சிஸ்அட்மின் - 2 - டெஸ்க்டாப் டெர்ரரிஸம்!

பத்தாயிரத்துக்கு ஒரு அசெம்பிள்ட் PC வாங்கி விட்டால், உலகத்தில் இருக்கும் அனைத்து மென்பொருள்களுக்கும் லைசென்ஸ் வாங்கி விட்டது போன்ற ஒரு நினைப்பு சிலருக்கு இருக்கும்! 2GB RAM வைத்துக்கொண்டு, 'மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2012, போட்டோ ஷாப், ஆரகிள் டேட்டாபேஸ் 12c போட்டுருப்பா - அப்படியே புது கேம்ஸ், சாங்க்ஸ், மூவிஸ் எல்லாத்தையும் காப்பி பண்ணிரு' என்று மனசாட்சியே இல்லாமல் சொல்வார்கள்! டிவி வாங்கினால் சாட்டிலைட் சானல்களை இலவசமாக எதிர்பாரக்காத இந்த நபர்களுக்கு, கம்பியூட்டர் வாங்கும் போது மட்டும், மௌஸ் பேடில் இருந்து, ஐ-பேட் வரைக்கும் எல்லாமே ஃப்ரீயாக வேண்டும்!
குறைந்த பட்சம் விண்டோஸ் கூட உபயோகிக்க தெரியாமல் PC வாங்கிவிட்டு, வாழ்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் அதற்கு சிஸ்டம்தான் காரணம் என நினைத்துக்கொண்டு அட்மின்களின் எஞ்சியிருக்கும் உயிரை எடுப்பார்கள் இந்த 'கஷ்ட'மர்கள்! சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் இவை இரண்டும் வேறு வேறு என்ற அடிப்படை அவேர்னெஸ் கூட இல்லாத அண்டர்(அ)வேர் அங்கிள்களாக இன்னமும் பல பேர் இருக்கிறார்கள்!

இன்னொன்று அறிவு ஜீவிகள் ரகம்! Dell லாப்டாப் வாங்கி விட்டு, ப்ரீ-இன்ஸ்டால்ட் ஆக வரும் விண்டோஸ் செவனுக்கு பதிலாக 'உபுண்டு லினக்ஸ்' அல்லது 'டுபுக்கு லினக்ஸ்' இப்படி எதையாவது இன்ஸ்டால் செய்து, 'நெட்வொர்க் கார்டு வேலை செய்யலே - டிரைவர் CD குடு' என்று உயிரை எடுப்பார்கள்! இந்த அறிவுஜீவிகளில் சில பேர் சாடிஸ்டாக வேறு இருப்பார்கள்! வேண்டுமென்றே எதையாவது குளறுபடி செய்து வைத்து விட்டு, நாம் அதை சரிசெய்ய முடியாமல் தவிப்பதை ரசிப்பார்கள்! பிறகு திடீரென ஏதோ ஒரு ஐடியா உதித்ததை போல, நம்மை தள்ளச் சொல்லி - குளறை சரிசெய்து நம்மை ஏளனப் பார்வை பார்ப்பார்கள்!

கஸ்டமர்கள்தான் இப்படி என்றால், கம்பியூடர்களும் தங்கள் பங்குக்கு சொதப்பும்! அவ்வளவு நேரம் ஒழுங்காக வேலை செய்த சிஸ்டம் நம் சிஸ்அட்மின் கைப்பட்டதும், மக்கர் பண்ணும்! 'நீங்க வர்ற வரைக்கு சின்ன பிரச்சினையாத்தான் இருந்துச்சு' என்ற குத்திக்காட்டலை கண்டு கொள்ளாது 'செல்லமாக' ஷூவால் ஒரு உதை கொடுத்தால் (கஸ்டமரை அல்ல!) சுதாரித்துக்கொள்ளும்! பிரிவென்டிவ் மெய்ன்ட்டனன்ஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி, புழுதி பறக்க ப்ளோயரால் புயல் ஒத்தடம் கொடுத்து விட்டு எல்லாவற்றையும் திருப்பி மாட்டினால் ஏதாவது ஒரு கேபிளின் இணைப்பு லூசாகி  நம் அட்மினின் கண்ணில் தூசியை பூசிவிடும்!

பத்து வருட பழைய பென்டியம் ஃபோர் சிஸ்டத்தின் - 40GB ஹார்ட்டிஸ்க், அட்மின் கை பட்டதும் விமோசனமடைந்து ஒருமுறை தளர்வாக சுழன்று மூச்சை நிறுத்தும்! அதிக பட்சம் MP3 ஃபைல்ஸ்தான் அதில் இருந்திருக்கும்! அதற்கே,  'ஐயோ, என் டேட்டா போச்சே' என அலறும் கஸ்டமரை சமாளிக்க - 'ஆபிஸ் கொண்டு போய் ரெகவர் பண்ணிரலாம், சார்' என ஏதாவது சமாளிஃபிகேஷன் செய்து விட்டு நடையை கட்டிவிடுவார் நம் சிஸ்அட்மின்!

டாக்டர் & சிஸ்அட்மின் - இவ்விரண்டு வேலைகளில் இருப்பவர்களுக்கு அதிக உறவினர்களோ, நண்பர்களோ இருந்தால் தொலைந்தார்கள்! ப்ரீ கன்சல்டேஷன், ப்ரீ சர்விஸ் என அளவில்லாத அன்புதொல்லை இருக்கும். தெருவில் சுதந்திரமாக நடமாட கூட முடியாது. 'புதுசா PC வாங்கணும் கான்ஃபிகரேஷன் சொல்லுங்க' என பக்குவமாக ஆரம்பித்து, 'நீங்கதான் ஜீ செஞ்சு தரணும், பதினஞ்சாயிரம் பட்ஜெட் - லேட்டஸ்ட் கான்ஃபிகரேஷனா போடுங்க' என 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, 'என்னாது விண்டோஸ் லைசன்ஸ் இதுல வராதா?' என்று பதறி, 'அப்படியே எல்லா சாப்ட்வேரையும் போட்டுருங்க ஜீ' என குழைந்து,  'ஹய்யோ! செமையா செட் பண்ணியிருக்கீங்க தாங்க்ஸ் ஜீ!' என புகழ்வது போல் புகழ்ந்து, 'நான் ஃபீஸ் தந்தா வேதனை படுவீங்க வேண்டாம்' என பன்ச் வைத்து முடிப்பார்கள்! இரண்டு நாள் கழித்து போன் வரும்: 'ஜீ, சிஸ்டம் பூட் ஆக மாட்டேங்குது - கொஞ்சம் என்னன்னு பாருங்க, ரீ-இன்ஸ்டால் பண்ணத்தான் சரியா வரும்னு நெனைக்கிறேன்!' என்று அட்மினின் தலையை ஃபார்மேட் பண்ணுவார்கள்! அப்புறம் என்ன வாழ்நாள் பூராவும் ப்ரீ சர்விஸ்தான்!

இப்படித்தான் பெரும்பாலான சிஸ்டம் அட்மின்களின் ஆரம்ப கால வாழ்க்கை, ஒருசில வருடங்கள் படு குஜாலாக நகரும்! :)


cd /sysadmin_story/part-[ 1 | 2 | 3 ]/; echo 'you are reading Part 2 now!'

கருத்துகள்

 1. // பத்தாயிரத்துக்கு ஒரு அசெம்பிள்ட் PC வாங்கி விட்டால், உலகத்தில் இருக்கும் அனைத்து மென்பொருள்களுக்கும் லைசென்ஸ் வாங்கி விட்டது போன்ற ஒரு நினைப்பு சிலருக்கு இருக்கும்! 2GB RAM வைத்துக்கொண்டு, 'மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2012, போட்டோ ஷாப், ஆரகிள் டேட்டாபேஸ் 12c போட்டுருப்பா - அப்படியே புது கேம்ஸ், சாங்க்ஸ், மூவிஸ் எல்லாத்தையும் காப்பி பண்ணிரு' என்று மனசாட்சியே இல்லாமல் சொல்வார்கள //

  ஹி ஹி ஹி எப்புடிங்க கார்த்திக் உங்களால மட்டும் இப்புடியெல்லாம் முடியுது ( யோசிக்க ) ;-)
  .

  பதிலளிநீக்கு
 2. // இப்படித்தான் பெரும்பாலான சிஸ்டம் அட்மின்களின் ஆரம்ப கால வாழ்க்கை, ஒருசில வருடங்கள் படு குஜாலாக நகரும்! :) //

  நல்லா அனுபவிச்சு ;-) (எழுதி இருக்கீங்கன்னு சொல்லவந்தேன் ) ;-)
  .

  பதிலளிநீக்கு
 3. ////பிறகு திடீரென ஏதோ ஒரு ஐடியா உதித்ததை போல, நம்மை தள்ளச் சொல்லி - குளறை சரிசெய்து நம்மை ஏளனப் பார்வை பார்ப்பார்கள்!/////
  ஐயா ஜாலி நல்லா மொக்க வாங்கி இருப்ப போல...

  ////அதிக பட்சம் MP3 ஃபைல்ஸ்தான் அதில் இருந்திருக்கும்! அதற்கே, 'ஐயோ, என் டேட்டா போச்சே' என அலறும் கஸ்டமரை சமாளிக்க - 'ஆபிஸ் கொண்டு போய் ரெகவர் பண்ணிரலாம், சார்' என ஏதாவது சமாளிஃபிகேஷன் செய்து விட்டு நடையை கட்டிவிடுவார் நம் சிஸ்அட்மின்!
  //////
  யோ mp3ன்னா அவ்வளவு சாதாரணமா

  ஜி நம்ம சிஸ்டம் அடிகடி பஞ்ச் டயலாக் பேசுது கொஞ்சம் என்னனு பாருங்க ஜி....பல இடங்களில் ரொம்ப கஷ்ட பட்டு இருப்ப போல ஜி....

  நீ எல்லாம் நல்லா வருவ வருவ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஜி நம்ம சிஸ்டம் அடிகடி பஞ்ச் டயலாக் பேசுது கொஞ்சம் என்னனு பாருங்க ஜி//
   சிம்பிள், உங்கள் வீட்டு வாட்டர் டேங்கில் ஒரு தடவை முக்கி எடுத்தால் எல்லாம் சரியாகி விடும்! நீங்கள் இருப்பது சென்னை என்பதால், டேங்க் காலியாக இருக்க வாய்ப்புள்ளது! எனவே, மெரினா கரையோரத்தில் அலை அடிக்கும் இடமாய் பார்த்து பத்து நிமிடம் வையுங்கள்! ;) அப்புறம் பன்ச்சை மறந்து செந்தமிழில் பேசும்!

   நீக்கு
  2. எனக்கு எப்படி மெரினாவில் போடுறதுன்னு தெரியல உன்னோட சிஸ்டம் ஒரு தடவ போட்டு காட்டினால் நல்லா இருக்கும்...

   நீக்கு
  3. //எப்படி மெரினாவில் போடுறதுன்னு தெரியல//
   தூக்கிப் போட வேண்டும்! ;)

   நீக்கு
  4. ஒரு தடவ DEMO காட்டுயா...

   நீக்கு
 4. அப்பப்பா

  எத்தனை புலம்பல்...............

  சிஸ்டம் அட்மின்-ன்னு காலர தூக்கிவிட்டுக்கிட்டா மட்டும் போதுமா....
  அனுதாபங்கள பரிசா கொடுக்கரத தவர ஒண்ணும் தோணல சகோ.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்படித்தான் பெரும்பாலான சிஸ்டம் அட்மின்களின் ஆரம்ப கால வாழ்க்கை, ஒருசில வருடங்கள் படு குஜாலாக நகரும்! :)//

   நிஜத்தில் இப்போது நினைத்துப் பார்த்தால் நிஜமாகவே குஜாலாகத்தான் இருக்கிறது! :) அனுதாபம் போன்ற பெரிய வார்த்தைகளால் கொல்லாதீர்கள் ;) இந்த ஒரு காரணத்திற்காகவே கொஞ்சம் லைட் மூடில் எழுத முயற்ச்சிக்கிறேன்! :D

   நீக்கு
 5. பிளேடு திரைமணம் open ஆகுதா எனக்கு 403 forbidden errorகாட்டுது...

  பதிலளிநீக்கு
 6. ஐயோ, என் டேட்டா போச்சே' என அலறும் கஸ்டமரை சமாளிக்க - 'ஆபிஸ் கொண்டு போய் ரெகவர் பண்ணிரலாம், சார்' என ஏதாவது சமாளிஃபிகேஷன் செய்து விட்டு நடையை கட்டிவிடுவார் நம் சிஸ்அட்மின்!

  it's happend in my office

  Ram.R
  System Adm

  பதிலளிநீக்கு
 7. அதிலும் சிலர் டிவி மெக்கானிக் கிட்ட ஐடியா கேட்டுட்டு சிஸ்டம் அட்மின் கிட்ட வந்து வம்பு பண்ணுவாய்ங்க.

  பதிலளிநீக்கு
 8. நேத்து கண்டனம் தெரிவிக்க டைப் பண்ணுனேன். நேரம் ஆயிடுச்சுன்னு போய்ட்டேன். அதுக்குள்ளே பாராட்டு கமென்ட்ஸா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதற்காக கண்டனம் நண்பரே? :)

   உங்கள் புது போட்டோ சூப்பர், ரொம்ப கோபக்காரரோ?! :)

   நீக்கு
  2. ஹா...ஹா.. நான் shy டைப்... :D

   நீக்கு
  3. பார்த்தா அப்படி தெரியலியே! ;)

   நீக்கு
  4. கொளுத்துற வெயிலில் நிற்கும்போது எப்படிங்க சிரிப்பு வரும்? :D

   நீக்கு
 9. முதல் இரண்டு பத்திகளுக்கு என் மென்மையான கண்டனங்கள்.

  //சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் இவை இரண்டும் வேறு வேறு என்ற அடிப்படை அவேர்னெஸ் கூட இல்லாத அண்டர்(அ)வேர் அங்கிள்களாக இன்னமும் பல பேர் இருக்கிறார்கள்! //

  நீங்கள், நான் எல்லாம் பள்ளியிலிருந்து கணினி கற்று வருகிறோம். ஆனால் கணினி பற்றி தெரியாத பெரியவர்கள் புதிதாக கணினி வாங்கும்போது அது பற்றி புரிந்துக் கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

  நீங்கள் தான் அவர்களுக்கு பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும்.

  //ப்ரீ-இன்ஸ்டால்ட் ஆக வரும் விண்டோஸ் செவனுக்கு பதிலாக 'உபுண்டு லினக்ஸ்' அல்லது 'டுபுக்கு லினக்ஸ்' இப்படி எதையாவது இன்ஸ்டால் செய்து//

  நீங்கள் சொல்லுங்கள், எது பாதுகாப்பானது? விண்டோஸா? லினக்ஸா?

  டிஸ்கி: கம்மெண்ட் கொஞ்சம் சீரியஸா இருந்தா அதற்கு கீழே ஒரு பத்து, பதினைந்து ஸ்மைலிஸ் போட்டுக் கொள்ளவும். :) :) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனால் கணினி பற்றி தெரியாத பெரியவர்கள் புதிதாக கணினி வாங்கும்போது - நீங்கள் தான் அவர்களுக்கு பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும்.//
   நல்லா இருக்கே கதை! :) சிஸ்அட்மின்ஸ் என்ன ஸ்கூலா நடத்தறாங்க! அவங்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு டிக்கெட் அட்டென்ட் பண்ணனும்னு டார்கெட் இருக்கும் பாஸூ :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

   எனக்கு லினக்ஸ், விண்டோஸ் ரெண்டும் புடிக்கும்! ஆனா கண்ட கண்ட Linux distribution-க்கு எல்லாம் டிரைவர் CD கேட்டா மட்டும் பேஜாராயிடுவேன்! ;) :)

   நீக்கு
 10. //டாக்டர் & சிஸ்அட்மின் - இவ்விரண்டு வேலைகளில் இருப்பவர்களுக்கு அதிக உறவினர்களோ, நண்பர்களோ இருந்தால் தொலைந்தார்கள்! //

  உண்மை தான்! என் நண்பன் ஒருவன் ஹார்ட்வேர் தெரிந்தவன். அடிக்கடி அவனிடம் பலர் கணினியை ரிப்பேர் செய்வதற்கும், ஓ.எஸ் போடுவதற்கும் கொடுப்பார்கள். வேலை முடிந்தவுடன் பணம் கொடுக்க மாட்டார்கள், அவனுக்கும் நண்பர்கள், உறவினர்கள் என்பதால் கேட்க முடியாமல் தவித்தான்.

  அப்படி கொடுத்தவர்களில் நானும் ஒருவன்... :D :D :D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அப்படி கொடுத்தவர்களில் நானும் ஒருவன்... :D :D :D//
   அதனால்தான் இப்போது உங்கள் ப்ளாகில் கேள்வி கேட்பவர்களுக்கு எல்லாம் நேரம் செலவழித்து ஃப்ரீயாக பதில் சொல்லி கஷ்டப் படுகிறீர்கள்! ;) தன் வினை தன்னைச் சுடும்! ;)

   நீக்கு
 11. ungalukku anubavapatta nigazhchchiyai padhivaaga ezhudhiulleer vaazhththukkal
  surendran

  பதிலளிநீக்கு
 12. //அவ்வளவு நேரம் ஒழுங்காக வேலை செய்த சிஸ்டம் நம் சிஸ்அட்மின் கைப்பட்டதும், மக்கர் பண்ணும்! 'நீங்க வர்ற வரைக்கு சின்ன பிரச்சினையாத்தான் //
  ஆரம்ப காலத்தில் பல electronic பொருட்களை இப்படி நான் பதம் பார்த்ததுண்டு

  அப்புறம் ஒரு முக்கிய விடயம் 2000.00 ரூபாவுக்கு ஒரு நல்ல நவீன கணனி வேணும் . நல்லா வேலை செய்தால் மாசம் 10.00 ரூவா தரேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கால்குலேட்டரும் ஒரு நவீன கணினிதானே? நிச்சயமா தர்றேன்! ;)

   நீக்கு
 13. Its really amazing my friend...
  Your writing is very nice and it is very hilarious.
  I think u explained u r feeling well.

  Singaravelan A
  Architect

  பதிலளிநீக்கு
 14. LOL... நானும் நாலு ஜிபி ரேம், 256 on board VGA வச்சுட்டு அடோப் கலக்ஷன்ல இருந்து ஆட்டோடெஸ்க் கலெக்ஷன் வரைக்கும் போட்டு வச்சிருக்கேன்... போட்டோஷாப் தவிர பெருசா தெரியாது...

  விண்டோஸ் ஒரு பத்து தரம் இன்ஸ்டால் பண்ணவன்கற ஒரே காரணத்துக்காக, மோடம் வேலை செய்யல, விண்டோஸ் போட்டுத்தா, இவ்வளவு ஏன்.. மெயில் அனுப்பினா ஒழுங்கா போய் சேருதான்னு வந்து செக் பண்ணுன்னு... உறவுக்காரங்க தொல்ல தாங்க முடியல.. சமீபத்துல கூட டீச்சர் ஒருத்தங்களோட கணினில அவங்க பேரு வரலைன்னு பார்மெட் செஞ்சு விண்டோஸ் போடும்போது பிரச்சனை.. ஒருமாதிரி எஸ்ஸாகி வந்துட்டேன்... டிவிடி தேஞ்சு போயிருக்குமோன்னு டவுட்...

  பதிலளிநீக்கு
 15. உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_30.html) சென்று பார்க்கவும். நன்றி !

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia