கார்பன் ஸ்மார்ட் டாப் 1 - காணொளி மதிப்பாய்வு!

இன்டர்நெட்டில் உலாவ, படம் பார்க்க, பாடல் கேட்க, விளையாட, அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் வேலை பார்க்க - இந்த காரியங்களுக்கு கையடக்க Tablet PC-யே போதுமானது என்று வெகுஜனங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு சில வருடங்கள் ஆகி விட்டது! அதாவது இந்தியர்களை தவிர்த்து! இந்தியாவில் பிரச்சினை என்ன என்றால் - ஒரு Ipad-டோ, GalaxyTab-போ வாங்க வேண்டுமானால் லாப்டாப் விலை, டெஸ்க்டாப் விலை சொல்லுகிறார்கள்! அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல! ;)

இவற்றை விட்டால் தரத்திலும், விலையிலும் மலிவான No brand tablet-கள்தான் கதி என்ற பரிதாப நிலை! சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல்! இவைகளின் தரம் பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும், காலரை பிடித்து கேள்வி கேட்க அவர்களின் சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுக்க இருப்பதால் 'கொஞ்சம்' பயப்படாமல் வாங்கலாம்! அதுவும் அவர்களின் புதிய டாப்ளெட்கள் Android 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்துடன், ஏழாயிரத்து சொச்ச விலையில் வருவது பலரின் நாக்கை சப்புக்கொட்ட செய்வதென்னமோ உண்மைதான் - என் அம்மாவிற்காக ஒரு டாப்ளெட் வாங்க தீவிரமாக தேடிக்கொண்டிருந்தபடியால், எனக்கும் அப்படிதான் இருந்தது!

முதலில் வெளிவந்தது Micromax-இன் Funbook, ஆனால் அதன் ரொம்பவே சுமாரான வடிவமைப்பு (வெளித்தோற்றம்) என்னை கவரவில்லை! BSNL மற்றும் Aakash-இன்  டாப்ளெட்களோ இன்னமும் Ginger Bread மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, தடாலடியாக Karbonn நிறுவனம் சென்ற மாதம் ஒரு டாப்ளெட்டைஅறிமுகப்படுத்தியுள்ளது - Karbonn Smart Tab 1 (ST1)! அதை பற்றி இணையத்தில் தேடியதில் முக்கிய குறைகளாக தெரிந்தது, Skype Video calling இல்லை மற்றும் Google Play ஸ்டோரில் குறைவான Game சப்போர்ட் என்பனவையே! எனது அம்மாவிற்கு இவ்விரண்டு வசதிகளும் அதிமுக்கியமில்லை என்பதால் யோசிக்காமல் வாங்கி விட்டேன்! இந்த டாப்ளெட் பற்றிய எனது வீடியோ Review உங்கள் பார்வைக்கு! முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் சுமாராகவே இருக்கும், பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்களேன்!


மேற்கண்ட ப்ளேடியோ (blade+video=bladeo!) எப்படி எடுத்தேன் என்பது பற்றிய ஒரு சிறிய மொக்கை வீடியோ இதோ (ட்ரைலராம்!)


Karbonn Smart Tab 1 - Specifications:
Screen Size
17.8 cm Capacitive 5 Point Multi Touch Screen
Processor
1.2 GHz Processor
OS
Android, v4.0.3, Ice Cream Sandwich
Camera
2 Mega Pixel Front Camera
Memory
Expandable Memory upto 32 GB
Wi-Fi
Wi-Fi 802.11 b/g/n
HDMI support
Yes
3G
3G Support through USB Dongle
Battery
3700 mAh Battery, 25 Hours of Music Playback Time
Video
Full HD Video Playback upto 10 hrs
User Interface
3D G-Sensor for Gaming Experience
USB Support
Yes
Internal Memory
Around 4GB (or may be less!)
Screen resolution
800*480
Screen rotation
Yes, with G-Sensor
Audio
Built-in Mike & Loud Speaker, MP3/WAV playback (other formats need 3rd party SW)
With inputs from:

இம்மாதம் IT Returns file செய்யப்போகும் ஒரு அப்பாவியின் கேள்வி:
தமிழில் தலைப்பு வைத்தால், எனது வருமானத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா?

கருத்துகள்

  1. ///////இம்மாதம் IT Returns file செய்யப்போகும் ஒரு அப்பாவியின் கேள்வி:
    தமிழில் தலைப்பு வைத்தால், எனது வருமானத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா?/////////

    கலைஞரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இப்படி கேள்வி கேட்டா என்ன நியாயம்.? :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழிலே தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தலைப்பு வைத்தாலும் வரிவிலக்கு கிடைக்காது.

      நீக்கு
    2. (என்னைப் போன்ற) சாலரி (cattle) கிளாஸ் அபாக்கியசாலிகளை தவிர்த்து வரிவிலக்கு இந்தியா முழுதும் அமலில் இருக்கத்தான் செய்கிறது! வருமானத்தை ஒழுங்காக காட்டினால்தானே வரி?!! :)

      நீக்கு
  2. @வரலாற்று சுவடுகள்:
    ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நானிருப்பது கர்நாடகாவிலே! ;)

    பதிலளிநீக்கு
  3. கார்த்திக், சரியான நேரத்தில் பதிவுபோட்டிங்க. என் மனைவிக்கு ஒரு tablet வாங்க முடிவு பண்ணிருந்தேன். ஆனால் எந்த மாடல் வாங்கறதுன்னு தெரியாம கொழப்பமா இருந்துச்சு (என் பட்ஜெட் 10000 தான்). உங்க பதிவு புண்ணியத்தால தெளிவாகிட்டேன். நன்றி.

    naaptol online shop ல கிடைக்குது விலை 7490 /- (free shipping) போட்டுயிருக்கு. நீங்க எப்படி, எங்க வாங்கினிங்கன்னு சொன்னா உதவியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. @P.Karthikeyan:
    Naaptol வேண்டாம்! http://www.buytheprice.com/-இல் தள்ளுபடியில் கிடைக்கிறது - நம்பகமான தளமும் கூட (என் அனுபவத்தில்), நான் அங்குதான் வாங்கினேன்! (Rs.6999/-)

    http://www.buytheprice.com/shop-online-deal/karbonn-smarttab-a1__11980

    உங்களிடம் ICICI கார்டு இருக்கும் பட்சத்தில் ICICI என்ற coupon உபயோகித்தால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  5. buytheprice ல பார்த்தேன், 6990 /- தான் இருக்கு. என்கிட்டே ICICI debit card மற்றும் HDFC credit card இருக்கு. இன்னைக்கே order போடலாம்னு இருக்கேன். நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  6. ஆர்டர் பண்ணுறதுக்கு முன்னாடி இதோட குறைகளை முழுசா தெரிஞ்சுக்கிட்டீங்களா? என் அம்மாவுக்கு அதிக வசதிகள் தேவையில்லாததால் அதிகம் யோசிக்காமல் வாங்கினேன்! :)

    - No SIM Card / Built-In 3G
    - Limited 3G dongle support
    - No Skype
    - Limited Play Store support

    பதிலளிநீக்கு
  7. செக் பண்ணிட்டேன் கார்த்திக், 1.2 GHz Processor இருக்கு, 3G , wif-fi இருக்கு அது போதும். என்ன, skype இருந்தா நல்லா இருக்கும். அதுசரி இந்த விலைல இவ்ளோதான எதிர்பாக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  8. //இந்த விலைல இவ்ளோதான எதிர்பாக்கமுடியும்//
    ஹா ஹா ஹா, சரிதான் - ஆனா நெட்டுல பாருங்க, பயபுள்ளைக புலம்பி தள்ளுறாங்க - அது இல்லே, இது இல்லேன்னு! :)

    பதிலளிநீக்கு
  9. இந்த review பண்றவங்க சில பேர் பெரிய அறிவுஜீவியா காமிச்சிபாங்க - எது என்ன purpose க்காக இருக்கு, எப்படி use பண்றதுன்னுகூட தெரியாம அடிச்சு விடுவாங்க.
    HCL ME Tablet X1 வாங்கத்தான் முடிவு பண்ணியிருந்தேன் (விலை 11000 ன்னு நினைக்கிறேன் - friend சொன்னான்). அவ்ளோ செலவு பண்ணனுமான்னு தயக்கமா இருந்துச்சு. மனைவிக்குத்தானே ..:) (சும்மா ஜோக் போட்டுகொடுதிடாதிங்க)

    பதிலளிநீக்கு
  10. லேப்டாப் வாங்கிய இந்த 4 வருடத்தில் 10 முறை கூட உபயோகித்தது இல்லை . நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. Good Review in Tamil.Expect more such tech review for products.Thanks for sharing.
    So if buy karbonn smart tab we have to live with default apps eventhough it has access to google play.
    I feel it is a big limitation.
    So what tablet i can buy for Rs.7000?

    பதிலளிநீக்கு
  12. tablet பத்தி எழுதுனதால இனி உங்களை டாக்டர் என்று சொல்லலாமா?

    :) :) :)

    Review வீடியோ நல்லா இருந்தது. ஆனால் இடையில் வரும் comments தான் பிடிக்கவில்லை. அதை subtitle போல கீழே வந்தால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. @ Abdul:
    மருந்துக் கடைக்காரர்னும் சொல்லலாம்! ;)

    //subtitle போல கீழே வந்தால் நல்லா இருக்கும்//
    பல பேர் இதையே சொன்னாங்க! அடுத்த தடவை சரி பண்ணிரலாம்! :)

    பதிலளிநீக்கு
  14. @Ram:
    //we have to live with default apps eventhough it has access to google play//
    not really, but limited game support - but you should be able to install apps

    @7000 range the only other option is Micromax funbook...

    but being at the bottom of the price spectrum both have their own disadvantages :)

    Check out iGyaan's comparision of these 2 tabs on youtube:
    http://www.youtube.com/watch?v=ryYjhrs3R48&feature=my_liked_videos&list=LLyLNDI5aDlhnJ20cljDUT7A

    பதிலளிநீக்கு
  15. Thanks Karthik for comments.Have you tried following apps in karbonn smart tab?
    1.Kindle
    2.Aldiko
    3.dropbox
    4.box
    5.Norton utilities
    6.evernote
    7.colornote
    8.springpad
    9.google translate
    If above apps are installable then it will be good buy for me for reading and noting down and organising.
    Have you tried above ?Please reply.

    பதிலளிநீக்கு
  16. Tablet basically serve the purpose of some casual surfing, reading ebooks, watching videos and movies, playing games and few other things for which a low budget device like Funbook serves the purpose well with decent price.

    பதிலளிநீக்கு
  17. Hai!

    Shall we use this Tablet for share trading?

    Some people are complaining about frequent hanging, in these low cost tabs!

    Expecting your clarifications ,Please!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Shall we use this Tablet for share trading?//
      if there is a app for that may be you can but I am not sure if that is compatible with this tab

      this one has limited play store support!

      நீக்கு
  18. mercury neo2 tab-14,999,with sim calling function,3g,wifiஎன முழு செயல்ப்பாட்டுடன் கிடைக்குது எனப்போட்டு இருக்காங்க இன்னும் சில நாள் போனால் விலை குறையலாம்,

    எனக்கு ஒரு சந்தேகம்,டேப் இல் அன்ட்ராய்ட்4 அ ஜிஞ்சர் பிரட்டில், யாஹூ சாட்டில் நமது நண்பர்கள் பட்டியல் உள்ளவர்களுடன் தான் சாட் செய்ய முடிகிறது, அதில் உள்ள சென்னை-1,2 போன்ற சாட் ரூமிற்குள் செல்ல முடியவில்லை, ஏன்?

    நான் சாம்சங் கேலக்சி ஒய்-டுயோஸ் 3ஜி. ஜிஞ்ஜர் பிரட் உள்ள கைப்பேசியில் முயற்சி செய்தேன்.

    அடுத்து ஒரு டாப் வாங்கலாம் விலை குறையுமா என காதிருக்கிறேன், ஹி..ஹி எல்லா வசதியோட பத்து ஆயிரத்துக்கு வந்துடும்னு ஒரு நம்பிக்கை :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே நண்பரே! நான் யாஹூ சாட் ரூம்கள் பக்கம் சென்று ஆறு , ஏழு வருடங்கள் ஆகிறது!!! நிறைய spammer-கள் இருப்பதே காரணம்! 15000 கொடுத்து mercury tablet வாங்குவதை விட Samsung tablet மேல் (20000)!
      http://www.buytheprice.com/shop-online-deal/samsung-tab-2-310__12357

      ஆனால், நீங்கள் சொன்னது போல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்கலாம்! - குறைந்த விலையில் நிறைய features உள்ள tablet-கள் கிடைக்கும்! இன்றைய விலைவாசியில், விலை குறைவது electronic சாதனங்கள் மட்டும்தான்! :)

      நீக்கு
  19. நண்பா நானும்BSNL PANTAL டேப்லெட் வாங்கினேன் இதில் எண்ண பிரச்சனை எண்ண என்பதை எவரேனும்
    > விளக்கம் தரவும்.
    > 1.HUAWEI E1731 UNLOCK மேடம் வாங்கி நாண்கு நாள் வேலை செய்தது இப்பேது
    > சிக்கனல் வரவே இல்லை . மேடம் விளக்குகள் விட்டு விட்டு எரிகிறது .டேப்லெட் APN தெரிகிறது
    > இப்பேது எண் மேடத்தில் பிரச்சனையா?டேப்லெட் பிரச்சனையா?
    > 2.wi fi இணைப்பு எப்படி வாங்குவது . இதற்கு என்ன கருவிகள் வாங்க வேண்டும்
    > யாரிடம் பணம் கட்டவேண்டும்
    எண்ணுடைய டேப்லெட் WI FI இணைப்பு வேண்டும் எண் அருகில் 3கிலோமீட்டர் தூரம் இருப்பதாக செல்லுகிறார்கள் இதற்க்கு எண்ண செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia