மழுங்கிய மனிதர்கள் - 2 - சாலையில் ஒரு சாகசம்!

வீட்டிலிருந்து எனது அலுவலகம் கிட்டத்தட்ட 12KM தொலைவு! இந்த சொற்ப தொலைவைக் கடக்க பெங்களூரின் பயங்கர டிராஃபிக்கில் குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். அதுவும் வீட்டிலிருந்து சரியாக காலை 9 மணிக்கோ அல்லது ஆபீசில் இருந்து மாலை 6 மணிக்கோ கிளம்பினால் நிச்சயம் ஒருமணிநேரம் ஆகி விடும். மந்தமாக ஓடிக்கொண்டிருக்கும் என் வாழ்வில் சில சாகசங்கள் செய்வதற்கான வாய்ப்பை அளிப்பது இந்த பெங்களூர் நகர காலை, மாலை - சாலைப் பயணங்கள்தான்! தினம் தினம் நான் சந்திக்கும் சுவாரசியமான(!) சக பயணர்களின் சில எரிச்சலூட்டும் சாகசங்கள் இதோ:
  • வீட்டருகில் உள்ள குறுகல் சாலைகளில் NFS விளையாடும் காரோட்டிகள்!
  • 90 டிகிரி குறுக்குச் சந்தில், 120 டிகிரியில் மெதுவாய் திரும்பும் ஆக்டிவா அழகிகள்(!)
  • ஹார்ன் அடிக்காமல் திடுமென சந்திலிருந்து உதிக்கும் பைக்குகள்
  • டெப்போ அருகில் இடைஞ்சலாய் நிற்கும்  BMTC பஸ்கள்
  • சிக்னலருகில் வைட்கலர் பல்சார் மேல் சாய்ந்தவாறு ஹெல்மெட் மாட்டாமல் எவன் சிக்குவான் என அலைபாயும் கண்கள்
  • இடது லேனில் வந்து சட்டென சிக்னலின் வலப்புறம் திரும்பி திணறடிக்கும் கார்கள்
  • ஸ்கூட்டரில் ஸ்கூல் வேன் சர்வீஸ் நடத்தும் குடும்பக் கட்டுப்பாடில்லாத அங்கிள்கள்
  • இன்டிகேட்டர் போடாமல் இடதில் திரும்பும் இன்டிகாக்கள்
  • மனதுக்குள்ளேயே இன்டிகேட்டர் போட்டு சட்டென்று திரும்பும் ஆட்டோக்கள்
  • இன்டிகேட்டர் போட்டுக்கொண்டே நேராய் செல்லும் கம்பெனி கேப்கள்
  • ஹெவி ட்ராஃபிக்கில் U-டர்ன் போடும் கால் டாக்ஸிக்கள்
  • வேகமாய் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வண்டியை துரத்தும் இரக்கமில்லாதவர்கள்
  • ராங் சைடில் வந்து ட்ராஃபிக் ஜாம் செய்யும் வண்டிகள்
  • நெரிசலான ட்ராஃபிக்கில் மணிக்கு 90KM வேகத்தில் வண்டி ஓட்டும் வானரங்கள்
  • அப்படி ஓட்டியும் சிக்னலில் சிக்கிக் கொண்டு ஹெல்மெட் சொரியும் அசடுகள்
  • சிகரெட்டுடன் வண்டி ஓட்டி, தீர்ந்ததும் பின்னால் எறியும் தீவட்டி தடியர்கள்
  • விடாமல் ஹார்ன் அடித்து BP ஏற்றும் SUV-க்கள்
  • பின்புறம் பாப்பா படம் ஒட்டிக்கொண்டு, பப்பர பப்பர ஹார்ன் அடிக்கும் பிரைவேட் பஸ்கள்
  • அதன் புட்போர்டில் தொங்கியவாறு தேவையில்லாமல் விசிலடித்து, கையாட்டும் கண்டக்டர்கள்
  • பஸ் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்துகொண்டு ரோட்டில் வெற்றிலை அபிஷேகம் செய்யும் பெரிசுகள்
  • ரூல்ஸ் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று நீளமாக கை நீட்டி சிக்னல் காட்டும் தாத்தாக்கள்
  • யார் கை காட்டினாலும் சடன் பிரேக் போடும் ஆட்டோக்கள்
  • துப்பட்டா சக்கரத்தில் சிக்கிடுமோ என பதற வைக்கும் ஸ்கூட்டி சிட்டுகள்
  • ஆடை பறக்க வண்டி ஓட்டி ஆக்சிடென்ட்டுக்கு வழிவகுக்கும் அழகிய பெண்கள்
  • கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் சொருகிய மொபைலில் மொக்கை போடும் காலேஜ் பசங்கள்
  • பீக் அவரில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் டிரைவிங் ஸ்கூல் கத்துக்குட்டிகள்
  • காரில் அமர்ந்தவாறே சாலையோர கடையில் சாத்துக்குடி வாங்கும் சாத்தப்பன்கள்
  • பின்னால் வருபவர்கள் பற்றிய கவலையின்றி கார் கதவை படார் என திறக்கும் ஆன்ட்டிகள்
  • சைலன்சர் கழட்டிய RX100 ஓட்டி காதை கிழிக்கும் யமஹா யமன்கள்
  • இலவசமாய் கொசு விரட்டும் புகை கசியும் ஆட்டோக்கள்
  • TMT கம்பிகளை ஈட்டி போல் அடுக்கி கொண்டு சடன் பிரேக் போடும் கொலைகார லோட் லாரிகள்
  • கண்ணில் மண்ணைத் தூவும் மணல் லாரிகள், ரோட்டில் குப்பை போடும் குப்பை லாரிகள்
  • அதை கழுவிக்கொண்டே சென்று பின்னால் வருபவர்களை வழுக்க வைக்கும் தண்ணீர் லாரிகள்

கடைசியாக, இவர்களை எல்லாம் சகித்துக்கொண்டு, கீழ்க்கண்ட சாத்வீக சாகசங்கள் செய்தவாறே வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் ப்ளேட்பீடியா ஓனர் (ஒனர்னா ஓரத்துல ஒக்காரவேண்டியதுதானே!):

  • மேற்கண்டவாறு எரிச்சலூட்டுபவர்களை - பைக்கில் சென்றால் மனதிலும், காரில் கண்ணாடி ஏற்றி சென்றால் வாய் விட்டும் கெட்ட வார்த்தையில் திட்டுவது ;)
  • ஆக்ஸிலேட்டரை தீவிரமாய் திருகி பைக்கை உறுமச் செய்தும், ஹார்ன் அடித்தும் எதிர்ப்பை காட்டுவது!
  • தலையை இடதும் வலதுமாக ஆட்டி ஆட்டி எரிச்சலை வெளிப்படுத்துவது!
  • மொபைலில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுபவர்களின் பின்னால் விடாமல் ஹார்ன் அடிப்பது!
  • ஹார்ன் அடித்து அலம்பு பண்ணும் SUV-களுக்கு ரியர் வியூ மிர்ரரில் டெர்ரர் லுக் குடுப்பது!
  • ஹைஸ்பீடில் வரும் பைக்குகளுக்கு வழிவிடாமல் மந்தமாய் வண்டி ஓட்டுவது ;)
  • வழிவிடாமல் வண்டி ஓட்டுபவர்களை ஓவர்டேக் செய்து அவர்களுக்கு வழிவிடாமல் கடுப்பேற்றுவது :D
  • சிக்னல் மஞ்சளுக்கு மாறும் போதே பொறுப்பாக நின்று பின்னால் வருபவர்களை வெறுப்பேற்றுவது!
  • ராங் சைடில் வரும் வண்டிகளை இடிப்பது போல் நேராக செல்வது!
  • இன்சூரன்ஸ் எக்ஸ்பைர் ஆகியிருந்தாலும் பதட்டப்படமால் வைட் கலர் பல்சார் அருகேயே சிக்னலில் வண்டியை நிப்பாட்டுவது ;)
  • வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகையை அடிக்கடி உபயோகித்துக்கொண்டு வீட்டு வேலை பார்ப்பது! :) :) :)

கருத்துகள்

  1. //கடைசியாக, இவர்களை எல்லாம் சகித்துக்கொண்டு, கீழ்க்கண்ட சாத்வீக சாகசங்கள் செய்தவாறே வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் ப்ளேட்பீடியா ஓனர் (ஒனர்னா ஓரத்துல ஒக்காரவேண்டியதுதானே!)//


    ஆமா தல அன்னைக்கு ஒருநாள் ஜன்னல் ஓரத்துல உக்காந்திருந்த பெருசு "புளிச்....." ன்னு வெத்திலை அபிசேகம் செய்ததை பெருந்தன்மையா விட்டு விட்ட உங்க தாரள மனச பத்தி ஏன் எழுதலா ?.....

    பதிலளிநீக்கு
  2. @ Stalin: அந்த பெருசே நீங்கதான்னு வெளில சொன்ன ஒங்க மானம் போயிருமேன்னுதான் ;) ஜோக்ஸ் அபார்ட், அந்த கருமத்தையும் பல தடவ நான் பாத்துருக்கேன் பாஸ்! இப்ப அதை பதிவோட சேத்தாச்சு! ரொம்ப தேங்க்ஸ்!

    பதிலளிநீக்கு
  3. இதை எல்லாம் பழனி.கந்தசாமி ஐயா படிச்சார்னா என்ன பண்ணுவார்னு நெனைச்சாலே திகிலா இருக்கு! :D

    பதிலளிநீக்கு
  4. ////இதை எல்லாம் பழனி.கந்தசாமி ஐயா படிச்சார்னா என்ன பண்ணுவார்னு நெனைச்சாலே திகிலா இருக்கு! :D/////

    ஏன் பாஸ் அவர் உங்க குருஜியா ..?

    பதிலளிநீக்கு
  5. /////////சிக்னலருகில் வைட்கலர் பல்சார் மேல் சாய்ந்தவாறு ஹெல்மெட் மாட்டாமல் எவன் சிக்குவான் என அலைபாயும் கண்கள்/////////////

    பாஸ் இதுல நீங்க ட்ராபிக் போலிசை சொல்லலைல .. :)

    பதிலளிநீக்கு
  6. அப்படி இல்ல, இந்த பதிவுல அவரோட கனிவான பின்னூட்டத்தை பாருங்க! :) :)
    http://www.bladepedia.com/2012/05/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  7. //ட்ராபிக் போலிசை//
    வாயப் புடுங்கி வம்புல மாட்ட வைக்காதீங்க :D

    பதிலளிநீக்கு
  8. /////அப்படி இல்ல, இந்த பதிவுல அவரோட கனிவான பின்னூட்டத்தை பாருங்க! :) :)
    http://www.bladepedia.com/2012/05/blog-post_12.html ////

    பார்த்தேன் பாஸ் டர் ஆகிட்டேன் .. :)

    பதிலளிநீக்கு
  9. பெங்களூரில் ஷேர் ஆட்டோ இல்லை என்று நினைக்குறேன்.
    ஹைதராபாத்தில் ஷேர் ஆட்டோகள் சாகசம் வேறு நடக்கும்.

    பதிலளிநீக்கு
  10. இப்படி யாரும் எண்ணை "மழுங்கிய மனிதர்கள்" பட்டியலில் சேர்க்க கூடாதேன்பதற்கு தான் நான் வண்டி ஓட்டவே கத்துக்கல...

    :D :D :D

    பதிலளிநீக்கு
  11. @ Basith: "மழுகிய மனிதர்கள் - நடைபாதை நரகம்" பதிவில் வரப்போகும் லிஸ்டில் இருந்து உங்களால் தப்ப முடியுமா?

    @Raj: நல்ல வேளை இங்கே ஷேர் ஆட்டோக்கள் இல்லை! :)

    @Saran: :) enjoy driving....

    பதிலளிநீக்கு
  12. //"மழுகிய மனிதர்கள் - நடைபாதை நரகம்" பதிவில் வரப்போகும் லிஸ்டில் இருந்து உங்களால் தப்ப முடியுமா?//

    அப்ப இன்னும் இருக்கா? சரி பின்னால் "மழுங்கிய மனிதர்கள்" என்று ஒரு புத்தம் போட்டுடலாம்.

    :D :D :D

    பதிலளிநீக்கு
  13. ஆமாமா,
    ஒரே ஒரு காப்பி பிரிண்ட் பண்ணுறோம்...
    அதை நான் குடுக்க நீங்க வெளியிடுறீங்க
    வெளியிட்ட புக்கை நான் காசு கொடுத்து வாங்குறேன்
    வாங்குன புக்கை உங்களுக்கு ஓசில படிக்க குடுக்கறேன்
    நீங்க அதை படிக்காமலேயே சுண்டல் விக்கறவனுக்கு குடுத்திர்றீங்க!
    என்ன கரெக்டா? :) :) :)

    பதிலளிநீக்கு
  14. அப்படியே செய்வோம் நண்பா!

    பதிலளிநீக்கு
  15. //அப்படியே செய்வோம் நண்பா!//
    :)

    பதிலளிநீக்கு
  16. செமையா மண்டை காஞ்சுபோயி எழுதியிருக்கீங்க, அந்தோ பாவம் பாஸ் நீங்க.

    அப்புறம் சுஜாதாவின் கதை காமிக்ஸ்ல வந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா?


    எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
    தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.

    பதிலளிநீக்கு
  17. @ NIZAMUDEEN:

    //செமையா மண்டை காஞ்சுபோயி எழுதியிருக்கீங்க, அந்தோ பாவம் பாஸ் நீங்க.//
    என்ன பண்ணறது பாஸ், புலம்பத்தான் முடியும் :)

    நூறாவது பதிவை தொட்டதிற்கு வாழ்த்துக்கள்! :) சீக்கிரமே டபுள் செஞ்சுரி அடியுங்கள் நண்பரே! :)

    அட, சுஜாதாவின் கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தது எனக்கு தெரியாது! அவற்றின் ஸ்கேன்கள் இருந்தால் மாதிரிப் பக்கங்களை வெளியிடுங்களேன்? அவரின் விக்ரம் திரைக்கதை காமிக்ஸ் வடிவில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?! :)

    பதிலளிநீக்கு
  18. கலகலப்பு படம் பார்த்துவிட்டு உங்க பாணியில் விமர்சனம் எழுதவும்

    பதிலளிநீக்கு
  19. //இன்சூரன்ஸ் எக்ஸ்பைர் ஆகியிருந்தாலும் பதட்டப்படமால் வைட் கலர் பல்சார் அருகேயே சிக்னலில் வண்டியை நிப்பாட்டுவது ;) //

    தில்லு கொஞ்சம் ஓவர் தான் ;-)
    .

    பதிலளிநீக்கு
  20. @Stalin:
    //கலகலப்பு பட விமர்சனம்//
    நிச்சயம் முயற்சிக்கிறேன் நண்பரே - எழுத விஷயங்கள் நிறைய உள்ளது, நேரம்தான் இல்லை :(

    @Cibi:
    அவங்களை நேருக்கு நேரா பார்த்துக்கிட்டே வண்டி ஓட்டுனா ரொம்ப நல்லவனோன்னு விட்டுருவாங்க :D

    பதிலளிநீக்கு
  21. சென்னையின் சேர் ஆட்டோ சாகசத்தை பற்றி ஏதாவது எழுதுங்களேன் நண்பரே !

    பதிலளிநீக்கு
  22. @Meeran: எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்ததை தவிர சென்னை ஷேர் ஆட்டோக்களை பற்றிய எந்த அறிதலும் இல்லாதவன் நான் என்பதால் அதைப்பற்றி எழுத முடியாதே நண்பரே! :)

    பதிலளிநீக்கு
  23. ஜாக்கிசான் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஜாக்கி ஆட்டோ ஓட்டினால் எப்படி இருக்கும்ன்னு கற்பனை பண்ணிக்கங்க, அப்படிதான் ஓட்றாங்க, ...என்ன? பின்னால் பைக்கில் வருகிற நமக்குதான் இதயம் பலமா இருக்கணும்

    பதிலளிநீக்கு
  24. @Meeran: ஜாக்கி பற்றிய ஒரு பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுடைய இந்த கமெண்ட் வந்தது ஆச்சரியம்! :)

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் கேட்ட அந்த சுஜாதா காமிக்ஸ் புத்தகம் ஈரோடு ஸ்டாலினிடம் இருக்கின்றது.
    எனது பதிவில் அவர் கொடுத்த கமெண்ட் இதோ உங்கள் பார்வைக்கு:

    Erode M.STALIN said...

    நல்ல பதிவு நண்பரே ! வாழ்த்துக்கள் .
    அந்த காமிக்ஸ் புத்தகம் என்னிடம் உள்ளது . வெகு விரைவில் பதிவிடுகிறேன்
    Monday, May 21, 2012 1:45:00 AM

    பதிலளிநீக்கு
  26. தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia