நாம்
சிறுவயதில் மிகவும் பிரயத்தனப்பட்டு சேகரித்த காமிக்ஸ் மற்றும் இதர
புத்தகங்கள் விலை மதிப்பற்றது என்பதை நாம் அறிவோம்! நாம் அன்று ஒரு சில
ரூபாய்கள் கொடுத்து வாங்கிய புத்தகங்களை, இன்று யாரேனும் பல ஆயிரங்கள்
கொடுத்துக் கேட்டாலும் விற்க மாட்டோம் என்பது புத்தகங்கள் மீது காதல்
கொண்ட
ஒவ்வொரு சேகரிப்பாளருக்கும் தெரியும்! ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத
சங்கதி ஒன்று இருக்கிறது! அது, பாடுபட்டு சேர்த்த புத்தகங்களை முறையாக
பாதுகாப்பது எப்படி என்பது பற்றிதான்! நான் சிறு வயதில் ஒரு காமிக்ஸ்
புத்தக சேகரிப்பாளனாய் இருந்தேன் - வேலை கிடைத்ததும் புத்தகங்களைத் தூக்கி
பரணில் போட்டு விட்டு பத்து வருடங்கள் காமிக்ஸ் பக்கமே திரும்பாமல்
இருந்தேன்! 2007-இல் மீண்டும் அந்த புத்தகங்களை பிரித்துப் பார்த்தபோது
ஏற்ப்பட்ட அதிர்ச்சி அளவில் அடங்காது!
எனது அனுபவம் கற்று தந்த பாடம் மற்றும் இணையம் மூலம் புத்தக பராமரிப்பு பற்றி நான் அறிந்த பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை, உங்களுடன் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள போகிறேன்! கீழ் காணும் தகவல்களில் பெரும்பாலானவை, நான் பற்பல இணைய தளங்களில் இருந்து சேகரித்த தகவல்களாகும்! இப்பதிவில் ஏற்கனவே இல்லாத, புத்தக பராமரிப்பு பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டங்கள் மூலம் தெரியப்படுத்தி இப்பதிவை மேம்படுத்த உதவுங்கள்! அத்தகவல்களை நீங்கள் பிறிதொரு இடத்தில் இருந்து அறிந்திருக்கும் பட்சத்தில், அதற்கான மூலத்தையும் அத்தகவலுடன் கொடுத்திட விழைகிறேன்!
கவனிக்க:
இக்குறிப்புகள் முறையாக இன்னும் வரிசைப்படுத்தவில்லை. உங்கள் கருத்தை
அறிந்து, சில கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்க படங்களை இணைத்து விரைவில்
இவற்றை ஒழுங்குபடுதுவேன்! எனது அனுபவம் கற்று தந்த பாடம் மற்றும் இணையம் மூலம் புத்தக பராமரிப்பு பற்றி நான் அறிந்த பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை, உங்களுடன் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள போகிறேன்! கீழ் காணும் தகவல்களில் பெரும்பாலானவை, நான் பற்பல இணைய தளங்களில் இருந்து சேகரித்த தகவல்களாகும்! இப்பதிவில் ஏற்கனவே இல்லாத, புத்தக பராமரிப்பு பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டங்கள் மூலம் தெரியப்படுத்தி இப்பதிவை மேம்படுத்த உதவுங்கள்! அத்தகவல்களை நீங்கள் பிறிதொரு இடத்தில் இருந்து அறிந்திருக்கும் பட்சத்தில், அதற்கான மூலத்தையும் அத்தகவலுடன் கொடுத்திட விழைகிறேன்!
புத்தக பாதுகாப்பு முறைகள்:
- புத்தகங்களை அதிக வெப்பம், ஈரப்பதம், தூசி இல்லாத அறையில் அல்லது அலமாரியில் பாதுகாக்கவும்
- ஈரப்பதம் மற்றும் செல்லரித்ததால் பாதிக்கப்பட்ட புத்தகங்களை பிற புத்தகங்களுக்கு அருகில் வைத்திட வேண்டாம், முடிந்தால் தனியே பாதுகாக்கவும்
- புத்தகங்களை பரணில் அல்லது வீட்டின் கிடங்கில் (Store room) ஒருபோதும் வைத்திட வேண்டாம். அதிகபட்ச ஈரப்பதமும், பூச்சிகளும் உங்கள் புத்தகங்களை பதம் பார்த்திடும்!
- புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்ககூடாது, மாறாக அவைகளை நிற்பாட்டிய நிலையில் வைக்கவும்
- புத்தகங்களை அடுக்கும் முறை:
- ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் அளவை விட சற்றே பெரிதானதொரு "Mylar" பிளாஸ்டிக் உறையில் வைத்திட வேண்டும். புத்தகத்தை நுழைப்பதற்கு முதல் அதற்கு சாய்மானமாக, Mailaar உறை அளவிலான ஒரு அட்டையை வைத்திடவும் (கடின அட்டை கிடைக்கவில்லையெனில், இரண்டடுக்கு கார்ட்போர்ட் அட்டையை உபயோகித்திடலாம்). சாதாரண PVC பிளாஸ்டிக் உறையை பயன்படுத்துவது நல்லதல்ல!
- இவ்வாறு பலப்படுத்தப்பட்ட புத்தகத்தை ஒன்றன் மீது ஒன்றாக சாய்வாக நிற்பாட்டி வைக்கலாம்!
- முடிந்த வரை ஒரே அளவிலான புத்தகங்களாக பிரித்து அடுக்கவும்
- பத்து அல்லது பதினைந்துக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாறு அடுக்கிட வேண்டாம்
- மூடியுடன் கூடிய அட்டைப்பெட்டிகளில் மேற்கண்டவாறு சிறிது சிறிதாய் புத்தகங்களை பிரித்து வைக்கலாம். இவ்வாறு அட்டை பெட்டிகளில் மூடி வைப்பது பூச்சிகளையும், ஈரப்பததையும் கட்டுப்படுத்தும்
- சில மாதங்களுக்கு ஒரு முறை பெட்டிகளை திறந்து புத்தகங்களை கண்காணியுங்கள்!
- செய்தித்தாள் அல்லது மட்ட ரக தாள்கள் மூலம் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டாம், இது புத்தக அட்டையை பழுப்பேற செய்யும்!
- கிழித்த புத்தகங்களை பின் அடிப்பது, கிளிப் செய்வது, ரப்பர்பேண்ட் மூலம் கட்டுவது போன்ற முறைகளை தவிர்க்கவும் - இவைகள் துருப்பிடித்தோ அல்லது ரப்பர் ஒட்டியோ புத்தக அட்டை மற்றும் உள்பக்கங்களை பாழ் செய்திடும்
- கிழிந்த பக்கங்களை சாதாரண பிளாஸ்டிக் பசைநாடா (Cellotape!) மூலம் ஒட்டக்கூடாது! முடிந்தால் உயர்தர நிறம், வழுவழுப்பில்லாத, மின்னாத நாடாக்களை பயன்படுத்தவும்! (உ.ம். Scotch Magic Tape)
- மடங்கிய பக்கங்களை சீராக்குவதாய் நினைத்து புத்தகத்தின் மேல் அதிக எடை உடைய பொருட்களை பல மணி நேரம் வைப்பது தவறு
- சுருண்ட பக்கங்களை நேராக்க இஸ்திரி பெட்டியை கட்டாயமாக உபயோகிக்க கூடாது! இது தாளை பழுப்பேற்றி விரைவில் பொடித்துப்போக செய்யும்!
- அளவுக்கதிகமாக அந்துருண்டைகளை உபயோகிக்க வேண்டாம், புத்தகத்தில் உள்ள மீன் போன்ற புழுக்களை இது ஏதும் செய்வதில்லை (நான் அறிந்த வரையில்)! மாறாக நாப்தலின் உருண்டைகளின் அதீத வேதித்தன்மை தீங்கையே விளைவிக்கும்!
- கரப்பான் பூச்சிகளும் மிக ஆபத்தானவை, அவற்றை கட்டுக்குள் வைத்திடுங்கள்! அதற்காக கொல்லி மருந்து தெளிப்பான்களை பயன்படுத்தி புத்தகங்களை குளிப்பாட்டிட வேண்டாம்!
- உணவுப்பொருட்களை புத்தகங்களுக்கு அருகில் வைக்கவேண்டாம்
- புத்தகங்களை கணக்கெடுப்பதாக நினைத்துக்கொண்டு அதன் மேல் வெளியீடு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத வேண்டாம்!
- மாறாக ஒரு சிறிய காகிததில் தேவையான விவரங்களை எழுதி புத்தக மேற்பரப்பில் தெரியுமாறு வைத்துக்கொள்ளுங்கள்!
- சில புத்தகங்களில் முன் மற்றும் பின்னட்டை மேல் ஒட்டி இருக்கும் பிளாஸ்டிக் மேலுறையை தனியே பிரிக்க வேண்டாம் (உ.ம். ஆரம்ப கால ராணி காமிக்ஸ்). அவ்வாறு பிரிக்கும் போது அந்த அட்டை பளபளவென்று புதிது போல மின்னி உங்களை மகிழ செய்யலாம், ஆனால் விரைவிலேயே தூசு மற்றும் அழுக்கு ஒட்டி அதிகமாக சேதமடைந்து விடும்!
- படிக்கும் / கையாளும் முறை:
- பழைய புத்தகங்களை படிக்க நினைத்தால் அதை இன்னொரு புத்தகத்தின் உள்ளே வைத்து, சமதளத்தில் கிடத்தி அதிகம் கை படாமல் படிக்கவும்
- பக்கங்களை எச்சில் அல்லது பசை தொட்டு திருப்பக்கூடாது!
- புத்தகங்களை (பக்கங்களை) மடிக்கவோ, வளைக்கவோ கூடாது!
- புத்தகங்களின் அருமை அறியாதவர்களிடம், குறைந்த பட்சம் பார்க்க கூட கொடுக்க வேண்டாம்! அவர்களுக்கு நிச்சயமாக புத்தகத்தை எப்படி கையாளுவது என்று தெரிந்திருக்காது!
- முடிந்த வரை உள்பக்கங்களை ஸ்கேன் செய்வதை தவிருங்கள்!
- - தொடரும் -
உதவி தேவை:
அமில
தன்மையற்ற மைலார் பிளாஸ்டிக் உறை மற்றும் கடின அட்டைகள் எங்கே கிடைக்கும்
என யாருக்காவது தெரியுமா? தற்போதைக்கு நான் உயர் தர "File Folder" உள்ளே
இருக்கும் பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்துகிறேன் (Document quality
sleeves)! அட்டைக்கு சாதாரண கார்ட்போர்ட் அட்டையை உபயோகிக்கிறேன்.
நன்றி: நண்பர் ஈரோடு ஸ்டாலின் தம்முடைய நண்பர் பொள்ளாச்சி நசன் அவர்களிடம் இருந்து பெற்றுத் தந்த குறிப்புகள் சிலவற்றை கீழே காணலாம் - அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்!:
- வெப்பம் குறைவான இடம் பூஞ்சைகள் வளர வழி வகுக்கும் ஆகவே புத்தகங்களை சற்று உலர்வான இடத்தில் வைப்பது நலம்.
- தஞ்சை பல்கலை கழகத்தில் ஒரு பாதுகாப்பு பொடி விற்பனை செய்ய படுகிறது - அதனை வாங்கி அலமாரிகளில் வைக்கலாம். அல்லது புத்தகங்கள் மேல் படாமல் மஞ்சள் தூள் பரப்பி வைக்கலாம்!
- புத்தகத்தை ஒட்டும் பொழுது பசை இருந்தால் அதனை நாடி பூச்சிகள் வரும் அதனை தவிர்க்க வஜ்ரம் சேர்க்கலாம்.
- புத்தகத்தின் pin-களை நீக்கி விட்டு (துருப்பிடிப்பதை தவிர்க்க), அதற்கு பதிலாக - மேல் ஒரு அட்டை கீழ் ஒரு அட்டை வைத்து நூல் கொண்டு கட்டவும்!
- கிழிந்த பகுதியை ஒட்ட செல்லோ டேப் உபயோகிக்கக் கூடாது - நகல் எடுக்கும் போது அவ்விடம் கருமையாய் தெரியும்!
- குறிப்பாக புத்தகத்தை அதிகம் புரட்டாமல் இருப்பது நலம்
- புத்தகங்களின் வாழ்நாள்!:
- சாணித்தாள் 35 ஆண்டுகள்
- நோட்டிஸ் பேப்பர் 50 ஆண்டுகள்
- தரமான வெள்ளைக் காகிதம் 60 முதல் 70 ஆண்டுகள்
- கெட்டியான வழுவழுக் காகிதம் 100 முதல் 160 ஆண்டுகள்
- http://www.loc.gov/preservation/care/books.html
- http://dlis.dos.state.fl.us/archives/preservation/books/index.cfm
- http://www.ehow.com/how_14516_preserve-comic-books.html
- http://www.ehow.com/how_5597739_protect-books-papers-silverfish.html
- http://www.boldsky.com/home-n-garden/improvement/2011/preserve-maintain-book-091211.html
- http://blog.archive.org/2011/06/06/why-preserve-books-the-new-physical-archive-of-the-internet-archive/
- http://www.preservation.gc.ca/howto/articles/books_e.asp
me the first nanba appuram varen
பதிலளிநீக்குஅனைவர்க்கும் பயன் தரும் வகையில் மிகவும் சிரத்தை எடுத்து எழுதி உள்ளீர்கள் . ஊம்............... முன்பே எப்படி யாராவது சொல்லிருந்தால் உங்கள் நிலை எனக்கும் ஏற்பட்டிருக்காது . நன்றி நண்பரே .....
பதிலளிநீக்குஉபயோகமான பதிவு நண்பரே,
பதிலளிநீக்குஇந்த பதிவைப் பார்த்த உடன் ஊருக்கு போய் புத்தகங்களை இன்னும் கொஞ்சம் ஒழுங்காக அடுக்கி வைக்க தோன்றுகிறது.
என்னிடம் இருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் 12 ~15 வயதுடையவை தான். புத்தகங்களுக்கு என்று ஒரு தனி இரும்பு பீரோவை ஒதுக்கி விட்டதால் கரையான், ஈரம் போன்ற பிரச்சனைகள் இல்லை. அதரப் பழசான புத்தகங்களை மட்டும் பிளாஸ்டி கவாரில் வைத்துள்ளேன். என்னைப் பொருத்த வரை புத்தகங்களை பொக்கிஷங்கள் போல் பூட்டி வைக்காமல் அவ்வப்போது கலெக்ஷனை அனுகி ஓரிரு புத்தகங்கள் எடுத்தூ படித்திட்டால் புத்தகங்களுக்கான பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் அது கை மிஞ்சி போகும் முன் தடுத்து விடலாம்.
நான் லயன் சேகரிப்பை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் மேய்ந்திடுவது வழக்கம். ஆனால் தனியாக ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருக்கும் ராணி காமிக்ஸ் சேகரிப்பின் நிலை தான் என்னவென்று தெரியவில்லை. அடுத்தமுறை ஊருக்கு போகையில் கண்டிப்பாக அந்த பெட்டியை திறப்பது தான் முதல் வேலை
@John: வழக்கம் போல மிக்க நன்றி நண்பா! :)
பதிலளிநீக்கு@Stalin: நீங்கள் லயன் தளத்தில் இது பற்றி இட்ட பின்னூட்டதிற்கு மிக்க நன்றி! உங்கள் நண்பரிடம் இருந்து இது பற்றிய தகவல்கள் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள்!
@Siv: ஹ்ம்ம்.. உண்மையை சொன்னால் முன் போல, ஏற்கனவே படித்த காமிக்ஸ் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க எனக்கு பொறுமை இருப்பதில்லை! அன்று மிகவும் பிடித்த பல புத்தகங்களை இப்போதெல்லாம் ஓரிரண்டு பக்கங்கள் தாண்டி படிக்க முடிவதில்லை! :(
Excellent tips buddy .carry on ur good work
பதிலளிநீக்குThank you Arun!
நீக்குகாமிக்ஸ் உருவாக்க ஒர் அரிய வாய்ப்பு! உங்களிடம் புது காமிக்ஸ்க்கு கரு/கதை/வரைபடம் இருந்தால், அதை உருவாக்க அனைத்து உதவிகள் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடர்பு:9942477580
பதிலளிநீக்குநன்றி நண்பரே! ஆனால், நான் ஒரு சாதாரண காமிக்ஸ் வாசகன் மட்டுமே! உங்களது முயற்சி தகுதியானவர் உறுதுணையுடன் வெற்றியடைய வாழ்த்துக்கள்! :)
நீக்குநான் என் பழைய புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க பழைய புத்தக வியாபாரியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். மிகவும் பாதுகாப்பான இடம் அதுதான். உங்களுக்கு எந்த வித சிரமமும் (படிக்கவேண்டிய சிரமம் உட்பட) கிடையாது.
பதிலளிநீக்குதவிர பழைய புத்தக வியாபாரி கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் கணக்குப் போட்டு உங்களுக்குக் கொடுப்பார்.
இது ஒரு ஆயுட்காலத்திட்டம். அதாவது உங்கள் மக்கள் செய்வதை நீங்கள் இப்போதே செய்கிறீர்கள். அவ்வளவுதான்.
பழனி.கந்தசாமி ஐயா: உங்கள் கருத்தில் ஹாஸ்யம் தெறித்தாலும் அதனூடே ஒரு மென்சோகமும் இழையோடுவதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது! :( எனது மகன் பெற்றோரின் மதிப்பு உணர்ந்து வளர்வான் என நம்புவோமாக!
பதிலளிநீக்குThanks for sharing preservation technics
பதிலளிநீக்குThanks a lot for the post. It is very much useful. Where we can get the Mylar covers and is it available in different sizes? What would be the cost? If you post additional info, it will be more useful to us.
பதிலளிநீக்குThanks Sankar! As far as I checked Mylar covers are not available in Bangalore - not sure in other parts of India. However you can get them in US (if you or your friends visiting there).
நீக்குAvailable in different sizes:
http://www.amazon.com/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=BCW+bags
உங்களுடைய புத்தக பராமரிப்பு குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக, நன்றி கார்த்திக் சார்.
பதிலளிநீக்குநன்றி ராஜ்!!
நீக்குபயனுள்ள விடையம் சொன்ன தங்களுக்கு என் அன்பும் நன்றிகளும்...
பதிலளிநீக்குநன்றி !
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் நிறைய இருந்தன நான் குறித்து கொள்வேன்..
பதிலளிநீக்குஆனால் எனக்கு தேவையான முக்கிய தகவல் "எலி" கடிக்காமல் பாதுகாக்க வழி இருந்தால் கூறுங்களேன் அண்ணா..
சமீபத்தில் நிறைய புத்தகங்களை எலி கடித்து விட்டது..
அட்டை பெட்டியில் தான் அடுக்கி வைத்து இருந்தேன்..
எப்படி பாதுகாப்பது விளக்கம் கிடைக்குமா அண்ணா..
என்னுடைய புத்தக அலமாரி திறந்தநிலை அலமாரி; அதில் ஈரப்பதம் அதிகம் சேர்கிறது, இதனால் புத்தகத்தின் உள் தாளகள் ஒன்றை ஒன்று ஒட்டிக் கொண்டு, பிரிக்க முடியாமல் நைந்து போகிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து இவர்களை பராமரிக்கும் சூழல் இல்லை, ஆயினும் புத்தகங்கள் எனக்கு உற்ற நண்பனாக பல தேடல்களுக்கு விடைகளாக இருக்கிறது.
எறும்புகள்ம்பு மற்றும் ஈரப்பதம் இல்லாமல் இருக்க ஒரு எளிய வழிமுறைகளை தெரிவிக்கவும் தங்களின் குறிப்புகள் மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கிறது.
புத்தகங்களுக்கு பிளாஸ்டிக் கொண்டு மேல் அட்டையாகப் போட்டு பாதுகாக்கலாமா...?
பயனுள்ள குறிப்புகள் வழங்கியமைக்கு நன்றி; வாழ்த்துகள்.