அறுவை அப்டேட் - ப்ளேட்பீடியா - மே 2012

'ஆரம்பிச்சிட்டான்டா! மாசம் ஒண்ணாம் தேதி ஆனாலே ஏதோ MNC கம்பெனியோட Quarterly Report ரேஞ்சுல, இதை பண்ணேன் அதை பண்ணேன்னு ஆரம்பிச்சிடுறான்!' - என்ன நண்பர்களே, நான் என்ன எழுத வர்றேன்னு புரிஞ்சிருக்குமே! :) அப்படியே திரும்பி பார்க்காம எஸ்கேப் ஆயிடுங்க! அடுத்து ஒரு உருப்படியான பதிவுல சந்திப்போம்! இந்த பதிவுல அப்படி ஒண்ணும் உங்களுக்கு உபயோகமான விஷயங்கள் இல்லே! :) போன மாச ப்ளேட்பீடியா அப்டேட் பதிவுல, இனிமே அடிக்கடி பதிவு போட முடியாதுன்னு வீராவேசமா ஏதோ எழுதினேன்! ஆனா ஆசை யாரை விட்டது - நாலு பேரு நம்மளை பத்தி புகழ்ந்து பேசுறாங்களேங்கற மயக்கத்துல மே மாசத்துலையும் 13 பதிவு போட்டாச்சு! :) 'நாலு பேருக்கு பிடிக்குதுன்னா எதுவும் எழுதலாம், தப்பில்லே!' யாரு அந்த நாலு பேருன்னு டென்சன் ஆகி உருட்டுக்கட்டையோட அவங்கள மொத்தரதுக்கு கிளம்பிடாதீங்க! :)

டெக்னிகல் முன்னேற்றம் - ரொம்பதான் நக்கல்!;)
மே மாதம், ப்ளேட்பீடியாவில் மிரட்டலான பல டெக்னிகல் முன்னேற்றங்கள் நடந்தேறியுள்ளன! ;)
 • Blogger Template வடிவமைப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது! தேவையான Widget-கள் இணைக்கப்பட்டுள்ளன! மெனு பார்கள் மூலம் பதிவுகளை எளிதாக மேயலாம்!
 • 'Facebook Social Plugins' ப்ளேட்பீடியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது! Facebook மூலமாகவும் இப்போது பதிவுகளுக்கு கருத்திடலாம்!
 • 'Google Translate' வசதி இப்போது ப்ளேட்பீடியாவில் கிடைக்கிறது! நீங்கள் நன்றாக அறிந்த மற்ற மொழிகளை எளிதாக மறக்க வேண்டுமானால், ப்ளேட்பீடியா பதிவுகளை தமிழில் இருந்து அந்த மொழிக்கு translate செய்து படியுங்கள்! ;)
 • 'Google Analytics' மூலம் ப்ளேட்பீடியாவை எத்தனை பேர் படிக்கிறார்கள், ஒரு முறை படித்த பின் எத்தனை பேர் திரும்பி வருவதேயில்லை(!), எந்த எந்த நாடுகள் ப்ளேட்பீடியாவின் வளர்ச்சியை பீதியுடன் உற்று நோக்குகின்றன போன்ற ராணுவ ரகசிய தகவல்களை இப்போது ப்ளேட்பீடியாவின் ஓனர், தம் விரல் நுனியில் வைத்துள்ளார்! :) 
தர வரிசை முன்னேற்றம் - யாராவது இவனை தர தரன்னு இழுத்துட்டு போங்கப்பா! :)
ப்ளேட்பீடியா எக்கு தப்பாக வளர்ச்சியடைந்துள்ளது என்று நான் பீலா விட்டால் நம்பவா போகிறீர்கள்?! மிதமான, ஆனால் சீரான - ஜோரான வளர்ச்சி! :)
 • தலை கால் புரியாமல் ஆடும் ப்ளேட்பீடியா ஓனர், தமிழ்மணம் போன்ற உள்ளூர் தரவரிசை பட்டியல்களை மட்டும் நம்பியிராமல் Alexa போன்ற நம்பகத்தன்மை இல்லாத (நிஜமாகத்தான்!) அசலூர் பட்டியல்களிலும் ப்ளேட்பீடியாவை இணைத்துள்ளார்! Alexa-வில் தாறுமாறாக ரேங்க் ஏற வேண்டுமானால் அவர்களின் Premium listing சேவையை வாங்கினால் போதுமானது! குறைந்தபட்சம் அவர்களின் Toolbar-ஐ நிறுவ வேண்டும்! இருந்தாலும் அந்த வீணாய்ப்போன காரியங்களை நான் செய்யவில்லை! :)
 • தமிழ்மணத்தில், சென்ற மாதத்தை விட கிட்டத்தட்ட 400 ரேங்குகள் முன்னேற்றம்! இதே வேகத்தில் சென்றால் மூன்று அல்லது நான்கு மாதத்தில் முதல் இடத்தை தட்டிப் பறித்துவிடலாம் என ப்ளேட்பீடியா ஓனர் கண்களில் பேராசை மின்ன பகல் கனவு கண்டு வருகிறார்! ;)
 • 'Page Load'-களின் எண்ணிக்கை ஒருவாறாய் 15000 தாண்டி விட்டது! தோராயமாக ஒரு நாளைக்கு 250 பக்கங்கள் லோட் செய்யப்பட்டுள்ளன! உண்மையை சொல்ல வேண்டுமானால் இது ரொம்பவே குறைவுதான்! :( சிலர் எப்படித்தான் ப்ளாக் ஆரம்பித்து சில மாதங்களில் லட்சத்தை தாண்டுகிறார்களோ!!!
 • ப்ளேட்பீடியா இப்போது Indiblogger தளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது - ரேங்க் இன்னும் வரலை! தமிழ் படிக்க தெரியாத வடநாட்டுப் பதிவர்களும், பதிவுகளுக்கு ஓட்டு அளித்து ஊக்கப்படுத்துவது ஆச்சரியம்! வேறு வழியில்லாமல், ஹிந்தி, ஒரியா, பெங்காலி, குஜராத்தி போன்ற பல (புரியாத) மொழி பதிவுகளுக்கும் வாக்களித்து தேசிய ஒருமைப்பாட்டையும், தமிழ்நாட்டு மானத்தையும் ப்ளேட்பீடியா காப்பாற்றி வருகிறது! :)
 • இப்போது ப்ளேட்பீடியாவை 41 பேர் பின்தொடர்கிறார்கள் - இது அவர்களின் தைரியத்தை காட்டுகிறது! இருந்தாலும் தமிழ்நாட்டில் தைரியசாலிகள் ரொம்ப குறைவு என்பதை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது! ;)
மானம் காத்த தமிழ் மணம்! - ♫ ♪ எங்கோ மணம் பறக்கிறதே... ♪ ♫
கடந்த அப்டேட் பதிவில் சூளுரைத்தது போல், மற்ற பதிவர்களின் பின்னூட்டப் பெட்டிகளில் - அய்யா வாங்க, அம்மா வாங்க என்று லிங்க் பிச்சை எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன்! குறைவான பேர் படித்தாலும், மனதுக்கு நிறைவாக உள்ளது! :) தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ் போன்ற திரட்டிகளில் மட்டும் தவறாமல் பதிவுகளை இணைக்கிறேன்! தமிழ்மணம்தான் அதிக பேரை (பலியாடுகளை) ப்ளேட்பீடியாவிற்கு அழைத்துவருகிறது! Tamil10-இல் அதிக ஓட்டுக்கள் விழுகின்றன - அதன் காரணம் அவர்களின் கட்டாய ஓட்டளிப்பு விதிதான்! இன்ட்லி பரவாயில்லை! யுடான்ஸ் - நோ கமெண்ட்ஸ்! :) ஒரு சில facebook குரூப்களிலும் 'மிதமான' விளம்பரம் தொடர்கிறது! ;)

டாப் 10 பரிந்துரை தளங்கள்! - லயன் / முத்து காமிக்ஸின் வலைப்பூ இதில் இல்லை என்பதை கவனிக்க ;)டாப் 10 பதிவுகள்! - மொத்த பதிவே 13 - இதுல டாப் 10 லிஸ்டா? :D
 • IRCTC பதிவுதான் அட்டகாசமான ஹிட்! 1000 ஹிட்சையும் தாண்டி வண்டி இன்னும் ஓடிட்டே இருக்கு! லட்சக்கணக்கான பேர் டிக்கெட் புக் பண்ண முயற்சி பண்ணி முடியாம, நொந்து போய் இருக்காங்கன்னு தெரியுது!
 • மழுங்கிய மனிதர்கள் தொடர் கூட சூப்பர் ஹிட்! நாலு பேரை திட்டுனா, பத்து பேர் பாராட்டுவாங்கன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க - அது ரொம்ப சரின்னு தெரியுது! சாரி பாட்டி, உங்கை பேரை யூஸ் பண்ணி வாய்க்கு வந்ததை உளறிட்டு இருக்கேன்! ;)

மே மாத தேர்தல் முடிவுகள்! - இதெல்லாம் ரொம்ப ஓவர்! :)
85 பேர் வாக்களிதிருக்கிறார்கள், கடந்த தடவையை விட 10 பேர் அதிகம்! :)
இதில் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் பேருக்கு தமிழில் காமிக்ஸ் வருவதே தெரியாது என்றதில் ஆச்சரியம் ஏற்படவில்லை! இன்னொரு 30 சதவிகித பேர் இப்போது காமிக்ஸ் படிப்பதில்லையாம் - அனேகமாக பொன்னி, ராணி போன்ற காமிக்ஸ் காவியங்களை படித்து இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்! ஆக, கிட்டத்தட்ட 50% சதவிகித பேருக்கு லயன் / முத்து காமிக்ஸ் வருவதே தெரியாது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது! இது ஒரு துளி மட்டுமே! நிஜ நிலவரம் இன்னமும் கலவரமாக இருக்கலாம்! லயன் / முத்துவின் தரம் சர்வதேச அளவை ஓரளவு எட்டிப்பிடித்திருக்கும் இந்த வேளையில், இந்த அறியாமையை எடிட்டர் விஜயன் களைவாரா?

மொக்கை ப்ளேட் மேல் முனகாமல் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி! அடுத்த மாதம் இதே போன்றதொரு அறுவை அப்டேட் பதிவில் சந்திப்போம்! அதற்காக இந்த மாத பதிவுகளை படிக்கமால் விட்டு விடாதீர்கள்! ;)

வரட்டா! :)

கருத்துகள்

 1. தங்களின் இந்த அபார வளர்ச்சியை கண்டு தமிழின் முன்னணிப்பதிவர்கள் அனைவரும் பீதியடைந்துள்ளதாக காற்று வாக்கில் வந்த செய்தி அறிவித்தது., நான் அந்த லிஸ்டில் இல்லாததால் இதுபற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை இருப்பினும் மனதின் ஒரு ஓரமாக பொறாமை தீ பற்றி எரிகிறது என்பதை மறைக்க விரும்பவில்லை, வளர்ச்சியின் காரணமாக தங்களது ப்ளாக்கிற்கு கண் திருஷ்டி விழ வாய்ப்புள்ளதால் "கண் திருஷ்டி விநாயகர்" படம் வாங்கி ப்ளாக்கில் ஒரு ஓரமாக மாட்டவும்.

  apart from joke., நல்ல வளர்ச்சி நண்பா, தமிழ்மணத்தில் விரைவில் முதல் பத்து இடங்களுக்குள் தாங்கள் வந்தால் ஆச்சிரியப்படுவதிற்க்கில்லை மேலும் Alexa Global Rank வளர்ச்சியும் மிரட்டுகிறது. உளம் கனிந்த வாழ்த்துக்கள் :D

  பதிலளிநீக்கு
 2. உங்க ஐடியா சூப்பர் நண்பா, உடனே செயல் படுத்திட்டேன்! :D ;)

  Btw, உங்க ப்ளாக் பார்த்தேன், ரொம்ப நல்ல இருக்கு! :)

  பதிலளிநீக்கு
 3. /./இப்போது ப்ளேட்பீடியாவை 41 பேர் பின்தொடர்கிறார்கள் - இது அவர்களின் தைரியத்தை காட்டுகிறது! இருந்தாலும் தமிழ்நாட்டில் தைரியசாலிகள் ரொம்ப குறைவு என்பதை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது! ;)//ஹா ஹா சூப்பர் பாஸ் நகைச்சுவை வழிகிறது உங்கள் பதிவில் ,,வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அசுர வேக வளர்ச்சி தான் பாஸ். மேலே சொன்னது போல ஒரு பிள்ளையார் படம் ஒன்று போட்டுவிடுங்க.

  இந்த ரேஞ்சுல போனா அடுத்த பிரபல பதிவர் நீங்க தான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. இந்தப் (.)விவரங்களும் அதற்குள் 4 (3+1) பின்னூட்டங்களும் பீதியைக் கிளப்புகின்றன.

  எனது பாரா(ட்டுக்கள் + வாழ்த்து)க்கள்.

  பதிலளிநீக்கு
 6. @ NIZAMUDEEN: அய்யய்யோ, அந்த நாலு பேரு யாருங்கிற உண்மையை இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சிட்டீங்களே! உருட்டுக்கட்டையில் இருந்து தப்பிக்க உடனே ஓடுங்க! :) :) :)

  பதிலளிநீக்கு
 7. @PREM.S: Thanks Boss! :)

  @ஹாலிவுட்ரசிகன்: //இந்த ரேஞ்சுல போனா அடுத்த பிரபல பதிவர் நீங்க தான்//

  உசுப்பேத்தி உசுப்பேத்தி குசும்பு பண்ணாதீங்க பாஸ் :)

  பதிலளிநீக்கு
 8. கம்பெனி ரகசியத்தை இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்குறீங்களே பாஸ்...
  உங்க கனவு கோட்டையான 1,00,000 விரைவில் தொட வாழ்த்துக்கள்..
  பல பேர் பதிவு மானத்தை காப்பாத்துறது தமிழ்மணம் தான்....உங்களை வாழ வைப்பதில் ஆச்சிரியம் இல்லை.. udanz "No Hope"
  அப்புறம் அது என்னங்க பிள்ளையார் சுழி போட்டு பதிவை தொடங்குறேங்க..??

  இவன்
  41 தைரியசாலியில் ஒருவன்..

  பதிலளிநீக்கு
 9. /////உங்க ஐடியா சூப்பர் நண்பா, உடனே செயல் படுத்திட்டேன்! :D ;)///

  பாருய்யா இந்த உலகத்தில நம்ம கருத்தை கேட்டு அதை பாலோ பண்ணுறதுக்கு கூட ஆள் இருக்கு .. :D

  ///Btw, உங்க ப்ளாக் பார்த்தேன், ரொம்ப நல்ல இருக்கு! :)/////

  வந்தாச்சா.., இனி டரியல் ஆரம்பம்தான்னு சொல்லுங்க .. :D

  apart from joke எனது தளத்திற்கு வருகை புரிந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா .. :)

  பதிலளிநீக்கு
 10. ஹா..ஹ..ஹா... நல்ல நகைச்சுவையாக இருந்தது நண்பா!

  //இனிமே அடிக்கடி பதிவு போட முடியாதுன்னு வீராவேசமா ஏதோ எழுதினேன்! ஆனா ஆசை யாரை விட்டது - //

  Blogging என்பது ஒரு போதை. நாம் விட நினைத்தாலும், அது நம்மை விடாது.

  உங்கள் ப்ளாக் வளர்ச்சிக்கு காரணம் உங்கள் நகைச்சுவை தான். மேலும் வளர என் வாழ்த்துக்கள் நண்பா!

  //இன்னொரு 30 சதவிகித பேர் இப்போது காமிக்ஸ் படிப்பதில்லையாம் - அனேகமாக பொன்னி, ராணி போன்ற காமிக்ஸ் காவியங்களை படித்து இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்! //

  அவர்களில் நானும் ஒருவன் நண்பா! சின்ன வயதில் (இப்ப ஒன்னும் வயசாகல) ஓசியில் காமிக்ஸ் புத்தகம் படித்து, பிறகு எப்போதாவது பணம் கொடுத்து படித்து வந்தேன். ஒரு முறை படிப்பதற்காக ஏன் செலவு செய்ய வேண்டும்? என்ற எண்ணம தான் காரணம். :) :) :)

  பதிலளிநீக்கு
 11. நாங்கள் போடும் பின்னோட்டம் வருவதற்குள் அடுத்த பதிவு போடும் அளவிற்கு பிளேடு ஓனர் படு வேகம் என்ற ஒரு புள்ளி விபரத்தையும் சேர்த்து கொள்ளவும் ( இரண்டு நாள் இந்தபக்கம் வரவில்லை என்றால் இரண்டு பதிவு ஓடி விடுகிறது )

  பதிலளிநீக்கு
 12. நன்றி பஷித்!

  ஸ்டாலின் சார்! சாரி நீங்க கொஞ்சம் லேட்டு! இன்னொரு பதிவும் போட்டாச்சு! :D

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia