நான் ரொம்ப யோக்கியம் என்றெல்லாம் சொல்ல வரவில்லை! நான் பல இடங்களில்
கவனித்த, பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட எரிச்சலூட்டும் விஷயங்களை இங்கே
பகிரப் போகிறேன். அறிவுரை கூறுவதும், குறை சொல்லுவதும் எளிதான
காரியங்கள்தான். ஆனால் நாம் அனைவரும் சிறிது சிறிதாக சில விஷயங்களில் நம்மை
மாற்றிக் கொண்டால், இந்தியா இன்னும் இனியதாகிவிடும்! இது ஒரு தொடர்
பதிவாக இருக்கப்போவதினாலே, தொடர்வண்டியுடன் துவங்குகிறேன்! மழுங்கிய என்ற சொல்லுக்கு முன்னாள் மூளை, அறிவு, common sense இவற்றில் உங்களுக்கு பிடித்ததை இணைத்துக்கொள்ளுங்கள்!
ஓரளவு பெரிய இரயில் நிலையங்களில் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? coach position-ஐ அறிவிப்பதற்கான டிஜிட்டல் போர்ட்களை, ஃபிளாட்பாரத்தில் வரிசையாக மாட்டி இருப்பார்கள்! ஆனால் பெரும்பாலான இடங்களில் அவை இயங்கும் நிலையில் இருப்பதில்லை என்பதுதான் வேடிக்கை! சில இடங்களில் போனால் போகிறதென்று வாசலருகே ஒரு போர்டு வைத்திருப்பார்கள் - அதில் எந்த கோச் எங்கு நிற்கும் போன்ற விவரங்கள் யாருக்கும் புரியாத வண்ணம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்! இவை எதுவுமே இல்லாத இரயில் நிலையத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் முடிந்தது உங்கள் கதை! அதுவும் கூடவே ஒரு வயதானவர் இருந்தால் கேட்கவே வேண்டாம்!
அடித்து பிடித்துக்கொண்டு தகவல் மையத்தில் கேட்டால் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு பதில் சொல்வார்கள்! நொந்து போய் வேறு வழியில்லாமல் ஃபிளாட்பாரத்தில் உள்ள கடைகளில் கேட்டால், முனங்கிக்கொண்டே (வந்துட்டாண்டா, இன்னிக்கு இவன் நானூத்தி நாப்பதாவது ஆள்) "பெங்களூர் எக்ஸ்பிரஸ் S6-ஆ? இன்னும் ஒரு நாலு பெட்டி தள்ளி போங்க" என்று குத்து மதிப்பான பதில் வரும்! உங்களுக்கு கனிவான பதில் வேண்டுமென்றால் முதலில் ஏதாவது ஒரு பிஸ்கட் பேக்கட்டோ அல்லது தண்ணீர் பாட்டிலோ வாங்க வேண்டும்! "பெங்களூர் எக்ஸ்பிரஸ் S6-ஆ?- இங்கேயே நில்லுங்க சார் - கரெக்டா இங்கதான் வரும்!" என்ற பதில் வரும்.
சரியான இடத்தை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் தாவூ தீர்ந்துவிடும்! வழியில் நந்தி மாதிரி சிலபேர் நகராமல் அடம் பிடிப்பார்கள், சில பேர் சாவகசமாக பெட்டியை உருட்டிக்கொண்டு நடப்பார்கள்! ஒரு வழியாக நமது கோச்சிற்க்கான இடத்தை வந்தடைந்து விட்டாலும் உட்கார இடம் கிடைக்காது! தாங்கள் மட்டும் உட்காராமல், தமது பெட்டி படுக்கைகளையும் இருக்கைகள் மேல் வைத்துக்கொண்டு சாவகாசமாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்! இது என்ன மாதிரியான ஒரு பழக்கம் என்று எனக்கு புரியவில்லை! வாய் விட்டு கேட்ட பிறகே பாதி மனதுடன் கொஞ்சமாக பெட்டியை நகர்த்தி விட்டு இடம் கொடுப்பார்கள்!
அதிலும் ஸ்பீக்கரில் வருகை நேரம் அறிவிப்பார்கள் பாருங்கள்! தகர டப்பாவில் எலி புகுந்த மாதிரி ஒரு குரலில், ஒரு மயிரும் புரியாது... வண்டி வந்ததும் ஏறுவதற்கான தள்ளு முள்ளுகளும் தவறாமல் நடக்கும்! குழந்தைகளை, பெரியவர்களை முதலில் ஏற விடலாமே என்ற சிந்தனை எல்லாம் யாருக்கும் தோன்றுவதில்லை. பத்து மணியை தாண்டிய இரவு நேர வண்டிகளில் இன்னொரு பிரச்னை - கதவுகளை உள்ளிருந்து தாழ்பாள் போட்டுக்கொண்டு திறக்கமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள்! இங்கு ஏற முடியாமல் நாம் அவதிப்படுவதை கண்டும் காணாமலோ அல்லது தூங்குவது போலவோ நடித்து தவிர்த்து விடுவார்கள்!
வண்டியில் ஏறியது சகல பிரச்சினைகளும் ஓய்ந்தது என்றெல்லாம் சந்தோஷப்பட
முடியாது, முக்கியமானவையே அப்பொழுதுதான் ஆரம்பிக்கும்! வயதானவர்கள்
உடனிருந்து, அவர்களுக்கு லோயர் பர்த் இல்லாமலிருந்தால் மற்றவர்களிடம்
மாற்றிக் கொள்ள கேட்பதை போன்ற சங்கடமான செயல் வேறெதுவும் இல்லை. கொடுக்க
மனமில்லாமல் பல்வேறு காரணங்களை சொல்வார்கள். குழந்தைகளோடு
செல்பவர்களுக்கும் இதே கதிதான்!
முறையாக டிக்கெட் வாங்கி விட்டு நாம் இவ்வளவு பயப்படுவோம் - ஆனால் டிக்கெட் வாங்காமலோ அல்லது வெய்டிங் லிஸ்டிலோ வருபவர்கள் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்! காலியாக இருக்குமிடத்தில் ஜம்பமாக உட்கார்ந்து கொள்வார்கள் அல்லது பெட்டி படுக்கைகளை மற்றவர்கள் இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு TTE-யை தேடி புறப்பட்டிருப்பார்கள்! ஒரு வழியாக நமது இருக்கையில் உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்குள் 'என்ன மச்சான் சாப்ட்டியா' என்றவாறே ஒரு வானரக் கும்பல் நெருக்கி அடித்து உட்கார்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்து விடும். லேசாக முறைத்தால் சில பேர் விலகி விடுவார்கள். அப்பர் பர்த் அல்லது பக்கவாட்டில் படுக்கை இருந்தால் எதற்கும் கவலைப்படாமல் தூங்க போய் விடலாம். மிடிலோ, லோயரோ என்றால் மற்றவர்கள் திண்ணையை காலி பண்ணும் வரை முறைத்துக்கொண்டு உட்கார வேண்டியதுதான். சாப்பிட்டு விட்டு கொஞ்சமும் நகராமல் ஜன்னல் வழியாகவே கை கழுவும் கையாலாகதவர்களும் உண்டு! பின்னால் இருப்பவர்களுக்கு இட்லி சாம்பார் அபிஷேகம் இலவசம்.
சில பேர்கள் இரயில் வண்டியையே தமது சொந்த வீடாக நினைப்பவர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றி எந்த ஒரு கவலையுமில்லாமல் ஏகாந்தமாக லுங்கிக்குள் நுழைந்து கொண்டே, பேண்டை சொத்தென்று தரையில் விழ வைப்பார்கள்! சில பேர் நான்கைந்து படுக்கை விரிப்புகளையும், தலையணைகளையும் பாந்தமாக தூங்க வசதியாக அமைத்துக் கொள்ளுவதை பார்த்தால் நமக்கே பொறாமையாக இருக்கும். சமீபத்தில் ஒரு கும்பல் automatic air-freshner வேறு கொண்டு வந்திருந்தது, ஜாஸ்மின் வாடையில் எனக்கு மறுநாள் சளி பிடித்ததுதான் மிச்சம்!
இந்திய இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பெயர் "போனவை"! முழுக்க முழுக்க நிர்வாகத்தின் மேல் குறை சொல்லி விட முடியாது. மலமோ, சிறுநீரோ கழித்துவிட்டு தண்ணீர் (வந்தாலும்) ஊற்றிக் கழுவாமல் வருவது நம் தவறுதான். மஞ்சளாக அப்படியே விட்டு விட்டு அடுத்து உபயோகிக்க வருபவரை வாந்தி வரவைக்கும் மனித நேயமிக்க மனிதர்கள்தானே நாம்?. கழிப்பறை தாழ்பாளை தொடக் கூட அருவருப்பாக இருக்கும் - ஈரக்கையோடு முன்னே தொட்டு சென்றவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. குழாய்களில் வரும் தண்ணீரில் துருப்பிடித்த இரும்பின் நாற்றம், அதைக்கொண்டு சிலபேர் பரபரப்பாக பல் விளக்குவதை பார்க்கும் போது ரொம்பவுமே வியப்பாக இருக்கும்!
மேலே சொன்னவை ஒரு சின்ன சாம்பிள்தான்! இவற்றை போன்ற பற்பல எரிச்சலூட்டும் சங்கதிகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் இந்திய ரயில்வேயில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது! நம்மால் முடிந்ததை நாம் மாற்றிக்கொள்ளலாமே நண்பர்களே! இன்னுமொரு எரிச்சலூட்டும் பதிவில் விரைவில் சந்திப்போம்! :)

படுத்து முழுதாய் பத்து நிமிடம் ஆவதற்குள் TTE எழுப்பி விடுவார்.
வந்ததோடல்லாமல் லைட் போட்டு விட்டு போய் விடுவார். தூங்க முயற்சித்தால்,
மறுபடியும் பக்கத்தில் அரட்டை கச்சேரி ஆரம்பித்திருக்கும். அர்த்தமே
இல்லாமல் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். தூரத்தில் இளையராஜாவோ, SPB-யோ
கர்ண கடூரமாக மொபைலில் அலறிக்கொண்டிருப்பார்கள். சில மணிநேரங்களுக்குப் பிறகு எல்லாரும்
ஒரு வழியாக அடங்கி, நாம் கொஞ்சம் நேரம் தூங்குவதற்குள் ஏதாவது ஒரு பெரிய
இரயில் நிலையத்தில் பத்து நிமிஷம் வண்டி நின்று விடும் - தூக்கமும் போய்
விடும். அப்புறம் சிவராத்திரிதான்!
இந்திய இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பெயர் "போனவை"! முழுக்க முழுக்க நிர்வாகத்தின் மேல் குறை சொல்லி விட முடியாது. மலமோ, சிறுநீரோ கழித்துவிட்டு தண்ணீர் (வந்தாலும்) ஊற்றிக் கழுவாமல் வருவது நம் தவறுதான். மஞ்சளாக அப்படியே விட்டு விட்டு அடுத்து உபயோகிக்க வருபவரை வாந்தி வரவைக்கும் மனித நேயமிக்க மனிதர்கள்தானே நாம்?. கழிப்பறை தாழ்பாளை தொடக் கூட அருவருப்பாக இருக்கும் - ஈரக்கையோடு முன்னே தொட்டு சென்றவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. குழாய்களில் வரும் தண்ணீரில் துருப்பிடித்த இரும்பின் நாற்றம், அதைக்கொண்டு சிலபேர் பரபரப்பாக பல் விளக்குவதை பார்க்கும் போது ரொம்பவுமே வியப்பாக இருக்கும்!
மேலே சொன்னவை ஒரு சின்ன சாம்பிள்தான்! இவற்றை போன்ற பற்பல எரிச்சலூட்டும் சங்கதிகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் இந்திய ரயில்வேயில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது! நம்மால் முடிந்ததை நாம் மாற்றிக்கொள்ளலாமே நண்பர்களே! இன்னுமொரு எரிச்சலூட்டும் பதிவில் விரைவில் சந்திப்போம்! :)
ஏனுங்க இப்படி கொலைவெறி. இருக்கிற வேதனைகள் போதாதென்று நீங்க வேற உங்க பங்குக்கு வெறியேத்தறீங்க? அடுத்த தடவ ரயில்ல போறப்ப ரெண்டு கொலையாவது பண்ணப்போறனுங்க.
பதிலளிநீக்குபல பிரச்சினை களை சந்திச்சு இருப்பீங்க போல...
பதிலளிநீக்கு@ பழனி.கந்தசாமி: ஐயா, (ஹய்யா!) மொதல்ல அதப் பண்ணுங்க - ஆனா அதுக்கு காரணம் என் ப்ளாக்தான்னு மாட்டி வுட்றாதீங்க :D
பதிலளிநீக்கு@ கோவை நேரம்:மாசம் நாலு தடவ குடும்பத்தோட ட்ரைன்ல போய்ப் பாருங்க, தன்னால புரியும் ;)
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்திய்ல் வாழும் நம்மள ரொம்பபப... நல்லவங்கனு .... சொல்லுறதுக்கு தான் ஆள் இல்லை ..
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் புகைவண்டி பயணம் சுகமே தனிதான் . புகை வண்டி சிநேகிதமும் தான் ..
நடுசாமத்தில் பதிவு போட்டு பகலில் என்னை வேளைக்கு தாமதமாக அனுப்புவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
பதிலளிநீக்கு@ Erode M.STALIN: ஸ்டாலின் ரொம்ப நல்லவரு, வல்லவரு, வேலை நேரத்துல என் ப்ளாக் படிக்கற தங்கமான மனுஷரு! போதுமா ஸ்டாலின் சார் :)
பதிலளிநீக்குவசிஷ்டர் வாயால் மகரிஷி பட்டம் ..... நன்றி குரு ....( நாங்களும் பதிலுக்கு நன்றி சொல்லுவோமல்ல .....)
பதிலளிநீக்கு@Stalin: நீங்க வேற, சின்ன பையனை போய் என்னென்னவோ சொல்லிக்கிட்டு... நான் உங்க சிஷ்டன் - அப்படி வேணும்னா வச்சுக்கலாம் ;)
பதிலளிநீக்குஇந்த எரிச்சல் இங்கே எக்கச்சக்கமா இருக்கு ..!
பதிலளிநீக்குதன்னடக்கம் = பிளேடு கார்த்திக்
பதிலளிநீக்குNamma aalungalai thirutha mudiyathu..!
பதிலளிநீக்குசொ(நொ)ந்தக் கதையா?
பதிலளிநீக்கு(எனது பதிவு 'ரயில் பயணங்களில்...' படித்தீர்களா?)
இன்னும் இல்லை, லிங்க் ப்ளீஸ் :)
பதிலளிநீக்குWhatever be the thing, world's cheapest transport system is our Indian railway.If our mentality change we can change many things. We need strong committed and honest people to inculcate the change in the minds of the people. Eg. Delhi Metro. ( uncomparable.. see how the same indian citizens behaviour in a Metro train and other trains)
பதிலளிநீக்குநீங்க சொல்லுற அனைத்தையும் நானும் அனுபவிச்சு இருக்கிறேன். நாமதான் மாறிக்கனும் . எவனும் மாறபோறது இல்லை
பதிலளிநீக்கு////இன்னுமொரு எரிச்சலூட்டும் பதிவில் விரைவில் சந்திப்போம்! :)/// மறுபடியும் எரிச்சலூட்டும் பதிவிலா... ம்...ம்.. என்ஜாய்...
பதிலளிநீக்குஇன்று காலை சந்தித்த ஒரு கடுப்பு சமாச்சாரத்தை உங்களுக்கும் எத்திவிட நினைக்கிறேன். உறவினர் ஒருவரை ஏற்றிவிட சென்றபொழுது
பதிலளிநீக்கு1 > 09 .00 மணிக்கு வரவேண்டியது 10 .30 கு வந்தது
2 > 10 .29 க்கு தடம் எண்ணை கடைசிவினாடி இரண்டாவது முறையாக மாற்றி கிட்டத்தட்ட 500 க்கும் அதிகமான பயணிகளை ஒருவர்மேல் ஒருவர் முண்டியடித்து கொண்டு அடுத்த தடத்திற்கு ஓட விட்டது ( அதுவும் பாதாள பாதை வழியாக )
3 > தமிழ் நாட்டின் பெரிய அண்டர் கிரௌண்ட் புகை வண்டி நிலையத்தில் ( ஈரோடு) குறைவான நிழற்குடையில், மணி கணக்கில், குளு குளு வெயிலில் பயணிகளை நிற்க வைப்பது
4 > வந்ததுதான் தாமதம் கிளம்பியதும் 11 .30 கு
5 > 8 மணி நேர பயணத்திற்கு உறவினர் நின்றுகொண்டே செல்ல வேண்டிய அவலத்திற்கு ஆளானது ( இதில் அடுத்தவாரம் மீண்டும் வருவதாக இருந்தவர் முகத்தில் ஏற்பட்ட இனம்புரியாத கவலை )
அடுக்கி கொண்டே போகலாம் ....
ஆனாலும் இப்பொழுதும் நான் விரும்புகிற அந்த சிக்கு..... புக்கு......... பயணம் ஒரு மகிழ்வே ......
@Stalin: எனக்கும் இந்த பிளாட்பாரம் மாறி போகுற கொடும எல்லாம் நடந்திருக்கு! :(
பதிலளிநீக்குஎல்லாருக்கும் நடக்கும் அதே கொடுமையான விசயம்தான். இதுவே நண்பர்களுடன் போனால் ஜாலியாக இருக்கும், என்ன இதே கதையை இன்னொருவர் சொல்லுவார், அவ்வளவுதான், சூப்பர் பாஸ்
பதிலளிநீக்குgood! keenly watched the train journey. we seniores didn"t like the young people"s
பதிலளிநீக்குnasty.jolly talks.these talks also get irritated to us.so young guys please talk desently in train.
நரகம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குக் காட்டவேண்டாமா? அப்போதுதானே உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வரும்!
பதிலளிநீக்கு//அப்போதுதானே உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வரும்// எரிச்சல்தான் வரும்! :D
நீக்குthanks for sharing....
பதிலளிநீக்கு----Maakkaan
உங்கள் Blog மிகவும் அருமை சார்.....
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீதர்! :)
நீக்கு