காமிக்ஸ் துறையில் ஒரு பெரும் பங்களிப்பு பெல்ஜியத்துக்கு இருக்கிறது! அந்நாட்டின் கலைஞர்கள் தனியாகவும், பிரான்ஸ் போன்ற சக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் கூட்டு முயற்சியுடனும் எண்ணற்ற அற்புத படைப்புகளை காமிக்ஸ் உலகிற்கு அளித்துள்ளார்கள்! டின் டின், தோர்கல், XIII போன்றவை உதாரணத்திற்கு (வெகு)சில! அவ்வரிசையில் ஒரு முக்கிய கற்பனை கதாபாத்திரம்தான் லார்கோ! இத்தொடர் முதலில் வெளியானது ஃபிரெஞ்சு மொழியில். லார்கோ கதாபாத்திரத்தை உருவாக்கியவர் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு XIII காமிக்ஸ் நெடுந்தொடர் மூலம் நன்கு அறிமுகமான Jean Van Hamme என்ற பிரபல பெல்ஜிய கதாசிரியர்! (ஓவியர் அல்ல). 1970 -களில் நாவல் வடிவத்தில் அறிமுகமாகி பெரிய வரவேற்பில்லாத காரணத்தினால் கிடப்பில் பல வருடங்கள் கிடந்தவர்தான் லார்கோ! 80-களின் இறுதியில் "Philippe Francq" என்ற பெல்ஜிய ஓவியர், ஒரு புதிய காமிக்ஸ் அறிமுகபடுத்த வேண்டும் என்ற யோசனையோடு வான் ஹாமை சந்தித்தபோது லார்கோ தூசி தட்டிக்கொண்டு வெளியில் வந்தார்! இன்றளவும் லட்சக்கணக்கில் விற்றுக்கொண்டும் இருக்கிறார்!
லார்கோ தொடரில் ஒவ்வொரு தொகுப்பும் இரண்டு கதைகளை உள்ளடக்கி வருகிறது! முதலாவதில் இசகு பிசகாக நம் ஹீரோ மாட்டிக்கொள்வார், இரண்டாவதில் லாவகமாக அதிலிருந்து மீண்டு தனது நிறுவனத்தை காப்பாற்றுவார்! இதுவரை 17 தொகுப்புக்கள் வெளி வந்துள்ளன! முதல் தொகுப்பு 1990-இலும் கடை தொகுப்பு 2010-இலும் வெளியாகின.சரி, முத்துவில் வெளியாகியிருக்கும் முதல் இரு பாகங்களின் கதைச் சுருக்கத்தை பார்ப்போம்! கதையை தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் சிகப்பு எழுத்துக்களை தாண்டிச் செல்லலாம்!
லார்கோ - பெற்றோரை இழந்த ஒரு இளைஞர். இவர், பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட மிகப்பெரிய சர்வதேச நிறுவனமான "The W Group" என்ற நிறுவனத்தின் தலைவர் "Nerio Winch"-ஆல் தத்து எடுக்கப்படுகிறார்! நெரியோ, தனக்கு பிறகு தனது நிறுவனத்தை வழி நடத்த லார்கோவை பத்து வயதிலிருந்தே எல்லா விதத்திலும் தயார் படுத்தி வருகிறார்! நெரியோ ஒன்றும், லேசுப்பட்ட ஆள் கிடையாது. வியாபாரத்தில் எல்லா தகிடுதத்த வேலைகளையும் செய்து முன்னேறியவர், அதனால் பணத்தை மட்டுமின்றி பல எதிரிகளையும் சம்பாதித்தவர்! அவரை மனதளவில் தந்தையாக லார்கோ ஏற்றுக் கொண்டது கிடையாது அதற்கு நெரியோவின் வழிமுறைகளும் ஒரு காரணம்.
இந்த சூழ்நிலையில் நெரியோ தனது நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவரால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கொடுஞ்செயல் சாமர்த்தியமாக தற்கொலை என ஜோடிக்கப்படுகிறது - நெரியோவுக்கு பிரைன் கேன்சர் இருந்தது காரணமாக காட்டப்படுகிறது! திடீரென்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இருபத்தாறே வயதான நமது ஹீரோவின் தலையில் இடியாக விழுகிறது! கூடவே இதை கொஞ்சமும் விரும்பாத, கூட இருந்தே குழி பறிக்கும் W குழுமத்தின் உயரதிகாரிகளை சமாளிக்கும் தொல்லை பிடித்த வேலையும்தான்! லார்கோவின் தந்தை நெரியோ கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இஸ்தான்புல்லில் இருக்கும் லார்கோவை ஒரு கொலை கேசில் மாட்டி விட்டு விடுகின்றனர்!
அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை முதல் பாகத்திலும் (என் பெயர் லார்கோ!), தனது வளர்ப்பு தந்தையின் பங்குகளை கைப்பற்றி நிறுவனத்தை எப்படி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்பதை இரண்டாம் பாகத்திலும் (யாதும் ஊரே... யாவரும் எதிரிகள்...!) ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார்கள்! இரண்டாம் பாகத்தில் லார்கோவின் நண்பனே எதிரியாக மாறுவது போல ஒரு பகுதி இருக்கும் - எனவேதான் "எதிரே ஒரு எதிரி" என்று பதிவின் தலைப்பில் இருக்கிறது! குழம்ப வேண்டாம் - பதிவின் தலைப்பை சுருக்கவே இந்த மாற்றம்! :)
லார்கோ ஒரு வசீகரமான போக்கிரி - பிரிட்டிஷ் காமிக்ஸ் ஹீரோக்களை போலும் இல்லாமல், அமெரிக்க காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை போலும் இல்லாமல் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்த தனி ரகம்! ஆளை பார்த்தாலே ஒரு நிறுவனத்தின் தலைவர் என்றெல்லாம் சொல்ல முடியாதபடிக்கு ஒரு ப்ளேபாய் லுக், கலைந்த கேசம், அலட்டலான பார்வை, மப்பான பேச்சு, பதட்டமில்லாத சாகசம் என ஒரு மார்கமாகத்தான் இருக்கிறார்! ஜேம்ஸ்பாண்ட் போல் இவர் ரகசிய உளவாளி கிடையாது என்றாலும் இவர் செய்யும் மற்ற சாகசங்கள், சில்மிஷங்கள் எல்லாம் ஜேம்ஸ் ரகம்தான்!
லார்கோவின் பாத்திர வடிவமைப்பு அபாரம்! சிறு வயதில் இருந்து அவர் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக உயர் பொறுப்புக்கு செதுக்கப்படுகிறார் என்பதை தெளிவாக சொல்கிறார்கள். துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது "Casino Royale" ஜேம்ஸை நினைவுபடுத்துகிறது! அவருடைய ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன - இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! அமெரிக்க மோகம், ஐரோப்பிய நாடுகளுக்கும் இருக்கிறது என்பதை லார்கோவின் - W நிறுவனத் தலைமையகம் மற்றும் கதைக்களன் நியூயார்க் என்றிருப்பதில் புலனாகிறது! அதே போல வசதி படைத்ததொரு அமெரிக்கர் / ஐரோப்பியர் எந்த நாட்டிலும் என்ன அக்கிரமும் செய்து விட்டு ஜஸ்ட் லைக் தட் தப்பித்து போய் விடலாம் என்பது மாதிரியான கதையமைப்பு எரிச்சலூட்டுகிறது!
முதல் பக்கத்தில் உள்ள பாத்திரங்களின் அறிமுகப் பக்கம், தலை சுற்ற வைக்கிறது. வாய் சுளுக்க வைக்கும் அத்தனை வெளிநாட்டுப் பெயர்களை மற்றும் அவர்கள் வகிக்கும் பதவிகளை நினைவில் நிறுத்த என்னால் ஆகாது என்பதால் அதை படிக்காமலேயே விட்டு விட்டேன் - இருந்தாலும் கதை புரிவதில் குழப்பம் வரவில்லை. தமிழில் வெளிவந்த கதைகளில் குறிப்பாக காமிக்ஸ்களில் இவ்வளவு விரிவாக நிர்வாக மேலாண்மையை எதுவும் பிரித்து மேய்ந்தது இல்லை என நினைக்கிறேன்! ஏதோ கம்பெனி போர்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணுவது போன்ற ஒரு உணர்வு படிக்கும் போது ஏற்படுகிறது! துப்பாக்கி சண்டைகள், கார் சேசிங் போன்ற வழக்கமான சமாச்சாரங்களை தாண்டி, வியாபார நுணுக்கங்கள் மற்றும் போர்டு ரூம் விவாதங்களை பற்றி விரிவாக அலசுவதால் லார்கோ தொடர் ஒரு தனித்தன்மையுடன் திகழ்கிறது!
இக்கதையில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்கான சித்திரங்கள், நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன! சான்ஸே இல்லை! நீங்களே பாருங்கள்!
|
எனவே எழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் மாறி மாறி வருவது தவிர்க்கவியலா ஒன்று. அந்த வகையில் இவ்விதழின் மொழிபெயர்ப்பாளர்கள் விஜயன் மற்றும் கருணையானந்தம் - இருவரும் பாராட்டுக்குரியவர்கள்! லார்கோ ஒரு ஃபிரெஞ்சு படைப்பு என்பதால் FTV ஜில்பான்ஸ் சமாச்சாரங்களும் நிறையவே! ஆனால், அவை பெரும்பாலும் தமிழில் எடிட் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன், இந்த கதை ஆங்கிலத்தில் வெளியான போது கூட இந்த கத்திரி சமாசாரம் நடந்தேறியிருக்கிறது! இதன் ஆங்கிலப் பதிப்பை பற்றி ஃரபிக் ராஜாவின் இந்த பதிவில் காணலாம். சற்றே முதிர்ந்த ரசனைக்கான காமிக்ஸ் இது, இதன் அடிப்படையில் ஒரு சில திரைப்படங்களும் வந்துள்ளன!
சமீபத்தில் இணையத்தில் ஒரு புரளி கிளம்பியுள்ளது! கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகவிருந்த "யோகன் அத்தியாயம் ஒன்று" என்ற திரைப்படத்தின் டீசர் போஸ்டர் ஆங்கிலத்தில் வந்த லார்கோ வின்ச் திரைப்பட போஸ்டரை உரித்து(!) வைத்திருந்ததால், யோகனின் கதையும் லார்கோவின் 'inspiration'-னுடன் இருக்குமோ என்ற சந்தேகம்தான் அது!
விஜய் Vs . வின்ச்! |
இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்! லார்கோவின் இரண்டு கதைகள் கொண்ட ஒவ்வொரு தொகுப்பும் ஆங்கிலத்தில் ருபாய் 350 முதல் 1000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது! ஆனால் தமிழில் அதே தரத்தில், நூறு ருபாய் விலையில் வெளியிட்ட எடிட்டர் விஜயன் பாராட்டுக்குரியவர் - ISBN Bar Code-உடன் வெளியாகும் முதல் தமிழ் காமிக்ஸ் இதழ் இதுவாகத்தானிருக்கும்! தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! ஆனால் மற்றவர்க்கு, நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இது ஒரு தவறவிடக்கூடாத காமிக்ஸ் இதழ்! இதை Ebay மூலமாகவோ அல்லது லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ வாங்கலாம்!
பின்குறிப்பு: 1986-இல் வெளிவந்த திகில் காமிக்ஸின் முதல் இதழும் மறுபதிப்பாக லார்கோ இதழுடன் இணைந்து வந்துள்ளது - தயவு செய்து அதை மட்டும் படித்துவிடாதீர்கள்! இந்த விமர்சனத்திற்கு அப்புறம் உங்களுக்கு கொஞ்ச நஞ்சம் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருந்தால் அதுவும் தொலைந்து விடும்!
இங்க கிடைக்குதான்னு தேடிப்பார்க்கிறேன் நண்பா ..!
பதிலளிநீக்குஇங்கேன்னா, எங்கே நண்பா?!! :)
பதிலளிநீக்குArumaiyana vimarsanam!
பதிலளிநீக்குEthire oru ethiri thalaippu super!
Vijayan sarukku koncham thalaippukku ideya kudunka!
@Msakrates: ச்சே, ச்சே நீங்க வேற! என்ன இருந்தாலும் ஆசிரியரின் தலைப்புதான் பெஸ்ட்!
பதிலளிநீக்குயாதும் ஊரே... யாவரும் எதிரிகள்...!
மேலும் அந்த தலைப்புதான் இரண்டாம் பாக கதைக்கு மிகப்பொருத்தமானது!
பதிலளிநீக்குஅட்டகாசமாய் விமர்சனம் பண்ணியிருக்கிரிர்கள் (பின்னியிருக்கிரிர்கள்.).கண்டிப்பாய் கார்ப்பரேட் உலகத்தை புரிய வைத்ததுடன் ,நம்மையும் பங்கேற்க வைத்துள்ளார் ஆசிரியர்
பதிலளிநீக்கு@ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: நன்றி நண்பரே! நல்ல ரசனையான புனைப்பெயர் உங்களது! :)
பதிலளிநீக்குநன்றி நண்பரே ,உபயம் ராஜேஷ் குமார்" கோயம்புதூரிளிருந்து ட்ரன்க்கால்" க்ரைம் நாவல் அண்ட் நமது ஆசிரியரின் இரும்புக்கை
பதிலளிநீக்கு21 வருடமா ?. கதை படிக்கும் போது கண்டிப்பாக தெரியவில்லை. சிறுவயது லார்கோவும், பெரிய லார்கோவும் மாற்றி மாற்றி ஒரே பக்கத்தில் காண்பித்தது படம் பார்க்கும் உணர்வைத் தந்தது.
பதிலளிநீக்குஆக்ஷன் காட்சிகளும் அருமை. சில திருப்பங்களை முன் கூட்டியே ஊகிக்க முடிந்தாலும் நல்ல கதையமைப்பு.
லார்கோவின் முகம் சில இடங்களில் வரைந்தது நன்றாக இல்லை..
// கலரில் லார்கோவை படித்து விட்டு, இன்னொரு கதையை கருப்பு வெள்ளையில் சற்றே தரம் குறைந்த தாளில் படித்திட மனம் வரவில்லை என்பதே பொருத்தமாக இருக்கும்!//
பதிலளிநீக்குவழி மொழிகிறேன்
பதிவு கதை போல வேகமாக உள்ளது .
@பின்னோக்கி: //லார்கோவின் முகம் சில இடங்களில் வரைந்தது நன்றாக இல்லை//
பதிலளிநீக்குநிஜம்தான்!
Erode M.STALIN: மிக்க நன்றி நண்பரே! :)
ரொம்ப லேட்டா வந்துட்டேன்போல.. நானும்தான் லார்கோ படிச்சேன்(கவனிக்கவும் படிச்சேன்). ஆனால் நீங்க பிரிச்சி மேஞ்சி இருக்கிங்கனு உங்க பதிவு சொல்லுது. இனிமேல் உங்க பதிவை படிச்சுட்டு பிறகு புத்தகத்த படிக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்.
பதிலளிநீக்கு//பிரிச்சி மேஞ்சி//
பதிலளிநீக்குP.Karthikeyan: அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல நண்பரே :) என் பதிவை படிச்சுட்டுதான் புக்கை படிப்பேன்னு எல்லாம் அடம் பிடிக்காதீங்க :D ஏன்னா எப்பவுமே எனக்கு புக்கு லேட்டாத்தான் வரும்! நான் சந்தா கட்டுனது ரொம்ப லேட்டாமாம்! ;) :) :)
@பின்னோக்கி: //லார்கோவின் முகம் சில இடங்களில் வரைந்தது நன்றாக இல்லை//
பதிலளிநீக்கு//நிஜம்தான்!//
பல கோணக்களில் மிக கிழடாகவே தெரிகிறார் .
>> அமெரிக்க மோகம், ஐரோப்பிய நாடுகளுக்கும்
பதிலளிநீக்கு>> இருக்கிறது என்பதை லார்கோவின் - W நிறுவனத்
>> தலைமையகம் மற்றும் கதைக்களன் நியூயார்க்
>> என்றிருப்பதில் புலனாகிறது!
So with this broad brush, we end up explaining XIII, Tex Willer, Blueberry, etc... pretty much everything, right?... Have you heard of the concept of "Six degrees of Separation"? At least that came to my mind, reading your point.
There's no drought for points of view, so here's mine:
After the 1945 Europe war (not sure why it *must* be called "World War") , Europe was forced to accept a much more subdued role in the World. European story writers simply reflected this reality into their story lines.
BTW, Nerio was a III generation Yugoslav immigrant BTW and Largo is a I gen immigrant, So the protagonist himself is from Europe's own backyard, no?
This is the 2nd time I am hearing about "Six degrees of Separation" on my blog (See my Avengers review & the comments box!). So with that very broad brush I can also claim America as being Europe's colony because ~70% of its population are European settlers / immigrants right? ;) But if everyone starts relating everything to that theory then no one can express their opinions / views - because at the end of the day one can easily say it is all related :)
பதிலளிநீக்குAnd the answer to your question partly lies in your own comment! Europe was forced to accept the reality of being the second fiddle in the new world order - in other words they are heavily influenced by America! So Europe's American Affection is the sincerest form of America's Influence on them! :) :) :) - remember reading this phrase in another form on editor's blog? ;)
anyways thanks for coming up with some alternate thoughts on that generalized comment!
@கிருஷ்ணா வ வெ:
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே! படித்துவிட்டு அவசியம் கருத்திடுகிறேன்... :)
Karthik,
பதிலளிநீக்குI was merely trying to polish your argument into something more solid in my first comment. Actually, I don't buy into that point of view myself ;-). One reason is, Europeans don't take so kindly to the "forced" subdued role of playing second fiddle to Americans, and they are quite bitter about having to do so.
Personally, I like to think of the reason as something more mundane.... Most swashbuckling adventures, given a choice, like to be set in a place that is "somewhere else" than where its readers will tend to read them. That sense of "foreign" and "exotic" locale gives the story an additional thrill in the readers' minds when they imagine the hero adventuring in unknown lands, unknown seas, etc... So, for this prosaic reason, James Bond travels all the way to some foreign country to engage in "dishum-bishum" with the villain. For this prosaic reason, Italians read about a cowboy in Arizona. For this prosaic reason, Belgians always read their heroes in exotic "other" destinations, for e.g., XIII, Captain Tiger, Tintin! and even Asterix was forever travelling to foreign places!! For this prosaic reason, Sindbad was alwas travelling to some "dangerous island" for his adventures. It kindles the imagination, kindles the fear of the unknown, kindles the joy of living vicariously, etc. Do you see what I mean?
It is good to have had this discussion with you as well.
Actually, the impact of what I say will hit you more if you forget comics for a moment and think in terms of novels... E.g., Think about all of Robert Lois Stevenson's novels: Treasure Island, etc...
பதிலளிநீக்குThink our own கடல் புறா, பொன்னியின் செல்வன், யவன ராணி... Why is their popularity enduring across generations? Because of "travel" and the exotic locales of another land (in another time) involved in the narrations. :-)
not to forget our filmi songs where they simply dream and land in some foreign land just to shake a leg or two :D
பதிலளிநீக்குand another even more mundane reason could be plain marketing strategy to find a large audience for their comics/novels/films. HQ in New York sounds more global and salable than having it in Brussels! :)
> not to forget our filmi songs where they simply
பதிலளிநீக்கு> dream and land in some foreign land just to
> shake a leg or two :D
Ha ha.... +1 for lateral thinking. -1 for film reference. Same equilibrium state! ;-) Ha ha.
As to your second point.... No, I don't agree about the marketing strategy. It is how the swashbuckler genre is set... Marketing or no marketing.
Hence my reference to those Tamil novels as well. And when Sindbad stories was written, there was not even a local market, forget international ones.
Treasure Island (Stevenson), Huck Finn (Twain), Kipling, were written in a time when international marketing was nil, and for the consumption of "homies" ;-).
By default, a successful swashbuckler from those very olde times was set in an exotic land with exotic people... Only the *Hero* character was the one that you, "gentle reader" were allowed to relate to. Modern example: "Largo speaking Tamil" is so much more endearing than those English speech bubble comic scans that I saw recently on the internet ;-)
and in present day scenario, why that "exotic land" always have to be the United States?! :) and for Tamil example you can include many of Goutam Menon's films :D and that's what I tend to call அமெரிக்க மோகம் ;)
பதிலளிநீக்கு> why that "exotic land" always have to be
பதிலளிநீக்கு> the United States?!
Very good and very valid question...
Personally, I take your side wholeheartedly with regards to blind "அமெரிக்க மோகம்". It is dumb, stupid, foolish, childish, etc. Indeed your Tamil blog is a valiant attempt at using mother tongue for medium of expression over the WWW and needs to be appreciated.
But in case of Largo, because of the "industrialist playboy" plot, the place has to be USA, which is the hot-pot of everything industrial civilisation stands for: naked greed and ambition, cheating, sleaze, profit, etc..... These qualities invariably drive adventures, right ;-)
But if you recall, "Captain Prince and Barney" stories from European writers are set everywhere else, because the story line demands it.
Tintin is also set everywhere else and Herge was particularly scathing and satirical of USA in "Tintin in America", remember? One of my favourite parts in the story is here.... http://sawbonessurio.files.wordpress.com/2011/11/tintin-in-america-pp29.jpg
Martin (marma manithan) is an America based explorer exploring Europe for all his adventures...
Johnny Nero+Stella are always adventuring everywhere except their own "hometown" in London. ;-)
You get the idea, right? It all depends on the setting and the storyline, that's all.
//But if you recall, "Captain Prince and Barney" stories from European writers are set everywhere else, because the story line demands it. //
பதிலளிநீக்குagreed :)
//Tintin//
believe it or not, I never read Tintin / Asterix etc. - like I mentioned in one of my posts - I've always been a தமிழ் காமிக்ஸ் தவளை! and I'm still one ;) I hope I will get out of this comfort zone someday!
and thanks for your appreciation on me writing in Tamil! Yes it does give me a sense of satisfaction writing the posts in Tamil... but I am still in a big dilemma - whether to run the blog in pure tamil and get alienated :D or just go with colloquial tamil added with english words here and there... :)
and I briefly scanned through your blog and I must say all that you have posted out there sounds more like rocket science to me :) I am very poor with money and numbers :) :) :)
பதிலளிநீக்கு>> I never read Tintin / Asterix
பதிலளிநீக்குI think it doesn't make the slightest difference to one's life or one's well being, if they read Tintin or Asterix, or if they don't. It is just another comic book....
Our Philosophy was beautiful beyond words, it practiced and preached "Be here now"! This teaching is being killed deliberately, and is lost in today's fake "you-centric" narcissism movement. What makes our childhood memories so enjoyable is that we did not "seek things to do". We enjoyed whatever fell on our plates. Fact! This privilege will be lost to our children. They are constantly being "told, cajoled, teased, and ridiculed" about what they *have* to do, what they are missing, what they *must* be doing (நாளைக்கு futureல தேவைப்படும்/தேவைப்படலாம்) by parents, friends, TV, media, newspapers, teachers, businesses, organisations, governments, "friends".....
http://wulffmorgenthaler.com/img/strip/-WM_strip_2009-04-15.gif
Being satisfied is a threat to consumer/GDP civilisation....
So, if you can only do one thing to your children, teach them to "be here now", and to just enjoy what falls on their plate more thoroughly.... Don't worry this won't rob their ambition, it will make them more focussed.
Sorry if that came like a lecture, it is not.
>> whether to run the blog in pure Tamil and get alienated
I do not think there is any alienation. I am too stressed and overworked to spend time with transliterate, else I will happily use it and talk to you. While I was guilty of quite a bit of Tanglish in the past, I have used conversationally "pure" Tamil (not in the level of மழித்தல் தகடு, கோட்டை வடி நீர், சாலை (OK, I use that sometimes) or மிதிவண்டி or sanga tamil) for a long time now (despite moving around in pure "English only" professional environments). It will feel fine after a while, and people simply follow your example. Good luck.
Also, if someone took a census of blogs, there will be more as many as a few million blogs! Some people have more than one too. Point is, all blog followings are very niche followings! You already seem to have your own niche following, so "அடி பின்னு"!
My blog's on hiatus. No one wants to hear about what I wish to say.
Here, I remembered this link too. It is pertinent to my first point:
பதிலளிநீக்குThe paradox of our age, by Dalai Lama.
http://i.imgur.com/oe1yR.jpg
thanks for the warm words Surio! :) really liked the Dalai Lama's thoughts... very true!
பதிலளிநீக்குnanba nalla oru pathivu!
பதிலளிநீக்குநன்றி! :) ரொம்ம்ம்ம்ம்ப லேட்டாக வந்திருக்கிறீர்கள் :) :) :)
நீக்குஅதை விட நான் ரெம்ம்ம்ப லேட்ட்....அருமையான பதிவு.
பதிலளிநீக்கு