உலகப் பதிவுகளில் கடைசி முறையாக!

ஒரு வழியாக 'தலை வாங்கி குரங்கு' & 'சாத்தானின் தூதன் டாக்டர் 7' இதழ்கள் இந்த வாரத்தில் என்னிடம் வந்து சேர்ந்தன! இப்படி எல்லாரும் படிச்சதுக்கப்புறம் புக்கை அனுப்பினா எங்களை மாதிரி காமிக்ஸ் விமர்சனம் எழுதி கஷ்ட ஜீவனம் நடத்துற சிறுபான்மை காமிக்ஸ் பதிவர்களோட கதி என்னவாகும்னு எடிட்டர் கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும்! எல்லாருமே ஏற்கனவே விமரிசையா விமர்சனம் எழுதி முடிச்சுட்டதால நான் புதுசா என்னத்த 'உலகப் பதிவுகளில் கடைசி முறையாக' இதை பற்றி எழுதிட முடியும்னு தெரியல (ஐய்யா, பதிவோட தலைப்பு வந்துருச்சு)! சரி ட்ரை பண்ணறேன்!

தலை வாங்கிக் குரங்கைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை, படிக்கும் போதே கதையை யூகிக்க முடிவது ஒரு பெரிய வெறுப்பம்சம்! இருந்தாலும் டெக்ஸ் என்னும் மந்திர சொல் எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது! கால் நூற்றாண்டுக்கு முன் இந்த கதை தமிழில் வெளியான போது அது எவ்விதமான அதிர்வை உண்டாக்கி இருக்கும் என்பதை உணர முடிகிறது! பொதுவாகவே நம்மாட்களுக்கு கௌபாய் கதைகள் ரொம்ப பிடிக்கும்! டெக்ஸ் தனியாக சாகசம் புரியும் இந்த கதையில், அட்டையில் தேவையில்லாமல் ஏன் அவரது பேமிலி போட்டோ என்பது புரியவில்லை - குரங்கு நீங்கலாக ;)

பொதுவாக நான் முத்து / லயன் அட்டைகளில் கவனித்த ஒரு விஷயம், அதீத வண்ணங்கள், கண்ணைப் பறிக்கும் வகையில் உபயோகிக்கப்படுவது! இதை பற்றி நான் இந்தப் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்! த.வா.கு.வும் இதற்கு விதி விலக்கல்ல. இதை சற்றே குறைத்தால் ஒரு ரிச்லுக்(!) கிடைக்க வாய்ப்பிருக்கிறது! காமிக்ஸ் புத்தகத்தை முகர்ந்து பார்த்து போதை அடைவது என் சின்ன வயது பொழுது போக்கு! (ஆமாமா, உதயநிதிக்கு முன்னாடியே நாங்க ஆரம்பிச்சிட்டோம்!)... த.வா.கு.வின் தாள்களில் ஆங்கில வாடை அடித்தது! கனத்த மேலட்டை காமிக்ஸ் சேகரிப்பாளர்களை மகிழ்விக்கும்! ஆனால் அச்சுத்தரமோ ஒவ்வொரு பக்கத்தின் மேலும் ட்ரேஸ் பேப்பர் வைத்து படிப்பது போல கலங்கலாக, ஒரு நீர்த்துப்போன அனுபவமாக இருந்தது.

டெக்ஸின் ட்ரேட்மார்க் நக்கல் வசனங்கள் (விஜயனின் அருமையான மொழி பெயர்ப்பில்!) இதில் குறைவு! தமிழில் வெளிவந்த முதல் டெக்ஸ் கதை (முதல் பதிப்பு வந்த காலத்தில்) என்பதால் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு ஒரு வசனம்:

``வேறு யாராவது துப்பாக்கியை எடுக்க நினைத்தால் என் அடுத்த இலக்கு அவர்களுடைய கையாக இருக்க வேண்டுமென்பதில்லை'' (த.வா.கு. ப 35 / க 2)

நச்! :)

விளம்பர இடைவேளை... ;) படித்து விட்டீர்களா:
 
எத்தனை பேர் இதை கவனித்தார்களோ தெரியவில்லை, ஆனால் 'டாக்டர் 7' இதழை விஜயன், முத்து / லயன் தளத்தில் அறிமுகப்படுத்தியபோது 'எமனின் தூதன் டாக்டர் 7" என்றுதான் தலைப்பு வைத்திருந்தார், திடீரென எப்படி எமன், சாத்தானாக மாறினார் என புரியவில்லை! எது எப்படியோ, எல்லாரும் சிலாகித்து கொண்டிருக்கும் இதன் அட்டையை பற்றிய எனது கருத்தும் மேற்சொன்னவாறுதான் - ஆளை அடிக்கும் பிரகாச வண்ணக் கலவை! ஒரிஜினல் ஓவியமும், லயன் ஓவியரின் கத்தரிக்கும் திறனும் உங்கள் பார்வைக்கு!


மூல ஓவியம்!

லயனின் வண்ணக் காவியம்!
என்னைக் கேட்டால், லயன் அட்டையில் இருக்கும் அந்த குட்டி டாக்டர் செவன் உருவத்தையும் கத்திரி போட்டிருக்கலாம்! இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் சிறப்பாக வடிவமைத்ததிற்கு, வெளியே தலை காட்ட விரும்பாத நமது லயன் ஓவியருக்கு பாராட்டுக்கள்...! அப்புறம், ஒரு மாபெரும் ஓவியனை இந்த உலகம் இழந்த கதையை, இந்தப் பதிவில் பொறுமையிருந்தால் படித்துக்கொள்ளுங்கள் ;)

'சா.தூ.டா-7', ஒரு அரதப் பழசான ஜேம்ஸ்பாண்ட் டைப் கதைதான்! எடிட்டரின் கத்திரி புகுந்து விளையாடி இருப்பது, கதை சட்சட்டென்று நகர்வதிலும், பட்டென்று முடிவதிலும் தெரிகிறது! இந்து மத குறியீடுகள் ஓவியங்களில் கண்கூடாக தெரியும் போது, கதை நடக்கும் நாட்டின் பெயர் காலிபூர் என்றும், இளவரசர் பெயர் ஜமால் என்றும் இருப்பது நெருடுகிறது! ஆனால் இது எடிட்டர் விஜயனின் வேலை அல்ல ஒரிஜினலே அப்படிதான் என்பது இந்த புத்தக விமர்சனத்தை பார்க்கும் போது தெரிகிறது! மேலைநாட்டவர்கள் இந்தியாவை தங்கள் படங்களிலும், கதைகளிலும் காட்டும் விதம் எனக்கு ஒருபோதும் பிடித்ததில்லை! உதாரணம்: Octopussy

காரிகன் தொடருக்கான சித்திரங்கள், வில்லியம்சனின் கை வண்ணத்தில் அற்புதமாக இருக்கும்! கருப்பு, வெள்ளையின் செறிவை ஏற்றி, இறக்கி பிரம்மிக்க வைப்பார்!


காரிகன் மற்றும் சில ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸுகளில் ஒரு வித ஷேடிங் உத்தி கையாளப்பட்டிருக்கும்! சின்னச் சின்ன கருப்பு புள்ளிகள் அல்லது சதுரங்கள் (பழைய டிவியை கூர்ந்து கவனித்தால் தெரியும் புள்ளிகளை போல!) அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டிருக்கும்! முக்கியமாக கதாபாத்திரங்களின்  உடல் பாகங்களிலும், அணியும் உடைகளிலும் இதை கவனிக்கலாம்! பேனலின் அளவுக்கேற்ப சித்திரத்தை விரிவாக்குகிறேன் பேர்வழி என்று, லயனின் ஆஸ்தான ஓவியர் இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களை கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது! லயன் ஓவியரின் விரல் வித்தையை இடது பக்கத்தில்  கண்டு களிக்கலாம்! :)

அழகிய அமெரிக்க மகன்!
"கன்னித் தீவில் ஒரு காரிகை" போன்ற ஒரு சொதப்பலான கதையை அது வெளியான கால கட்டத்திலும் யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் என்பதை என்னால் சத்தியம் செய்து கூறிட முடியும்! தனியே தீவில் வசிக்கும் ஒரு கிழவரை சமாளித்து, புதையலை அடைவது ஏதோ ஒரு மிகப் பெரிய காரியம் என்பது போல் ஒரு மொக்கை காரணம் சொல்லி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்!  முதுகைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், அவரை தீவை விட்டு வெளிக்கொணர ஒரு மகாமட்டமான ப்ளான் வேறு! சரி விடுங்கள்... :) மற்றபடிக்கு சித்திரங்கள் அபாரம், ரிப் கொஞ்சம் இளமையாக தெரிகிறார்! 

காரிகனுக்கும், ரிப்புக்கும் ஓய்வு கொடுத்தது உருப்படியான விசயம்தான்! இவர்களின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து எப்போதாவது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழில் வெளியிடலாம்! இம்மாதிரியான புராதன கதைகள் புதிய வாசகர்களை சேர்க்க எவ்வகையிலும் உதவாது!

வருட சந்தா 250 என்று உள்ளட்டையிலும், 620 என்று உள்ளே இன்னொரு பக்கத்திலும் குழப்பி அடித்திருக்கிறார்கள்! சந்தா படிவத்தை கத்தரித்து புத்தகத்தை சேதப்படுத்தும் அளவுக்கு நாம் இரக்கம் அற்றவர்கள் என எடிட்டர் நினைத்து விட்டாரா? :) படிவத்தை, தனியே புத்தகத்தின் உள்ளே சொருகி வைப்பது நலம்! அப்படியே செய்தாலும், அதைக்கூட காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட யூகம்! ;)

இந்தப் பதிவின் ஒரு பின்னூட்டத்தில் விஜயன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

>>>சாணி பேப்பர் வாசத்தை மறந்திட இன்னும் இரண்டு இதழ்களுக்குக் காத்திருக்க அவசியமே இல்லை...! இப்போது தயாராகி இருக்கும் லயன் டாக்டர் 7 இதழே நல்ல பேப்பரில் தான் அச்சாகி உள்ளது ! (Art paper அல்ல )<<<

ஆனால் எனக்கு வந்த பிரதி அப்படியேதும் நல்ல பேப்பராய் தெரிந்திடவில்லை! ஆனால் அவர் சொன்னவாறே, மங்காத்தா மேல சத்தியமாக "ஆர்ட் பேப்பரும்" அல்ல - மாறாக, உஜாலா சொட்டு நீலம் தோய்த்த  அதே சாணித்தாள்தான்... அதே கெரசின் வாசனைதான்! முகர்ந்து பார்த்ததில் போதை கன்னாபின்னாவென தலைக்கேறியது ;)
 
அட, இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க...??? படம் முடிஞ்சுருச்சு கெளம்புங்க பாஸ்! Bye, bye! :)

கருத்துகள்

 1. என்னே ஒரு அழகான பதிவு!
  ஆனாலும் கடைசியில் இப்படி டமால் என்று முடித்து விட்டீர்கள்!
  மாரியாத்தா மேல சத்தியமாக- என்ன ஒரு சொலவடை?
  நன்று நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. - நன்றி நண்பா!
   - பதிவு நீண்டு கொண்டே போனதால் ஒரு சடன் பிரேக் அவசியமாயிற்று! ;)
   - புடிக்கலைன்னா "மங்காத்தா மேல சத்தியமா"ன்னு மாத்திருவோம் :)

   நீக்கு
 2. The last time a world record!

  ஐயோ, இதை படிச்சா எனக்கு இங்கிலிஸ் மறந்துரும் போல இருக்கே! :D முழுசா படிச்சா முன்னூர்ரூவா பைன் ;)

  thanks to Google translate! :)

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இன்னொரு குட்டி சாத்தான் அட்டையில இருப்பது.... இப்ப தான் தெரியுது உங்க மாதிரி பெரியவா சொன்ன பின்னால

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ப்ளேட்பீடியாவை ஆரம்பித்ததில் இருந்து வந்த முதல் "கலாய்த்தல்" வகையை சார்ந்த பின்னூட்டங்கள் மந்திரியாருடையதுதான் என்ற வகையில் உங்கள் கருத்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது! ;)

   தமிழ் பதிவை 'Google translate' மூலம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் படித்து விட்டு, " தமிழ்ல போடுங்கப்பா" என்று பின்னூட்டமிட்ட 'மகா பெரியவாளின்' மதியூகம் என்னை மகிழ்சிக் கடலில் முக்கி முக்கி எடுத்து மூச்சு திணற வைக்கிறது! :D

   படித்ததிற்கும், கலாய்த்ததிற்கும் நன்றி நண்பரே! :)

   நீக்கு
 5. கார்த்திக்,
  இதுவரை வந்த உங்கள் பதிவுகளில் இந்த பதிவுதான் நம்பர் ஒன். சும்மா சொல்லகூடாது 'பிச்சி மேஞ்சிருக்கிங்க' - புத்தகத்தைதான் சொன்னேன் - keep it up

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கும், தளத்தை தொடர்வதற்கும் மிக்க நன்றி! :)

   நீக்கு
 6. maariyaatha மங்காத etc ., இப்படி உங்க பாணியில் சொலுங்க . நிஜமா இதை பதிவு செய்ய எவ்வளவு நேரம் ஆச்சு ? அதிகமாக சிரத்தை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகே ஓகே, மங்காத்தாவே நல்லா இருக்கு! - மாத்திட்டேன் :)

   இது போன வாரம் ஆரம்பிச்ச பதிவு - த.வா.கு வந்ததும் கொஞ்சம் எழுதி டிராப்ட்ல போட்டுருந்தேன்! மீதியை நேத்து சா.தூ.டா-7 புக்கு வந்ததும் முடிச்சேன் - மொத்தமா ஒரு நாலு அல்லது அஞ்சு மணி நேரம் ஆகியிருக்கும்னு நெனைக்கறேன் - சரியா கவனிக்கல!

   நீக்கு
 7. mankata maariyaatha etc., colunka like your style. How much time it happened to be true? This is only possible if too much effort ( i 1/2 ஒர்க் அவுட் ஆகுது )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா, நீங்களும் கூகிள் மொழிபெயர்ப்புக்கு மாறிட்டீங்களா?! :)

   நீக்கு
  2. பயங்கரவாதி dr செவென் சிரிப்பா?

   நீக்கு
  3. :) இன்னும் நீங்க தூங்கலையா!

   நீக்கு
  4. நான் கேட்க வீடிய கிழவி (சை டைப் தவறு ) .... கிழவி ... ( மறுபடிஉமா ) . என்ன இப்படி உளறுது ....
   naan ketka veendiya keelvi neenga muthikiteenga . thamil type su........ppp...er....
   ( appaada thangilish vaalga)

   நீக்கு
  5. naan ketka vendiya kelvi, neenga mundhikkitteenga - இப்படி ட்ரை பண்ணுங்க சரியா வரும்! :)

   நீக்கு
  6. அதான் நீங்களே கேட்டுடீங்களே .......( அம்மா ஒரு டி போடுங்க நைட் ஷிபிட் இன்னைக்கு )

   நீக்கு
  7. ஒருவழியா மனுஷன் பயந்துட்டாருள்ள ..... ( T கேன்சல் )

   நீக்கு
  8. ச்சே ச்சே, ப்ளேடு அவ்ளோ சீக்கிரம் பயப்படாது! உங்களுக்கு கூகிள் சாட் ரிக்வெஸ்ட் அனுப்புனத கவனிக்கலையா சார்?!

   நீக்கு
 8. என்னை மிகவும் அடிமைப்படுத்திய புத்தகங்கள் இவை..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia