அறுவை அப்டேட் - ப்ளேட்பீடியா - ஏப்ரல் 2012


இது ஒரு சுய தம்பட்ட பதிவு! உருப்படியான காமிக்ஸ் பதிவையோ, சுவையான ஒரு தகவல் பதிவையோ நீங்கள் எதிர் பார்க்கும் பட்சத்தில் அது இந்த பதிவில் இல்லை! உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் இந்த எச்சரிக்கை! நீங்கள் ஒரு புதிய பதிவராக இருப்பின் இப்பதிவில் ஓர்சில தகவல்கள் சிக்கிடலாம்!
நான் பதிவெழுத ஆரம்பித்து ஒரு மாதம் ஆனதை இங்கு சொல்லியிருந்தேன்! எழுத ஆரம்பித்த, முதல் வாரத்தில் நமது வாசகர்களிடத்தில்(!) ஒரு மெகா - ஒரு மாத கருத்துக்கணிப்பை தொடங்கினேன்! அது இன்றுடன் முடிவடைகிறது! ஓட்டளித்த 75 பேருக்கும் மிக்க நன்றி, விவரங்கள் இதோ:

நீங்கள் இந்த வலைத்தளத்தில் எதிர்பார்ப்பது என்ன?

1. கொஞ்சம் காமிக்ஸ், கொஞ்சம் ஜனரஞ்சக பதிவுகள்! --> 43%
  • வெகுவாய் விழுந்த ஓட்டுக்கள் கொஞ்சம் காமிக்ஸ் + கொஞ்சம் ஜனரஞ்சக பதிவுகள் நான் எழுத வேண்டும் என்பதற்கே! இந்த வலைப்பதிவு ஆரம்பித்த போது எனது எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது! அதனாலேதான், "http://tamilcomicsclub.blogspot.in/" என்று முன்னொரு நாளில் நான் ஆரம்பித்த உடனேயே கைவிட்ட வலைப்பூவில் எழுதாமல், காமிக்ஸ் என்ற சொல்லே வந்திடாமல் "www.bladepedia.com" என்ற வலை முகவரியை தேர்ந்தெடுத்தேன்! உங்கள் ஆதரவே எனது பலம்!
2. காமிக்ஸ் சார்ந்த பதிவுகள் மட்டும்... --> 37%
  • குறைந்த வித்தியாசத்தில் பின்தங்கிய ஒரு முடிவு - காமிக்ஸ் சார்ந்த பதிவுகளை மட்டும் எதிர்பார்க்கும் வாசகர்களை நான் நிச்சயம் ஏமாற்றப்போவதில்லை! அடிக்கடி காமிக்ஸ் பதிவுகள் வலையேறிடும். நீங்கள் "Comics" என்ற "Label"-ஐ தேர்ந்தெடுத்துப் படித்தால் காமிக்ஸ் அல்லாத பதிவுகள் உங்களை இம்சிக்காது. உங்கள் Browser Bookmark-ஸில் இந்த தளத்தின் "Comics Label"-ஐ மறவாது குறித்துக்கொள்ளுங்கள்!
3. சுய புராணம் கூட ஒகேதான், ஆனா அடக்கி வாசி! --> 20%
  • இது ஒரு தேவையில்லாத option-ஆக வந்து ஓட்டுக்களை பிரித்துவிட்டது என கருதுகிறேன்! காமிக்ஸ் அல்லது ஜனரஞ்சக பதிவிடும் போது சற்றே சுய புராணமும் ஆங்காங்கே தலைதூக்குவதை தவிர்க்க இயலாதுதான்! முடிந்த வரை அதை அடக்கி வாசிக்கிறேன் (Nostalgia வகை பதிவுகளை தவிர்த்து!)
4. சீக்கிரம் இழுத்து மூடு, மொக்கை தாங்கல! --> 20%
  • எனது அறுவை தாங்காமல் இந்த தளத்தை இழுத்து மூடச் சொல்லிய 15 பேரும், இந்த இரங்கல் வாசிப்பை படித்திடக் கூட திரும்பி வந்திட மாட்டார்கள் என்பது சர்வ நிச்சயம்! இருப்பினும், ஒரு முறையாவது நமது தளத்தையும் வாசித்து, பொறுமையாக அவர்கள் கருத்தையும் கூறினார்கள் என்பதற்காக எனது உண்மையான நன்றிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட கால விரயத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

பல நெஞ்சார்ந்த நன்றிகள்!
இந்த நேரத்தில் சிலருக்கு நன்றி சொல்ல நான் கடன் பட்டிருக்கிறேன்! நான் பதிவெழுத தொடங்கியதிற்கு இவர்களும் ஒரு காரணமாய் இருந்திருக்கிறார்கள்!

1. வலைப்பதிவர்கள்:
நான் வலைதள வாசிப்புக்கு மிகவும் புதியவன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்! 2007-இல் தொடங்கி 'அவ்வப்போது' வாசித்து வருகிறேன்! தீவிரமாக வாசிப்பது சென்ற வருடம் முதல்தான்! கீழ்க்கண்ட வலைப்பதிவர்கள் யாவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லை என்பது கூடுதல் தகவல்!

  • வேலை நிமித்தமாய் 97-இல் தமிழகம் தொலைத்ததால் கூடவே தொலைந்து போயிருந்த எனது 'அதீத' தமிழார்வத்தை தனது பிரத்தியேக பின்நவீனத்துவ (அப்படீன்னா என்ன?) மொழி நடையுடன் ஓரிரு வருடங்களாக சீண்டிப்பார்க்கும்:
  • ப்ளாக்கர் நண்பன் - அப்துல் பஷித்:
    • ஒட்டு பட்டைகளை எப்படி இணைப்பது எனத் நான் தடுமாறிக் கொண்டிருந்தபோது தானாக முன்வந்து அவற்றை நிறுவ உதவி செய்ததும் இல்லாமல் பல குறிப்புகளை அள்ளி வழங்கி எனக்கு உதவி செய்த நண்பர் திரு.அப்துல் பஷித்
    •  நீங்கள் புதிய பதிவராய் இருக்கும் பட்சத்தில் தவறாது நண்பர் பஷித்தின் தளத்தை பாருங்கள்! Google Blogger பற்றிய அற்புதமான தகவல் கிடங்கு அது! அதுவும் எளிய, இனிய தமிழில்!
2. முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன்:
  • என்னதான் பிற காமிக்ஸ் பதிவர்கள் பல வருடங்களாக வெளுத்துக்கட்டினாலும், எனக்கு இந்த தளத்தை ஆரம்பிக்க உத்வேகம் தோன்றியதே திரு.விஜயனின் புதிய வலைப்பூவை பார்த்துத்தான்! புதிய  முத்து / லயன் காமிக்ஸ் இதழ்களின் தடையற்ற வருகை மற்றுமொரு காரணம்!
  • சிறிய வயதில் தமிழார்வம் தடையின்றி இருந்ததிற்கு நான் படித்த தமிழ் காமிக்ஸ் இதழ்கள் முக்கிய காரணம். அதில் விஜயனின் பிரத்தியேக மொழிபெயர்ப்பில் வெளிவந்த லயன் காமிக்ஸுக்கு பெரும்பங்கு உள்ளது! அவரின் மேல் ஒரு தனிப்பட்ட மரியாதை எப்போதும் உண்டு!
3. என் தளத்தை படித்து ஆதரவளித்து வரும் வாசக நண்பர்கள்!:
  • என் தளத்தை படித்து ஆதரவளித்து வரும் முகம் தெரியாத வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்! உங்களின் வருகையும், கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன! புதிய நண்பர்கள், எனது தளம் மூலமாக கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி! :)
ஒரு சில உபயோகமற்ற தகவல்கள்!:
  •  பிளாக்கர் பற்றிய technical சங்கதிகள் நிறையவே கற்றுக்கொண்டுள்ளேன்! கடந்த ஓரிரு நாட்களாக, இராப்பகல் பாராமல் இத்தளத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்துள்ளேன்! இன்னும் சில பகுதிகள் முழுவடையவில்லை! இப்போது தளத்தின் Look and Feel எப்படி உள்ளது என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்வேன்!
  •  இந்த வலைப்பூவை தொடங்கியதில் இருந்து எனக்கு தூக்கமே தொலைந்துவிட்டது! ப்ளாக் எழுதுவது என்பது ஒரு போதையூட்டும் செயல் என அனுபவத்தில் உணர்கிறேன்! ஒரு பத்து பேர் பாராட்டி பின்னூட்டமிட்டால் போதும், போதை தலைக்கேறி விடுகிறது! முப்பொழுதும் அடுத்து என்ன எழுதலாம் என்ற சிந்தனைதான்! ஒரே மாதத்தில் ஒருவித சலிப்பும் வந்து விட்டது! எதுவும் அளவுக்கு மிஞ்சினால் இதுதான் கதி :)
  • கடந்த மாதம் வரையில் "Facebook" என்றொரு வஸ்துவை வாழ்வில் கொஞ்சமும் மதிக்காமல் இருந்த நான், இந்த தளத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அங்கு உள்ள குழுமங்களில் கும்மி அடிக்க தொடங்கினாலும் தொடங்கினேன் - "Facebook" நோய் என்னையும் தாக்கிவிட்டது! :(
    • நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எனது போஸ்ட்களுக்கு அப்டேட் வருமா? அவர்கள் அதை லைக் பண்ணினார்களா என நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு Monitor முன் சதா சர்வகாலமும் உட்காரத் தொடங்கியதில் எனது கண்கள் இமைக்கவும், தூங்கவும் மறந்து விட்டன!  எனது நடத்தை அவைகளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பதை கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உணர்கிறேன் - சோர்ந்து, சிவந்து போன கண்கள் என்னை வெறுப்பாய் பார்க்கின்றன!
ஒரு சில மட்டமான மைல்கல்கள்!

  • பதிவெழுத தொடங்கியபோது, ஒரே மாதத்தில் ஒரு லட்சம் ஹிட்ஸ் அடிக்க வேண்டும் என்ற ஒரு பேராசை இருந்தது! அதில் பத்து சதவீதம் கூட நான் எட்டவில்லை என்பதில் சின்ன வருத்தம்தான்! ஒரு மாதத்தில் 7275 ஹிட்ஸ் மட்டுமே எட்டிப் பிடிக்க முடிந்தது! இதில் எனது Page Load-களே 750  இருக்கும்! பின்னூட்டம் வந்ததா என நாளுக்கு 20 தடவை குறையாமல் எனது தளத்தை நானே பார்த்ததில் F5 Key தேய்ந்ததுதான் மிச்சம்! எனது Page load-களை track செய்வதை சமீபத்தில் ப்ளாக் settings மூலம் நிறுத்தி விட்டேன்!  
  • திரட்டிகளில் எனது தளத்தை இணைத்து ரேங்க் பார்ப்பது எனது சமீபத்திய பொழுதுபோக்கு! 1788 - இது எனது தமிழ்'மானம்' போகும் ரேங்க்! ;) தளம் இணைக்கப்பட்ட பத்து நாளில் இந்த அளவாவது இருக்கிறதே என சந்தோசப்பட வேண்டியதுதான்!
  • ஒரு வலைதளத்திற்கு மிகவும் முக்கியமானதொரு அம்சம் அதனை எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் என்பதுதான்! 22 பேர் கொண்ட பெரும்படை எனது! என்னுடைய உறவினர்களோ, நண்பர்களோ ஒருவரும் இதில் இல்லை என்பது இன்னொரு கூடுதல் தகவல்! மெம்பராக இணையாமல் புக்மார்க் மட்டும் போட்டுப் படிக்கும் வாசக கண்மணிகளுக்கும் எனது நன்றிகள்! ;) 
  • Top 10 பதிவுகளும், Top Referring Sites-களும் உங்கள் பார்வைக்கு:  

டாப் 10 பதிவுகள்! - எனது வரிசையில் அல்ல ;)

டாப் 10 பரிந்துரைத்த தளங்கள்! இதில் ஜாக்கி மற்றும் சங்கரின் தளங்களில் நான்கைந்து பதிவுகளில் பின்னூட்டம் இட்டே இவ்வளவு ஹிட்ஸ்! ;)

ஒரு சில 'அன்பான' எதிர்ப்புக்கள்:
  • எதிர்ப்புக்கள் தோன்றும் அளவு நான் பெரிய பதிவராகவில்லை, அதற்கு பல வருடங்கள் பிடித்திடும் என்பதை நானறிவேன்! இருந்தாலும் எனது இரசிக்கத்தகாத ஒரு விளம்பர உத்தியினால் ஒரு சில பதிவர்களை வெறுப்பேற்றி இருக்கிறேன்! மற்றும் Facebook நண்பர்களிடம் 'தரமான' திட்டு வாங்கியுள்ளேன்! 
  • பதிவர்களின் பின்னூட்டப் பெட்டிகளில் எனது தளத்துக்கான இணைப்பை அளிப்பதை கனவு, ஜாக்கி, சங்கரின் தளங்களில் நான்கைந்து தடவையும், யுவாவின் தளத்தில் ஓரிரு தடவையும், கருந்தேளின் தளத்தில் ஒரே தடவையும் செய்தேன்! 
  • ஆனால் எல்லை மீறியதென்னவோ விஜயனின் வலைப்பூவில்தான்! அதற்கு அவர் அளித்த 'அன்பான' பதிலால் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளேன்! இந்த முறையில் விளம்பரப்படுத்துவதை நிறுத்திக்கொள்ளப்போகிறேன்! இனிமேலும் எனது மதிப்பை 'யாரிடமும்' குறைத்துக் கொள்ளுவதாய் இல்லை! :)
  • பொதுவாகவே, பின்னூட்ட விளம்பரங்கள் செய்வது பதிவுலகில் ஒரு கேவலமான செயலாகவே கருதப் படுகிறது! அதிலும் விஜயனின் தளத்தில் நானே தேவையில்லாது உரிமை எடுத்துக்கொண்டு அடித்த விளம்பர கும்மி தகாத செயல்தான்! மன்னிக்கவும், விஜயன்!

ஒரு சில முக்கிய முடிவுகள்!
  • கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்தவாறு காமிக்ஸ் பற்றி அல்லாத பதிவுகளும் இத்தளத்தில் வெளிவந்திடும்! காமிக்ஸ் என்பது மிக மிக சிறுபான்மையினரின் ரசனையாகவே இருந்து வருகிறது! அது பெரும்பான்மையோரை போய் சேர்ந்திட அதிக வாசகர் எண்ணிக்கை அவசியமான ஒன்று! 
    • திரட்டிகள் மூலம் ஜனரஞ்சக பதிவை படிக்க வரும் ஒரு வாசகர் ஓரிரு காமிக்ஸ் பதிவுகளை படித்தாலே அது எனக்கு வெற்றிதான்! எனவே இனி Mixer பதிவுகள் தொடரும்!
  • திரட்டிகளின் மூலம் வரும் விளம்பரமே தற்போதைக்கு போதுமானது என எண்ணுகிறேன்! விளம்பரப் பின்னூட்டங்கள் இனி என்னிடம் இருந்து மற்ற பதிவர்களுக்கு வராது! இதை படிக்கும் ஒவ்வொருவரும் முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு இத்தளத்தை பரிந்துரையுங்கள்! விருப்பமிருந்தால் உறுப்பினராக சேருங்கள்! ஒரு நூறு பேராவது இருந்தால்தானே சார் கெத்து?! :)
    • கருத்துச் சுதந்திரம் மிக்க முத்து / லயன் Unofficial Facebook குழுமத்தில் எனது கும்மிகளும், காமிக்ஸ் பற்றிய எனது பதிவுகளின் விளம்பரங்களும் தொடரும் என்பதை உற்சாகத்துடன் இங்கு பதிவு செய்கிறேன்! Atleast, அவர்களாக துரத்தும் வரை! ;)
  • அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக வேலைச்சுமை இல்லாதிருந்த காரணத்தினாலும், எனது மகன் மற்றும் மனைவியார் கோடை விடுமுறையை குளிர்ச்சியாக கழிக்க, தமிழகம் சென்று விட்ட காரணத்தினாலும் எனக்கு கிடைத்த அதீத ஓய்வு நேரத்தில் இதையும் சேர்த்து முழுதாய் 20 பதிவுகள் இட்டு விட்டேன்! (முதல் பதிவை தவிர்த்து)
    • கடந்த வாரம் முதல் அலுவலகத்தில் புதிய ப்ராஜெக்ட் தொடங்கி விட்ட காரணத்தினாலும், தமிழக குளுமை தாங்காது துணைவியார் எனது துடுக்குப் பயலோடு இந்த வாரம் வீடு திரும்பிவிடுவார் என்ற காரணத்தினாலும் இனிமேல் அடிக்கடி பதிவிட முடியாது என்பதை என் சிவந்த கண்களின் பலத்த கரகோஷத்துக்கிடையே தெரிவித்துக்கொள்கிறேன்! :)
கடைசியாக ஒரு அறிவிப்பு!
முழுநீள இந்தப் பதிவை, நீங்கள் முடிவு வரை பொறுமையாக படித்ததிற்கு நன்றி கூறும் விதமாய், அட்டகாசமான ஒரு காமிக்ஸ் பற்றிய பதிவு - மிக விரைவில்! :)

அது வரை, Bye, bye!

பி.கு: திரட்டிகளில் ஓட்டளிக்க மறவாதீர்கள்! ;)

கருத்துகள்

  1. அலுவலக பணிக்கு விரைவாக ஆயத்தமாகி கொண்டிருந்த பொழுதும் இதைபடிகாமல் இருக்கமுடியவில்லை . முதன் முதலாக எனது ப்ளாக் வரலாறில் (?????) .......மீ த ஃபர்ஸ்ட்டு!... விரைவில் பின்னூட்டம்

    பதிலளிநீக்கு
  2. :) :) நன்றி ஸ்டாலின்! ஆரம்ப பத்தியில் உள்ள எச்சரிக்கையையும், பதிவின் நீளத்தையும் கண்ட பிறகு கூட பொறுமையாக படித்ததிற்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. கருத்துகணிப்பு நான் பார்க்காமல் போயிட்டேனே, பார்த்திருந்தால் முதல் கேள்விக்கு ஓகே செய்திருப்பேன்.

    நல்ல பதிவுகள் வெளிவரும்னு இந்த படிக்கும் போது தோனுச்சு.

    ஆனா கடைசில பதிவு எழுத டைம் இல்லைன்னு சொல்லிடிங்களே?
    ஆனாலும் காமிக்ஸ் வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

    வாழ்த்துக்கள் பாஸ்.....

    பதிலளிநீக்கு
  4. புதிய தோற்றம் நன்றாக இருக்கிறது நண்பா! என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!

    காமிக்ஸ் பற்றிய பதிவுகளையும், கடந்த பதிவைப் போன்றும் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. @தமிழ்வாசி பிரகாஷ்: வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமா வெளிவரும் பாஸ்! :) அடுத்து காமிக்ஸ் பதிவுதான்!

    @Abdul: நன்றி நான்தான் சொல்ல வேண்டும்! :)

    பதிலளிநீக்கு
  6. நண்பரே !
    முதலில் இடதுபக்கம் உள்ள like , tweet , g +1 ,share போன்ற இடுக்கைகளை வேறு இடத்திற்கு நகர்த்துங்கள் படிப்தற்கு இடையூறாக உள்ளது .
    //ஒட்டு பட்டைகளை எப்படி இணைப்பது எனத் நான் தடுமாறிக் கொண்டிருந்தபோது தானாக முன்வந்து அவற்றை நிறுவ உதவி செய்ததும் இல்லாமல் பல குறிப்புகளை அள்ளி வழங்கி எனக்கு உதவி செய்த நண்பர் திரு.அப்துல் பஷித்//
    இதுவரை அதிகமாக காமிக்ஸ் blogger மட்டும் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்த நான் இவரது பிளாக்கர் பார்த்ததும அதிக செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது
    // இப்போது தளத்தின் Look and Feel எப்படி உள்ளது என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்வேன்! //

    நன்றாக உள்ளது . ஆனால் கச கசப்பாக உள்ள இடங்களை சற்று ஒழுங்கு படுத்தலாம் .

    //ப்ளாக் எழுதுவது என்பது ஒரு போதையூட்டும் செயல் என அனுபவத்தில் உணர்கிறேன்! //

    சற்று திருதித்கொள்ளவும் "மிகவும் போதையூட்டும்"

    //ஒரு பத்து பேர் பாராட்டி பின்னூட்டமிட்டால் போதும், போதை தலைக்கேறி விடுகிறது! முப்பொழுதும் அடுத்து என்ன எழுதலாம் என்ற சிந்தனைதான்!//

    சிற்றிதழ் பத்திரிகை நான் நடத்தியபொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மனதில் நிழலாடுகிறது .

    //எனது Page load-களை track செய்வதை சமீபத்தில் ப்ளாக் settings மூலம் நிறுத்தி விட்டேன்!//

    இதை எனக்கும் கற்றுகொடுங்கள்

    //அவர் அளித்த 'அன்பான' பதிலால் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளேன் //
    பின்னாட்களில் அவருடைய பின்னூட்டத்தை உங்கள் பதிவில் போட்டு அசத்த நினைக்கலாம்

    //பொதுவாகவே, பின்னூட்ட விளம்பரங்கள் செய்வது பதிவுலகில் ஒரு கேவலமான செயலாகவே கருதப் படுகிறது//

    அனைவரையும் அப்படி நினைத்துவிட வேண்டாம்

    //////இனிமேல் அடிக்கடி பதிவிட முடியாது என்பதை என் சிவந்த கண்களின் பலத்த கரகோஷத்துக்கிடையே தெரிவித்துக்கொள்கிறேன்! /////

    அட வர்ணனை நன்றாக உள்ளது ஆனால் முடிவு சரி இல்லையே .........

    பதிலளிநீக்கு
  7. //முதலில் இடதுபக்கம் உள்ள like , tweet , g +1 ,share போன்ற இடுக்கைகளை வேறு இடத்திற்கு நகர்த்துங்கள் படிப்தற்கு இடையூறாக உள்ளது//
    விரைவில் சரி செய்கிறேன்!

    //நன்றாக உள்ளது . ஆனால் கச கசப்பாக உள்ள இடங்களை சற்று ஒழுங்கு படுத்தலாம் .//
    அவை எந்த இடங்கள் என் குறிப்பிடுங்கள் நண்பரே!

    //சற்று திருதித்கொள்ளவும் "மிகவும் போதையூட்டும்"//
    :)

    //Page load-களை track ... இதை எனக்கும் கற்றுகொடுங்கள் //
    www.blogger.com -> login -> click on your blog -> select "Stats" -> on right hand side you will see an option to "Don't track your own page views" -> click on that -> select don't track radio button -> save -> you are done!

    //அனைவரையும் அப்படி நினைத்துவிட வேண்டாம்//
    எது எப்படியோ, இனி மற்ற வலைபூக்களில் விளம்பரங்கள் வராது :) விளம்பரம் காண உலக புகழ் பெற்றதொரு facebook குழுமத்தில் இணைவீர் :D

    //அட வர்ணனை நன்றாக உள்ளது ஆனால் முடிவு சரி இல்லையே .........//
    பதிவுகளை நிறுத்தப்போவது இல்லை - நிச்சயமாக வெளிவரும்! என்ன, தினம் பதிவிட முடியாது!

    ஆதரவுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia