடைய கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும்!
http://bladepedia.blogspot.com/

நான் உங்களுக்கு இக்கடிதம் எழுதிட முக்கிய காரணம், நான் உங்கள் தளத்தில் எனது தளத்திற்கு விளம்பரம் கொடுக்க விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க! நான் வெறுமனே பின்னூட்டமிட்டு எனது தளத்திற்கு இலவச விளம்பரம் அளித்தது உங்களை எரிச்சல் படுத்தி இருக்காது என்றே நம்புகிறேன். அவ்வாறிருந்தால், மன்னிக்கவும்! உங்கள் தள முகப்பின் மேற்பகுதியில் ஒரு மாதம் விளம்பரம் கொடுத்திட நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

மிக்க நன்றி! அன்புடன்,
கார்த்திக்

ஜாக்கி சேகர்:
அன்பின் கார்த்திக்,

படிக்கும் விஷயம் பலரிடம் சென்று சேரவேண்டும் என்பது நல்ல விஷயம்.. இதுக்கு காசு எல்லாம் வேண்டாம்... உங்கள் கடிதத்தை நான் அப்படியே பிரசுரிக்கின்றேன்..   அதில் இருக்கும் தொடுப்பு மூலம் என் தளத்துக்கு வருபவர்கள் மற்றும் காமிக்ஸ் மேல் விருப்பம் இருப்பவர்கள்.. நிச்சயம் உங்கள் தளம் வந்து வாசிப்பார்கள்.. உங்களிடம் காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் கொடுக்கவும் படித்து வெகுநாள் ஆகின்றது...

நன்றி
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

8 comments:

 1. ராணி காமிக்ஸ்...வேற இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. இருந்தது, பெயரளவில் 2005 வரை! காமிக்ஸ் ரசிகர்களை பொறுத்தவரை அது தொண்ணூறுகளின் பிற்பாதியிலேயே தனக்கு தானே சாவு மணி அடித்துக்கொண்டது! அதைப்பற்றி விரிவாக ராஜாவின், ராணி பற்றிய பதிவில் படிக்கலாம்! தமிழ் காமிக்ஸ் இப்போது இருக்கும் நிலைமைக்கு அவர்கள் பிற்பாடு வெளியிட்ட மொக்கை கதைகளும் முக்கிய காரணமாய் இருந்தது வருத்தம் தரும் விஷயம். அவற்றை படித்தே பலர் காமிக்ஸ் என்றாலே ஏதோ அமெச்சூர் ஆன விஷயம் என்று நினைக்க துவங்கி விட்டார்கள்!

   Delete
 2. மிக்க நன்றி கார்த்திக்...பதிவுக்கும் என் மீதான மதிப்புக்கும்... புத்தகங்கள் எடுத்து வையுங்கள் நண்பர்கள் மூலம் அல்லது நானே பெங்களூர் வரும் போது பெற்றுக்கொள்கின்றேன்.

  நன்றி
  பிரியங்களுடன்

  ஜாக்கிசேகர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி ஜாக்கி!

   Delete
 3. சூப்பர். உங்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஜாக்கி அவர்கள் தன் வலைத்தளத்தில் அறிமுகம் செய்தது, அவரின் காமிக்ஸ் ஆர்வத்தைக் காட்டுகிறது.

  காமிக்ஸ் பற்றி கேலி செய்பவர்களிடம், லக்கிலூக், கேப்டன் டைகர் மற்றும் XIII புத்தகத்தினைக் கொடுத்து படிக்க சொல்லுங்கள். உலகத்தரம்..உலகத்தரம் என்று கூவுபவர்கள் பார்க்கட்டும், தமிழ் மொழிபெயர்பில் வந்த இந்தக் காமிக்ஸ்கள் விளையாட்டான விஷயம் இல்லை என்பதனை.

  போன வாரம் பெல்ஜியமிலிருந்து வந்த என் அலுவலக நண்பரிடம், அவர் மொழி வழி வந்த காமிக்ஸ் பற்றி உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனைப் பார்த்து மற்றவர்களுக்கு காமிக்ஸ் மேல் இருந்த கேவலமான/சிரிப்பான எண்ணத்தை சற்றே மாற்றிக்கொண்டார்கள்.

  லயன் காமிக்ஸின் தரமுன்னேற்றம் தமிழ் காமிக்ஸின் மீதான மதிப்புரையை மிகவும் மாற்றும் காலம் வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. >>>காமிக்ஸ் பற்றி கேலி செய்பவர்களிடம், லக்கிலூக், கேப்டன் டைகர் மற்றும் XIII புத்தகத்தினைக் கொடுத்து படிக்க சொல்லுங்கள். உலகத்தரம்..உலகத்தரம் என்று கூவுபவர்கள் பார்க்கட்டும், தமிழ் மொழிபெயர்பில் வந்த இந்தக் காமிக்ஸ்கள் விளையாட்டான விஷயம் இல்லை என்பதனை<<<

   நச்சென்று சொன்னீர்கள்!

   Delete
 4. அன்பு கார்த்திக், இதே அனுபவம் எனக்கும் உண்டு. என் http://anandhabavanam.blogspot.in/ ய் தொடங்கியவுடன்
  அவரிடம் எப்படி இருக்கு என்று கேட்டேன். அவர் சான் வெஜ் நான் விசில் என் இ-மெயிலை கடிதம் பகுதியில்
  வெளி இட்டுருந்தார். என் முதல் பதிவுக்கு மட்டும் 500 க்கு மேல் விசிட்டர்ஸ். அதற்கடுத்து 5 பதிவு போட்டு விட்டேன்
  900 தை இன்னும் தொட வில்லை. :-(

  நானும் லயன் காமிக்ஸின் தீவிர ரசிகன். என் டீச்சர் க்கு தெரியாமல் பனியனுக்குள் வைத்து பதுக்கி அவர்கள் வீடு கடந்ததும் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன். கிட்டத்தட்ட 20 வருடங்களாக நான் காமிக்ஸ் படிக்கவே இல்லை. இந்த
  புத்தக கண் கட்சியில் தான் சிக் பில் மற்றும் லக்கி லுக் புதகனகள் 100 ரூ வாங்கினேன். வருட சந்தா கட்ட போகிறேன்.
  தலை வங்கி குரங்கை மிக திகிலுடன் படித்த அனுபவம் இப்போதும் நியாபகம் இருக்கிறது. நல்ல முயற்சி தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அனுபவ பகிர்வுக்கு நன்றி ராஜ்! விரைவில் 1000 ஹிட்டடிக்க வாழ்த்துக்கள்! :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia