IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 1.0

இந்த பதிவு மேலும் பல முக்கிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது - கீழ்காணும் புதிய பதிவை படியுங்கள்!


நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டிருப்பீர்கள் அல்லது குறைந்த பட்சம் பார்த்தாவது இருப்பீர்கள்! ஆனால் நாள் தோறும் லட்சக்கணக்கான பேர் பங்கு பெரும் ஒரு மாபெரும் virtual ஓட்டப் பந்தயம் தினம் காலை எட்டு மணிக்கு இந்தியாவில் அரங்கேறுகிறது! அந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு மற்றவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மண்ணை கவ்விக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நொந்த நெஞ்சங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்வதென்பது ஒரு அற்புதமான கலை! மிகுந்த விவேகமும்(!), அளப்பரிய பொறுமையும், எவ்வளவு அடித்தாலும் தாங்க கூடிய தன்மையும் உடைய நபர்களால் மட்டுமே இதை செய்திட முடியும் . ஒரு டிக்கெட்டை பதிவு செய்திட குறைந்த பட்சம் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும். இந்த நற்குணங்கள் உங்களுக்கு இல்லாத பட்சத்தில் தயவு செய்து "Alt+F4" ஒருசேர அமுக்கி விட்டு ஏதாவது ஒரு புக்கிங் ஏஜண்டை அணுகவும்! ;)

நீங்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கான ஐந்தாண்டு திட்டத்தை, இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே போட்டு வைத்தவரா? கவலையை விடுங்கள், நான்கு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து விட்டு பயண தேதி வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தாலே போதுமானது! (தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நான்கு மாதங்கள் முன்பே முன் பதிவு செய்ய முயற்சித்தாலும் டிக்கெட் கிடைக்காது என்பது வேறு விஷயம்!) ஆனால், என்னை போல் எதையுமே ஊறப்போட்டு செய்பவர்களுக்கும், மறதி உள்ளவர்களுக்கும், அவசர காரியத்துக்காக கிளம்ப நேர்பவர்களுக்கும்தான் பிரச்சினையே!  குறிப்பாக இந்த மாதம் (மே) முழுவதும் டிக்கெட் கிடைப்பதென்பது மிகவும் அரிதான ஒன்று. தற்போதைய ரயில்வே விதிகளின் படி, பயண தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்பும், அவசர பயணத்திற்கான (Tatkal) முன்பதிவு ஒரு நாளைக்கு முன்பும் செய்யலாம்.

IRCTC-யில் டிக்கெட் புக் செய்ய கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் அவசியம்! முன்னதாகவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்து விடுங்கள்!
 • குறைந்த பட்சம் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்! உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் ஏனைய தகவல்களை சரியாக உள்ளீடு செய்து வையுங்கள்.
 • "User Profile" பகுதியில் "Master List of Passengers" என்றொரு பிரிவு இருக்கும். அதில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர், பிறந்த நாள், மற்றும் விருப்பமான பெர்த் போன்ற தகவல்களை உள்ளீடு செய்திடுங்கள்! வயதானவர்களுக்கோ, அல்லது குழந்தையுடன் பயணிக்கப் போகிறவர்களுக்கோ லோயர் பெர்த்தை தேர்ந்தெடுத்து வைப்பது நலம்!
 • தேவை பட்டால் 'Travel List-களையும்' போட்டு வைத்துக்கொள்ளலாம்! உதாரணத்திற்கு "WeTwo" என்றொரு லிஸ்டை உருவாக்கி அதில் மாஸ்டர் லிஸ்டில் ஏற்கனவே உள்ளீடு செய்த உங்கள் பெயரையும், உங்கள் மனைவியின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம், முன்பதிவு செய்யும் போது இது மிகவும் வசதியாக இருக்கும்.
 • அதே போல IRCTC-யில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பேரிலும் ஒரு அக்கௌன்ட்டை  ஆரம்பித்து விடுங்கள். ஒரே நபர் பல கணக்குகளை துவக்குவது அவர்களின் விதிமுறைக்கு புறம்பானது என்பதால் நாம் இந்த மிகப் பெரிய ஓட்டையை பயன்படுத்தி அவர்களுக்கு பெப்..பெப்...பேபே காட்டலாம்!
 • உங்கள் கம்பியூட்டரில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரௌசர்கள் நிறுவி வைத்திருப்பது மிக அவசியம் (IE, firefox, opera, chrome etc.). ஒரே நேரத்தில் எல்லா பிரௌசர்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட அக்கௌன்ட்கள் மூலமாக login செய்து முயற்சித்தால் மட்டுமே டிக்கெட் கிட்டும்!
 • உங்கள் பயணத்திற்கான இரயில் புறப்படும் மற்றும் போய் சேரும் இடங்களின் ஸ்டேஷன் code-களை முதலிலேயே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு MDU - மதுரை ஜங்ஷன், SBC - பெங்களூர் சிட்டி! "Plan My Travel" பகுதியில் madurai என டைப் அடிக்கும் போதே அதற்கான code-ஐ IRCTC தளம் காண்பித்து விடும்!
 • உங்கள் குடும்ப உறுப்பினர்களுடைய ஏதாவது ஒரு அடையாள அட்டை எண்ணை ஒரு டெக்ஸ்ட் ஃபைலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு டிரைவிங் லைசென்ஸ்!
 • இந்த user guide-ஐ ஒரு முறை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்!
டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய நாள், காலையில் சீக்கிரமாக - குறைந்தது ஏழு மணிக்காவது எழுந்து கொள்ளுங்கள். பல் துலக்கி விட்டு, அப்படியே லைட்டாக ஒரு பாக்கியராஜ் டான்ஸ் போட்டால், கைகளும் விரல்களும் தயார் நிலைக்கு வந்து விடும். சூடாக காபியோ டீயோ குடித்து விட்டு அவசர காரியங்கள் 'ஒன்றோ', 'இரண்டோ' இருந்தால் அதையும் முடித்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் டிக்கெட் பதிவு செய்ய அமர்ந்த பின் ஒரு மணிநேரத்திற்கு கொஞ்சமும் அசைய முடியாது! மணி ஏழே முக்கால் ஆவதற்கு முன் டெஸ்க்டாப்பையோ, லாப்டாப்பையோ இயக்கி இணையத்தில் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் பழைய மாடல் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் காலையில் எழுந்தவுடனேயே அதை boot செய்ய ஆரம்பிப்பது நல்லது! ;)

எட்டடிக்க ஒரு பத்து நிமிடத்திற்கு முன்பாகவே IRCTC தளத்தை எல்லா பிரௌசர்களிலும் load செய்து கொள்ளுங்கள். எட்டு மணிக்கு பிறகு முயற்சித்தால் நிச்சயம் IRCTC  தளத்திற்குள் நுழைய முடியாது! கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரௌசரில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் அக்கௌன்ட் மூலமாகவோ அல்லது உங்களின் ஒரே அக்கௌன்ட் மூலமாகவோ IRCTC-யில் login செய்து கொள்ளுங்கள். எட்டு மணி ஆகும் வரை, இரண்டு நிமிடத்திற்கு ஒருதரம் IRCTC தளத்தின் உள்ளேயே ஏதாவது சில link-களை மாற்றி மாற்றி கிளிக் செய்து, நோண்டிக்கொண்டே இருங்கள். இல்லை என்றால் உங்கள் session, டைம் அவுட் ஆகி கழுத்தறுத்து விடும்! எட்டடிக்க இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது "Plan My Travel" பகுதிக்கு வந்து விடுங்கள்

கவனிக்க: IRCTC தளத்தில் மேற்புற பட்டையில் ரயில்வே டைம் காட்டப்படும் - அதையே பின்பற்றுங்கள், உங்கள் வீட்டில் மந்தமாக ஓடும் கடிகாரத்தை பார்த்து இந்த காரியங்களை செய்தால் டிக்கெட் சத்தியமாக கிடைக்காது!). இனிமேல்தான் முக்கியமான கட்டம்!

விளம்பர இடைவேளை! படித்து விட்டீர்களா?
மணி 7:59 ஆனதும், எல்லா பிரௌசர் விண்டோக்களிலும் "From" & "To" ஸ்டேஷன் code-களை fill செய்து விட்டு, பயண தேதி, e-டிக்கெட், மற்றும் quota-வை (General, Tatakal, Ladies) தேர்ந்தேடுத்து விட்டு, சரியாக எட்டு மணி ஆனதும் "Find Trains" என்ற பட்டனில் கொலை வெறியோடு அமுக்குங்கள்! (எட்டுக்கு முன்னால் அமுக்கினால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது!). ஆழமாக ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டு ஒரு சன்னியாசியை போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் கம்பியூட்டர் திரையை கூர்ந்து நோக்குங்கள்! ஏதாவது ஒரு பிரௌசரில் ட்ரைன் லிஸ்ட் முதலில் காட்டப்படும், எனவே எல்லா ப்ரௌசர்களையும் கவனிப்பது அவசியம்! லிஸ்ட் வந்தவுடன் தேவையான வண்டியை தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்! இங்கே பயணிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்! நாம் முன்பே தயாரித்து வைத்த "Master List of Passengers"-இல் இருந்தோ அல்லது 'Travel List" மூலமாகவோ தேவையான பயணிகளை தேர்ந்தெடுங்கள்! தட்கல் டிக்கட்டாக இருப்பின் ஏதாவது ஒரு பயணியின் (அல்லது பயணிகளின்) அடையாள அட்டை எண்ணை நாம் ஏற்கனவே சேமித்து வைத்த டெக்ஸ்ட் ஃபைலில் இருந்து copy செய்து உரிய இடத்தில் paste செய்யுங்கள்! இந்த இரண்டு முக்கியமான வழிமுறைகளும் நம்மை மற்றவர்களை விட இரு மடங்கு வேகத்தில் டிக்கட் கிடைக்கும் வாய்ப்பை நோக்கி உந்தித் தள்ளும்!

அப்பக்கத்தின் கீழேயுள்ள எரிச்சலூட்டும் "Word Verification"-ஐ தாண்டி அடுத்த பக்கத்துக்கு சென்று திரையில் தெரியும் பயண தேதி மற்றும் பிற விவரங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள். அக்கணத்தில் எத்தனை டிக்கட்டுகள் உள்ளன என்ற விவரத்தையும் அந்த பக்கத்தில் பார்க்கலாம். இதையடுத்து "Make Payement" பட்டனை அமுக்கி "Payment Options" திரைக்கு செல்லுங்கள்! அதில் கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங்கை தெரிவு செய்து, உங்களுடைய பேங்கை தேர்ந்தெடுங்கள். பிறகு "Buy" பட்டனை அமுக்குங்கள்.

நிற்க!

இது வரைக்கும் எல்லா பிரௌசர்களிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்து மேற்கண்ட வழிகளை பின்பற்றிய நீங்கள் இதற்கு மேலும் அதை செய்திடக் கூடாது! எந்த பிரௌசரில் பேங்க் விவரங்கள் முதலில் தெரிந்ததோ அதில் மட்டும் மேற்கொண்டு தொடருங்கள், பண பரிமாற்றம் செய்து விட்டு டிக்கெட் confirm ஆகிவிட்டால் பிரச்சினையில்லை! அப்படி ஆகாமல் "Service Timedout" என்ற பொன்மொழியை திரையில் பார்க்க நேர்ந்தால் மற்றுமொரு பிரௌசரில் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து பேமென்ட்டை உறுதி செய்யுங்கள்! ஏதாவது ஒரு பிரௌசர் மூலமாக டிக்கெட் நிச்சயம் கிடைத்துவிடும்! பொதுவாக கிரெடிட் கார்டை விட நெட் பேங்கிங் முறை விரைவாக இருக்கும்!

என்ன டிக்கெட் கிடைத்து விட்டதா?! சூப்பர்! இப்போது மறுபடியும் லைட்டாக ஒரு பாக்கியராஜ் ஸ்டைல் டான்ஸ் போட்டால் கை, கால் மற்றும் விரல்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்! ;)

ஒரு முக்கிய குறிப்பு: மேற்காணும் அற்புத தகவல்களை 'பெங்களூர்-திருப்பூர்-பெங்களூர்', 'பெங்களூர்-மதுரை-பெங்களூர்' மார்க வண்டிகளுக்கு மட்டும் பயன்படுத்தாதீர்கள்! பின்னே, எல்லாரும் இப்படி தெளிவாக ட்ரை பண்ணினால் அப்புறம் சொல்லிக்கொடுத்த எனக்கு அவசரத்துக்கு டிக்கெட் கிடைக்காதே! :D

வயித்தெரிச்சல் (உங்களுக்கு) குறிப்பு - 1: இவற்றை தவிர இன்னும் சில டக்கரான ஐடியாக்களும் கைவசம் இருக்கின்றன! ஆனால் அதை நான் இங்கு பகிரப் போவதில்லை! தொழில் ரகசியம் ;)

வயித்தெரிச்சல் குறிப்பு - 2: இவ்வளவு சிரமப்பட்டு டிக்கெட் பதிவு செய்ததற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என அறிய இதையும் படியுங்கள்! :)
மழுங்கிய மனிதர்கள் - இரயில் பயணங்களில்!

Update 1 - May 13, 2012:
IRCTC / ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு : பின்னூட்டத்தில் நண்பர் சோமு அவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பிரௌசர்கள் மூலம் அனைவரும் டிக்கெட் பதிவு செய்ய முயற்சித்தால் அது IRCTC தளத்தின் மேல் தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்து அனைவரையும் பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான்! ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பிரௌசர்கள் மூலம் முயற்சிக்கும்போது கூட எதாவது ஒன்றில்தான் இறுதி ஸ்டெப் வரை செல்ல முடிகிறது! மற்றவை பாதி வழியிலேயே timeout  அல்லது hang ஆகி கழுத்தறுத்து விடும்! ஒரே ஒரு பிரௌசரில் மட்டும் ட்ரை செய்தால், ஒரு போதும் டிக்கெட் கிட்டுவதில்லை! IRCTC-யை ஏமாற்ற இந்த வழியை நான் பரிந்துரைக்கவில்லை! அவர்கள் தங்களுடைய Booking Infrastructure-ஐ மேம்படுத்தாத வரை, ஏஜன்ட்களின் அடாவடிகளை ஒழிக்காதவரை நம்மை போன்ற அப்பாவி பொது ஜனங்களுக்கு வேறு வழி இல்லை! இல்லை என்றால், ரயில்வே நிர்வாகம் தெற்கு மண்டலத்தில் அதிக வண்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும்! அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இல்லை! :(

Update 2 - Jun 10, 2012:
ஜூனில் இருந்து புதிய விதிமுறைகளின் படி, ஒரே பயனர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஒரே சமயத்தில், ஒன்று அல்லது பல பிரௌசர்கள் மூலம் login செய்ய முடியாது! ஆனால், உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு அக்கௌன்ட் மூலமாகவும், உங்கள் வீட்டில் இருக்கும் மற்றொருவர் இன்னொரு அக்கௌன்ட் மூலமாகவும் login செய்யலாம் - பிரச்சினையில்லை ;)

Update 3 - Jul 10, 2012:
இந்த பதிவு மேலும் பல முக்கிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது - கீழ்காணும் புதிய பதிவை படியுங்கள்!

கருத்துகள்

 1. Really Good and useful post..
  Ur Blog is really good.. keep up the good work.

  பதிலளிநீக்கு
 2. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்ல இவ்வளவு பிரச்சனை இருக்கா ..?

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா13 மே, 2012 அன்று AM 11:55

  "இவற்றை தவிர இன்னும் சில டக்கரான ஐடியாக்களும் கைவசம் இருக்கின்றன! ஆனால் அதை நான் இங்கு பகிரப் போவதில்லை! தொழில் ரகசியம் ;)"

  iyya maharasa..... antha ideaya vai sollungal.....(cni to ngl) ungalukku marpalavi vengala silai vaika erpadu seikirean. (ngl passengers sarbaga...)

  பதிலளிநீக்கு
 4. neenga vera nan regiser pannitten! ana oru nanbarukku ticket book seyya mudiyaama avan paartha paarvai irukke?????????????

  பதிலளிநீக்கு
 5. இரசித்தவை:
  1.பாக்கியராஜ் ஸ்டைல் 2.இடைவேளை 3.கொலைவெறியோடு

  பதிலளிநீக்கு
 6. நல்லா தானே சொல்லிகிட்டு வந்திங்க .. அப்படியே அந்த கடைசி தகவலையும் சொல்லலாம்ல ....

  பதிலளிநீக்கு
 7. உண்மையை சொன்னால் முழுவதும் படிக்கலை. (இவ்வளவு பெருசா இருந்தா எப்படி படிக்கிறது?)

  ஆனா பயணிகளுக்கு பயனுள்ள தகவல்(-ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்).

  பதிலளிநீக்கு
 8. ஆனா மேலோட்டமா படிச்சு செய்தியை தெரிஞ்சுக்கிட்டேன்.

  பதிலளிநீக்கு
 9. @ Msakrates: :) நன்றி!
  @ ராஜ்: thanks man!
  @ வரலாற்று சுவடுகள்: செஞ்சு பாருங்க கஷ்டம் தெரியும் ;)
  @ Anonymous: வெண்கல சிலை? வேண்டாம் காக்கா உச்சா போவும் :D
  @ NIZAMUDEEN: உங்க பேருலயும் ஒரு ட்ரைன் ஓடுதே! :)
  @ "என் ராஜபாட்டை"- ராஜா: சொல்ல மாட்டேனே ;)
  @ Abdul Basith: ட்ரைன் போல பதிவும் நீளம்தான்னு எழுதும் போதே தெரிஞ்சுது! ஆனா முழுக்க முழுக்க டெக்னிகல் பதிவா போட்டா போரடிக்கும்னு கொஞ்சம் காமெடி சேர்த்ததில நீளமாயிடுச்சு! IRCTC புக்கிங் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும், காமெடியை மிஸ் பண்ணாமா படிச்சுருங்க! ;)

  பதிலளிநீக்கு
 10. பாக்யராஜ் டான்ஸ் தவிர எல்லாமும் செய்தும் சிலமுறையே வெற்றி கிட்டியது.

  அடுத்தமுறை அதையும் செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. மணிக்குட்டன்13 மே, 2012 அன்று PM 6:01

  சரளமான எழுத்து நடை.....இயல்பாக வரும் காமெடி .....!

  உங்களை பார்த்தால் புதுசு மாதிரி தெரியலையே? உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பதிவர் செந்தழல் ரவி தானே ?

  பதிலளிநீக்கு
 12. @ John Simon C: இன்னும் நல்லா முயற்சி பண்ணுங்க! :)

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. @ அரைகிறுக்கன்: சரியா போச்சு போங்க! இருக்கறதுலேயே முக்கியமான ஸ்டெப்பு அந்த பாக்யராஜ் டான்ஸ்தான்! இன்னிக்கி ப்ராக்டிஸ் ஆரம்பிங்க!

  @ மணிக்குட்டன்: பாராட்டுக்களுக்கு நன்றி! எனது இயற்பெயர் கொசாக்கி பசப்புகழ்! ;)

  @ jothi: thanks!

  பதிலளிநீக்கு
 15. //@ NIZAMUDEEN: உங்க பேருலயும் ஒரு ட்ரைன் ஓடுதே! :)//

  அது என்பேரிலயா ஓடுது?
  ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்ற ஊர்-க்கு செல்வதால் அந்த ஊர் பேரையே
  ட்ரைனுக்கு வச்சிருக்காங்க. சரியா?

  பதிலளிநீக்கு
 16. //ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்ற ஊர்-க்கு செல்வதால் அந்த ஊர் பேரையே ட்ரைனுக்கு வச்சிருக்காங்க. சரியா?//
  அதே! :)

  பதிலளிநீக்கு
 17. //@ மணிக்குட்டன்: பாராட்டுக்களுக்கு நன்றி! எனது இயற்பெயர் கொசாக்கி பசப்புகழ்! ;)//

  அப்ப இது யாரு பேரு?

  Karthik Somalinga ‏ @bladepedia

  பதிலளிநீக்கு
 18. Excellent post friend. The more pain is sometimes we need to cancel a ticket that we spent time like this book .Also comments from my wife like "Again you booked a train seat near toilet only ""
  :)

  பதிலளிநீக்கு
 19. //அப்ப இது யாரு பேரு? Karthik Somalinga @bladepedia//
  அதானே! யாருப்பா அது?! :D

  பதிலளிநீக்கு
 20. ஹாஹா அட்டகாசம் கார்த்திக்.. irctcஇல ரொம்ப போராடி இருப்பிங்க போல! எனக்கும் இந்த அனுபவம் உண்டு... அதனால்தான் வெள்ளி மற்றும் ஞாயறு பயணம் செய்வதுதில்லை. அதுவும் இல்லாமல் விடுமுறை நாட்களை தவிர்த்து விடுகின்றேன்... சென்னையிலிருந்து கோவைக்கு இப்பொழுது துர்ங்கோ வந்ததால், அதை உபயோகபடுத்தி வருன்கின்றேன்...

  பதிலளிநீக்கு
 21. Super Sir, Nice post, good techniques, but is it not quiet misleading. If a single person open so many browsers and sessions,think of this in whole India. It may increase the server load further.Anyhow, after the strict tatkal rules, like ID compulsory, and tracking the IP address of the system are all helping the real people to get the tickets.
  .... Hmm, sondha voorla irukkuravangallum Koduthu vaithavargal.

  பதிலளிநீக்கு
 22. @ Ramesh: ரொம்பவே போராடியிருக்கிறேன் :)

  @ Somu: உங்களுக்கான பதிலை பதிவின் அடியில் இணைத்துள்ளேன்! கருத்துக்கு நன்றி நண்பரே!

  @ Ravikumar.M: நன்றி ரமேஷ்! :) உங்களுக்கு டிக்கெட் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி! :)

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லா14 மே, 2012 அன்று PM 12:35

  Very Very useful information.

  Arunkumar, Abu Dhabi

  பதிலளிநீக்கு
 24. Unga method use panni tickets book pannuveano illayo(tickets book panradhu ellam all iruku, athu thaan en Husband-Bladepedia Karthik), tamil padikarathula enaku nalla improvement aachu, yenna ennaku tamil sariya eludha padika varadhu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீ ஊர் செல்ல நான் அடிக்கடி டிக்கட் பதிவு செய்ததாலேயே இந்த பதிவு சாத்தியமானது என் அன்பு மனைவியே! :)

   நீக்கு
 25. ஸலாம்

  நானும் irctc ல ட்ரை பண்றேன் வேலைக்கு இல்லபா !!! டிக்கெட் புக் பண்ண ...

  //வயித்தெரிச்சல் (உங்களுக்கு) குறிப்பு - 1: இவற்றை தவிர இன்னும் சில டக்கரான ஐடியாக்களும் கைவசம் இருக்கின்றன! ஆனால் அதை நான் இங்கு பகிரப் போவதில்லை! தொழில் ரகசியம் ;)//

  என்னங்க பிரதர் முக்கியமான விசயத்த சொல்ல மறந்துண்டிங்க ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  உங்க ட்ரிக்ஸ் use பண்ணிட்டு சொல்றேன் என் கருத்த ...

  பதிலளிநீக்கு
 26. அடப்போங்க சார்... பணம் செலுத்திவிட்டு வந்து பார்த்தால் வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு.. அதை கேன்சல் செய்து.. லாபகரமாக இயங்கும் ஒன்றே ஒன்று IRCTC மட்டுமே என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. IRCTC / ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு : பின்னூட்டத்தில் நண்பர் சோமு அவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பிரௌசர்கள் மூலம் அனைவரும் டிக்கெட் பதிவு செய்ய முயற்சித்தால் அது IRCTC தளத்தின் மேல் தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்து அனைவரையும் பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான்! ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பிரௌசர்கள் மூலம் முயற்சிக்கும்போது கூட எதாவது ஒன்றில்தான் இறுதி ஸ்டெப் வரை செல்ல முடிகிறது! மற்றவை பாதி வழியிலேயே timeout அல்லது hang ஆகி கழுத்தறுத்து விடும்! ஒரே ஒரே பிரௌசரில் மட்டும் ட்ரை செய்தால் ஒரு போதும் டிக்கெட் கிட்டுவதில்லை! IRCTC-யை ஏமாற்ற இந்த வழியை நான் பரிந்துரைக்கவில்லை! அவர்கள் தங்களுடைய Booking Infrastructure-ஐ மேம்படுத்தாத வரை, ஏஜன்ட்களின் அடாவடிகளை ஒழிக்காதவரை நம்மை போன்ற அப்பாவி பொது ஜனங்களுக்கு வேறு வழி இல்லை! இல்லை என்றால், ரயில்வே நிர்வாகம் தெற்கு மண்டலத்தில் அதிக வண்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும்! அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இல்லை! :(
  /// NEENGATHAAN ANTHA AALA ..???? UNGA NALLA ENNAM NIRAIVERIDUCHU BOSS IPPA ELLAM ORU IP ADDRESSLA ETHAVATHU ORU BROWSERLA OREY ORU LOGIN MATTUMTHAAN PANNA MUDIYUM...ELLA BROWSERLAYUM 1 OR 2 LOGIN PANRA KAALAMELLAAM POYAACHU BOSS.....

  பதிலளிநீக்கு
 28. @Ravi:

  // NEENGATHAAN ANTHA AALA ..????//

  நீங்க கடுப்பாகி சொல்லறீங்களா இல்லே பாராட்டுறீங்களான்னு தெரியல! :) ஆனா நல்ல விஷயம்தான்! அப்படியாவது IRCTC சைட் ஃபாஸ்டா வொர்க் ஆனா சரிதான்! :) செக் பண்ணி பாத்துட்டு சொல்லறேன் :D

  பதிலளிநீக்கு
 29. browser கள் மாறி புக் செய்வது புதிய தகவல் கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
 30. அடபோங்கப்பா, இத்தன வருஷமா இப்படி ஒரு பதிவர பதிவுலகம் தவர விட்டுடதே........

  அருமையான நடை...
  டெக்னிக் நல்லா இருக்கு.
  பதிவு பெருசா இருந்தாலும் நேரம் போனதே தெரியல.......
  அம்புட்டு அருமை..........
  கண்டிப்பாக அடிக்கடி வருவேன்.......

  பதிலளிநீக்கு
 31. தெளிவான விரிவான பகிர்வு.

  /மேற்காணும் அற்புத தகவல்களை 'பெங்களூர்-திருப்பூர்-பெங்களூர்', 'பெங்களூர்-மதுரை-பெங்களூர்' மார்க வண்டிகளுக்கு மட்டும் பயன்படுத்தாதீர்கள்! பின்னே, எல்லாரும் இப்படி தெளிவாக ட்ரை பண்ணினால் அப்புறம் சொல்லிக்கொடுத்த எனக்கு அவசரத்துக்கு டிக்கெட் கிடைக்காதே!/

  அது சரி:))!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தெளிவான விரிவான பகிர்வு.//
   நன்றி! உங்களுடைய இரண்டு ப்ளாக்களும் நன்றாக உள்ளன!

   //அது சரி:))!//
   நீங்களும் பெங்களூர் தானா?! :)

   நீக்கு
 32. how i can see your blog in english language as this language greek to me ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. You can try Google Translate - but the results won't be perfect, and most of the time won't make any sense at all as their translation engine is still beta.

   btw, the language on this blog is Tamil! :) so the best way for you is to find a Tamil speaking (reading!) friend and have him/her translate this article for you!

   Thanks for visiting!

   நீக்கு
 33. பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே. பதிவு ரொம்ப விருவிருப்பா இருந்தது, எக்ஸ்பிரஸ் வேகத்தில் படித்து முடித்தேன், பதிவு நீளம் என்று இன்னொரு நண்பர் சொல்லியிருக்கிறார், எனக்கு அவ்வாறு படவில்லை. நீளத்தைக் குறைத்தால் தேவையான தகவல்களையும் குறைக்க நேர்ந்திருக்கும். நானும் அடிக்கடி இப்படி போராடுவதால் முழுவதும் கவனமாகப் படித்தேன். நீங்கள் சொல்வது போல கால் மணி நேரம் முன்னதாகவே பிரவுசரைத் திறந்து உலாத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று என் நண்பர் ஒருத்தரும் கூடச் சொன்னார். எட்டு மணிக்கு திறந்தால் பெரும்பாலும் Service Unavailable என்ற செய்திதான் கடுப்பேத்துகிறது. அடுத்த முறை கொஞ்சம் முன்னரே திறந்து முயன்று பார்க்கிறேன்.

  பயணிகள் பெயரை முன்னரே IRCTC தளத்திலேயே பதிந்து வைத்துக் கொள்வது பற்றி சொல்லியுள்ளீர்கள். அதில் பிரச்சினை என்னவென்றால், அந்த லிஸ்டில் இருந்து எடுத்து நிரப்புவதற்கு ஆகும் காலம், பெயர்களை நாமே நிரப்புவதை விட கூடுதலாகிறது என்பது தான். சுத்துது...........சுத்துது........... சுத்திகிட்டே இருக்குது. வெறுத்து போய் நானே பெயர்களை நிரப்ப ஆரம்பித்தேன். டிக்கட் booked என்று வரும் வரை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் கழுத்தறுக்கும் என்பது தான் கொடுமை. அதுக்கப்புறம் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து வரணும். போதும் போதும் என்றாகி விடுகிறது. இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் சில டிப்ஸ்கள் மிகவும் உதவியாக இருக்கும், அடுத்த முறை எல்லாவற்றையும் முயற்சி செய்கிறேன். நீங்கள் சிலதை தரவில்லை என்கிறீர்கள், அதையும் கொடுத்தால் நல்லது. இதைப் படித்துவிட்டு உங்களுக்கு போட்டியாக நீங்கள் செல்லும் தேதியில், அதே டிரெயினில், அதே ஊருக்கு இன்னொருத்தர் டிக்கட் புக் செய்வது அரிதிலும் அரிது, அதனால் அதையும் தெரியப் படுத்தினால் உதவியாக இருக்கும். உங்கள் பதிவை எனக்கு அறிமுகப் படுத்திய மென்பொருள் பிரபுவுக்கு நன்றி.

  அதுசரி,
  VISHNUPRIYAMay 14, 2012 3:23 PMஎன் நீங்கள் பதிலளிக்க வில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! ஆம், பதிவு கொஞ்சம் நீளம்தான்! :) விரைவில் நிறைய மாற்றங்களுடன், வெளி வராத தகவல்களுடன் இப்பதிவு மீண்டும் வெளி வரும்! :)

   //வெறுத்து போய் நானே பெயர்களை நிரப்ப ஆரம்பித்தேன்.//
   முன்னமே பதிவு செய்திருந்தால், form history-இல் இருந்தும் பெயர்களை நிரப்பலாம்!

   //VISHNUPRIYAMay 14, 2012 3:23 PMஎன் நீங்கள் பதிலளிக்க வில்லை?//
   செய்தாயிற்று! :)

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia