அறுவை அப்டேட் - ப்ளேட்பீடியா - மார்ச் 2012

நேற்று இன்று நாளை!

முன்னாள் நேற்று:
1997-இல் வேலையில் சேர்ந்த நான் பத்து வருடங்கள் காமிக்ஸ் புத்தகங்கள் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கவில்லை! 2007-இல் வந்த திடீர் ஞானோதயம் காரணமாக, தமிழ்நாட்டிலேயே மிக பெரிய அளவில் அமைந்திருக்கும், காமிக்ஸுகளை மட்டுமே விற்கும் ஒரு பழைய புத்தக கடைக்கு அட்டை பெட்டி, Backpack, Suitcase சகிதம் சென்று விடுபட்ட புத்தகங்களில் பாதியளவு அள்ளி வந்தேன். அங்கே திரு. விஜயன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது!;)

பி.கு.: அந்த கடை எங்குள்ளது என்பதை அறிய இங்கே சொடுக்கவும்! அதே கடையில் புதிய புத்தகங்களும் கிடைக்கின்றன!

நேற்று:
எப்போதும் எக்க சக்கமாய் திட்டமிட்டு சொதப்புவதில் என்னை மிஞ்ச ஆள் கிடையாது!  ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான அடிப்படைகளை ஆராயாமல் உடனே செய்து முடித்துவிடுவேன்! அதன் பலன்தான் பயங்கரமாக இருக்கும்! முத்துபேன், ரபிக் ராஜா, கிங் விஸ்வா போன்றவர்களின் தளங்களை பார்த்த பாதிப்பில் நானும் ஒரு வலைதளத்தை 2009-இல் துவக்கினேன்! காமிக்ஸ் பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம்  அது! மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் நான் எழுதிய அந்த புகழ் வாய்ந்த முதல் பதிவில் மயங்கிய விஸ்வா அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்து, இறுதியில் பொறுமையிழந்து பின்னூட்டமிட்ட அந்த சரித்திர புகழ் வாய்ந்த வரிகள் அங்கே காணக்கிடைக்கும்! Justhost மூலம் இரண்டு வருட சந்தா ரூ.4000/- கட்டி தனி வெப்சைட் (இப்போ அது இல்லை) வேறு  வாங்கி விட்டேன்! அதுவும் கிடப்பில் கிடந்து காலாவதி ஆனதுதான் மிச்சம்! கொஞ்சம் இருங்கள் முகத்தை கழுவிவிட்டு வருகிறேன்! (ரொம்ப அசடு வழிந்தால் இப்படிதான்!)

இன்று:
விஜயன் சார் தனது வலைத்தளம் மூலம் என்னை உசுப்பேற்றிய காரணத்தால், என்னுள் தூங்கியிருந்த சோம்பேறி காமிக்ஸ் சிங்கம் லேசாய் கண் முழித்ததன் விளைவு நான் முகம் கழுவி இந்த பதிவை எழுதி கொண்டிருப்பது! தளம் தொடங்கிய முதல் நாள் முதலே சக பதிவர்களின் தளங்களில் பின்னூட்ட கும்மி அடித்தே என் தளத்திற்கு படிக்க ஆள் சேர்த்த பெருமையை வெளியில் சொன்னால் வெட்க கேடு! எது எப்படியோ நண்பர்களே, எனது இந்த கன்னி முயற்சியின் கற்பை கெடுக்காமல், அன்பாய் ஆதரவளித்து ஆயிரம் பேஜ் லோட் அளித்த அன்புக்கு நன்றி! அதுவும் சைட் தொடங்கிய மூன்றே நாட்களில். நிற்க! (அட பரவால்லே ஒக்காருபா) இதை நான் சொல்லிக் கொள்ளு(ல்லு)வதில் சற்றே சுய தம்பட்டம் இருந்தாலும் நான் உண்மையில் சொல்ல வந்தது, காமிக்ஸ் என்றாலே இன்னமும் தமிழ் மக்களிடையே உள்ள வரவேற்பைதான்!

நாளை:
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இதில் இரட்டை அனர்த்தம் ஏதும் இல்லை ;). வலப்பக்கம் மேலே உள்ள ஓட்டு பெட்டியில் உங்கள் சரியான வாக்கை அளித்து, உங்களையும் மற்றவர்களையும் என்னிடம் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டுகிறேன்!

எச்சரிக்கை:
அடுத்த வெளியீடு: காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் மூன்று!

இப்போதைக்கு இவ்ளோதான், Good night folks!

கருத்துகள்

  1. காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கிய பதிவு இது.

    லயன் அலுவலகதிற்கு 'பழைய புத்தக கடை' என்ற புது அடையாளத்தை கொடுத்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! நீங்கள் இதை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களோ என்று மனம் பதைக்கிறது :( நான் இகழ்வாக அப்படி சொல்லவில்லை! அச்சொல் உங்கள் மனதையும், மற்ற வாசக அன்பர்களை புண்படுத்துகிறதென்றால் நீக்க தயங்க மாட்டேன். மன்னிக்கவும் நண்பர்களே :(

      நீக்கு
    2. Sarcasam, நிறைந்த எனது மேற்கண்ட பதிவை சரியான முறையில் படித்திட ஆசிரியர் இந்த பதிவில் இட்ட கீழ்க்கண்ட பின்னூட்டம் உதவிடும் என நம்புகிறேன்!

      -----------------------------
      VijayanMar 28, 2012 12:56 PM
      -----------------------------
      lionpriyan : அவ்வப்போது கொஞ்சம் கலாட்டா..கொஞ்சம் leg pulling இல்லாது போனால் இது ரொம்பவே சீரியசான பதிவாகிடும் ! உற்சாகத்தை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் ! அதனையும் ரசித்திடுவோமே ?!

      நீக்கு
    3. அண்ணே, உங்கள் மனம் பதைக்க வேண்டாம். நோ சீரியஸ்.... நான் சொன்னது சும்மா விளையாட்டாகத் தான்... தூய தமிழில் பின்னூட்டம் போட்டதால் நீங்கள் சீரியஸா எடுத்துக்கொண்டீர்கள் போல....

      நீக்கு
    4. ஏம்பா, ஏம்பா, இந்த கொல வெறி? நீ பாட்டுக்கு கொளுத்தி வுட்டு போய்டுவ, அப்பாலிக்கா காமிக்ஸ் கண்மணிகள் பேஜாராயி என்ன பின்னி எடுக்கவா? தூய டமில்ல காமடி பண்ணாக்க, அட்லீஸ்ட் ஒரு ஸ்மைலியாவது போட்டு வைபா! :D

      நீக்கு
    5. உங்களின் "தமிழ் காமிக்ஸ் கிளப்புக்கு நல்வரவு! " பதிவையும் அதற்கு விஸ்வாவின் பின்னூட்டத்தையும் இப்போதான் பாக்குறேன். செம காமெடி.

      நீக்கு
    6. நல்லா சிரிங்க :) அப்படியே அங்கே பின்னூட்டம் போட்டு உங்க பெயரையும் வரலாறுல இணைச்சுக்கங்க!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia