ஒரு கடிதத்தின் கதை!

சமீபத்தில் லயன் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் லார்கோ வின்ச் பற்றிய இந்த பதிவில், ஒரு வாசகரின் பின்னூட்ட வேண்டுகோளுக்கிணங்க ( அது நான்தான், நான்தான் :D ) விரைவில் வெளியாகவிருக்கும் லார்கோவின் கதைகளின் தலைப்பை ஒரு புதிய பாணியில் டக்கராக மாற்றி இருப்பதை பற்றி அறிவித்திருந்தார். அவருக்கு நன்றி!

Fast backward to 1995! பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தீவிரமாக என்னை தயார் படுத்திக்கொண்டிருந்தேன்! அதன் ஒரு அங்கமாக மூளையை ரொம்ப கசக்கி கீழ் கண்ட ரீதியில் ஒரு கடிதம் திரு.விஜயன் அவர்களுக்கு எழுதினேன்!

>>>
அன்புள்ள ஐயா,

நம்ம தமில் காமிக்ஸு அட்ட பட வரலாறுல ஒரு புர்ட்ச்சி  பண்ணணும்.  இங்கிலீஷ் காமிக்ஸ் புக்குல எல்லாம் பின்னரானுங்க. இதுக்காக நானே சொந்தமா யோசுச்சு பயங்கரமா பத்து கவர் டிசைன் என் கையாலய வரஞ்சு இந்த கடுதாசி கூட அனுப்சிருக்கேன்.

பி. கு.: இத்தோட, பாஞ்சு காசு தபாலட்டல என் அட்ரசு எய்தி வச்சுருக்கேன். ஒடனே பதில் போடாட்டி +2 பரிச்ச எயுத மாட்டேன்.  நன்றி!

உங்கள் உண்மையுள்ள,
கார்த்திக்
 <<<

அந்த கடிதத்தை அவருக்கு அனுப்பும் முன், அந்த காலத்தில் என்னிடம் ஸ்கேனர் வசதி இல்லாத காரணத்தினாலும் (நல்ல வேளை தப்பித்தீர்கள்!), இப்படி பதிவு போடும் அளவு அந்த கடிதம் சரித்திர முக்கியத்துவம் பெறப்போகிறது என்பது தெரியாததாலும் குறைந்த பட்சம் ஒரு 'Xerox' காப்பி கூட எடுக்காமல், வீட்டு பக்கத்தில் இருந்த கருப்பு தொப்பி போட்ட சிவப்பு கலர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கிட்டத்தட்ட அதை மறந்து விட்டேன்.

இருந்தாலும் வாசக மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட அன்பு ஆசிரியர் விஜயன் அவர்கள் கீழ் கண்டவாறு உடனே எனக்கு பதில் எழுதினார்!

திரு. விஜயனின் கடிதம்!


இதற்கப்புறம் அவர் எனது மொக்கை ஐடியாக்களை பரிசீலனை செய்தாரோ, அல்லது மீண்டும் ஒரு பதில் கடிதம் கீழ் கண்டவாறு எனக்கு எழுதினாரோ என்பது எல்லாம் எனக்கு தெரியாது!

>>>
வாசக நண்பருக்கு,

"நீங்கள் அற்புதமாக வடிவமைத்த அட்டை படம் நிர். மூன்றை அடுத்த இதழுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் உங்களுக்கு எழுதிய முதல் பதில் கடிதம் உங்களுக்கு இன்னும் கிடைத்திராத பட்சத்தில், நமது அலுவலகத்திலே கவர் ஆர்டிஸ்ட் ஆக வேலைக்கு சேர விண்ணப்பித்திடவும். பார்ட் டைமில் சிவகாசியில் ஏதாவது ஒரு டுடோரியல் காலேஜில் நீங்கள் மீண்டும் +2 உருப்படியாக படித்திட லயன் நிர்வாகம் உதவி செய்திடும்"

அன்புடன்,
விஜயன்
<<<

ஏன் என்றால், என் அப்பாவுக்கு மீண்டும் இட மாற்றலாகி இருந்தது - காரைக்குடிக்கு! எனவே தபால்காரர், நாங்கள் வீடு காலி செய்தது அறிந்து ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அக்கடிதத்தை திருப்பி அனுப்பி இருப்பார்! நான் +2 எழுதி மாநில அளவில் மகா மட்டமாய் மார்க் எடுத்த காரணத்தினாலே (எழுநூத்தி சொச்சம்!) தற்காலிகமாக எல்லா பொழுது போக்கு அம்சங்களும் என்னிடம் இருந்து (மீண்டும் ஒருமுறை) துண்டிக்கப்பட்டன!

இவ்வாறாக ஒரு சிறந்த கவர் ஆர்டிஸ்ட் ஆக பின்நாளில் மிளிரிந்திருக்க கூடிய கார்த்திக் நாய் கடியில் இருந்து தப்பித்தார். 

பி. கு.: என்னாது? என் கடியில் இருந்து நீங்க எப்ப தப்பிப்பதா? சிம்பிள், ஒடனே Alt+F4 அமுக்குங்க!

:) :) :)

விஜயன் சாருக்கு ஒரு விண்ணப்பம்:
என்னை போன்ற வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கிரெடிட் கொடுத்திடும் நீங்கள், உங்கள் அலுவலக ஊழியர்களையும் அறிமுகப்படித்திடலாமே! குறிப்பாக நமது கவர் ஆர்டிஸ்ட்டை!

கருத்துகள்

 1. விஜயன் சாரின் "Signature" கையெழுத்தின் ரசிகர்கள் அவருக்கு கோரஸாக ஒரு ஓ போடுங்கள் பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
 2. ஏற்கனவே ஒரு முறை உங்க பிளாக்குக்கு வந்தேன்..இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்..அருமையான எழுத்து பாணி..தொடருங்கள்..மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. Excellent....
  கலக்குறீங்க கார்த்திக்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் எழுத்து உங்க வயித்த கலக்காதவரைக்கும் சந்தோசம்தான்! :)

   நீக்கு
 4. பதில்கள்
  1. நன்றாக மனது விட்டு "ஹா... ஹா..." என்று சிரித்திடுங்கள் நண்பரே! :D

   நீக்கு
 5. புதிய எதிர்பார்க்காத தகவல்கள். இப்பொழுது புதியதாக வரையும் கவர் டிசைன்களை ஸ்கேன் செய்து போடலாமே ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவர் டிசைன் எல்லாம் +2 மார்க் ஷீட் பார்த்த என் பெற்றோர் என் முதுகில் டிசைன் வரைந்ததோடு ஓவர்! :) ஒன்றிரண்டு ஸ்கூல் படிக்கும்போது வரைந்தது இருக்கிறது, நேரம் கிடைத்திடும் போது வெளியிட்டு டார்ச்சர் செய்கிறேன்! ;)

   நீக்கு
 6. அய்யகோ நான் நீங்க சொன்னவுடனே எஸ்கேப் ஆயிட்டேன் இருந்தாலும் மனசு கேட்கலை நல்லா எழுதரங்கய்யா லட்டரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கோ என்னா சொல்லோ வரீங்கோ? ஒன்னிமே புரிலியே! நான் ஒங்ககிட்ட என்னா சொன்னேன்? நீங்கோ என்னாத்துக்கு எஸ்கேப் ஆணிங்கோ? லயனுக்கு மட்டும்தான்னு இல்ல நெறைய "ஆளுங்களுக்கு" எழுதிர்க்கேன்! அது என்னாத்துக்கு இங்கே, விடுங்கோ :)

   நீக்கு
  2. உங்க திறமையை உலகம் வெகுவாக பாராட்டும் என்னை போல கத்துக்குட்டி கம்ப்யூட்டர் நண்பர்கள் Alt+F4 அழுத்திக்கொண்டு வெளியேறி வெளிறி பின் வந்தால் இப்படித்தான் சொல்வோம் நண்பா

   நீக்கு
 7. எனக்கு கூட நிறைய லெட்டர் வந்தது அப்புறம் டைம் கிடைச்சா இதுக்கு பழி வாங்கறேன்

  பதிலளிநீக்கு
 8. இளம் வயதில் என் வீட்டில் அனைவரும் ஏண்டா இப்படி காமிக்ஸ் காமிக்ஸ்ன்னு திரியுற என்று திட்வார்கள்.இதைப்படித்தவுடன்.ஓ எனக்கு அண்ணன்களெலம் இருக்கின்றார் என்று.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia