குரூரம்

அந்த வண்டானது 'ப்ர்ர்ர்' என்ற இறக்கை ஒலியுடன் அறையின் குறுக்கும் நெடுக்குமாய் பறந்து அவனுள் கோபத்தை மூட்டிக் கொண்டிருந்தது.வேலையில் கவனம் செல்லாமல் வெறுப்பு தேங்கிய கண்களை கணித்திரையில் இருந்து அகற்றினான். மினுக்கும் கருநிறத்தில் நெல்லிக்காய் அளவிலான அந்த வண்டு ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் பரபரவென பறந்து கொண்டிருந்தது. வண்டு போன்ற சிறிய பூச்சிகள் அறையில் நுழைந்திட்டால் அதை அகற்றுவதில் அவனுக்கு பெரிதாய் வெற்றி ஒருபோதும் வாய்த்ததில்லை, இருக்கட்டுமே என்று விட்டு விடவும் அவனுக்கு மனம் வருவதில்லை!

மேஜையின் மேல் கிடந்த அன்றைய செய்தித்தாளை வண்டை நோக்கி கடும் வேகத்தில் வீசினான்... ப்ர்ர்ர்... இறக்கைகள் படபடக்க தாவிப் பறந்து சுவற்றின் மற்றொரு மூலைக்கு நகர்ந்தது!

அது அவனது அகங்காரத்தை அசைத்திருக்க வேண்டும்! மூர்க்கத்துடன் இருக்கையில் இருந்து எழுந்து கீழே கிடந்த செய்தித் தாளை நீட்டமாக மடித்து வண்டு சுவற்றின் மேல் அமர்ந்திருந்த பகுதி மேல் பட் பட்டென்று அடித்தான்... ப்ர்ர்ர்...இந்த தடவை வண்டு பறந்து போய் விட்டத்தின் மேல் ஒட்டிக் கொண்டது.

மின்விசிறி வேகமாய் சுழன்று கொண்டிருந்தது. குழப்பமானான், சுவற்றிலேயே சிக்காத வண்டை விட்டத்தில் எப்படி எதிர் கொள்வது?! ப்ர்..ப்ர்..ப்ர் என்று இறக்கைகளை சிக்கனமாக அடித்துக் கொண்டே சிறிது சிறிதாக விட்டத்தின் மேல் வண்டு நகர்ந்து கொண்டிருந்தது. அண்ணாந்து பார்த்து கொண்டிருந்த அவனுக்கு ஒரு யோசனை தோன்ற, உதட்டில் குரூரப் புன்னகை கோடிட்டது.

வண்டு மின்விசிறியின் மேற்பக்கத்துக்கு வந்ததும் சட்டென்று விசிறியின் வேகத்தை ஐந்திலிருந்து கொஞ்சம் குறைத்தான்... 4...3..

திடீரென்று ஏற்பட்ட அந்த காற்றழுத்த வேறுபாட்டில் வண்டு தடுமாற, விட்டத்தின் மீதான அதன் பிடி நழுவியது. மூன்றில் வேகமாய் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் ஒரு இறக்கையின் மேல் விழுந்த அதன் கனத்த உடல் சுழற்றி அடிக்கப்பட்டு சுவற்றின் மேல் நங்கென மோதி, தரையில் சொத்தென விழுந்து ஒரு தடவை துடித்து அடங்கியது. அவன் செருப்பணிந்த வலது காலை வண்டை நோக்கி ஓங்கினான்...

கருத்துகள்

  1. காற்றழுத்தம் குறைந்தால் வண்டுகளும் தடுமாறும் என்ற புதிய தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா! கதையில் சொல்லப்பட்டிருக்கும் அவன் ஒரு கொசாக்கி பசப்புகழ் என்று நினைக்கிறேன்.

    :D :D :D

    பதிலளிநீக்கு
  2. //கொசாக்கி பசப்புகழ்//
    :) ஹி.. :) ஹி.. :) ஹி..

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப கோபக்காரனோ? கதையில் வசனமேயில்லை?

    பதிலளிநீக்கு
  4. இதை படிக்கும் ஒவ்வொருவரும் அடுத்ததடவை அவர்கள் வீட்டுக்குள் ஏதாவது வண்டை பார்த்தால் அடித்துக் கொல்ல யோசிப்பார்கள்

    வித்தியாசமாய் யோசிப்பது என்பது இதுதான் ..!

    பதிலளிநீக்கு
  5. @NIZAMUDEEN: //கதையில் வசனமேயில்லை?//
    "டாய், மண்டு வண்டே - மருவாதையா வெளில போய்டு" - இதை கதைக்கு நடுவுல சேத்துக்குங்க ;) :D

    @வரலாற்று சுவடுகள்: ச்சே, எல்லாரும் கொலகார பசங்கப்பா :D

    பதிலளிநீக்கு
  6. அருமையாக நகர்த்தி செல்கிறிர்கள்,முயற்சி செயுங்கள்

    பதிலளிநீக்கு
  7. ஏனிந்தக் கொலைவெறி? ஆனாலும் ஐடியா சூப்பர்.

    பதிலளிநீக்கு
  8. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி :)

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்குள் இப்படி ஒரு திறமை ஒளிந்துகொண்டிக்ருகிறதா ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia