சிஸ்அட்மின் - 1 - சொல்லத் தவிர்த்த கதை!

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறை அளிக்கும் பலதரப்பட்ட வேலை வாய்ப்புக்களில் பாவப்பட்ட வேலை ஒன்று இருக்கிறது! அந்த பரிதாபகரமான வேலையை செய்யும் அப்பாவி ஜீவன்களை "சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்" என்று நாகரீகமாக அழைப்பார்கள், சுருக்கமாக "சிஸ்அட்மின்"! இது ஒரு மேலோட்டமான வகைப்பாடு - அவர்கள் செய்யும் வேலை, திறமை, அனுபவம் இவற்றை பொறுத்து 'ஏதோ ஒரு' அட்மினிஸ்ட்ரேட்டர் என்று அழைக்கப்படுவார்கள் - அந்த 'ஏதோ ஒன்றுக்குள்' - டெஸ்க்டாப், விண்டோஸ், யுனிக்ஸ், டேட்டாபேஸ், டேட்டா சென்டர், லேப், நெட்வொர்க், செக்யூரிட்டி, வெப் - இப்படி எதையாவது ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்! சில நிறுவனங்கள் இந்த ஜீவன்களை சப்போர்ட் என்ஜினியர் என்றும் அழைப்பதுண்டு! பகலிரவு பாராமல், எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாமல் வேலை செய்யும் - IT துறையின் உண்மையான ஆல்-இன்-ஆல் அழகுராஜாக்களான இவர்களுக்கு, இந்த பதிவு அர்ப்பணம்!

டெஸ்க்டாப் அட்மினிஸ்ட்ரேட்டர்:
ஐம்பது சதவிகித சிஸ்அட்மின்கள் தங்கள் வாழ்கையை இப்படித்தான் துவக்குகிறார்கள்! பகுதி நேரத்தில் ஏதாவது ஒரு OS அல்லது நெட்வொர்க்கிங் சர்டிஃபிகேஷனை முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சி அடைவார்கள்! பதினைந்து வருடங்களுக்கு முன் ஓரளவுக்கு கௌரவமாக இருந்த இந்த வேலை, இப்போது மதிப்பிழந்து நிற்கிறது! பெரிய நிறுவனங்களில், டெஸ்க்டாப், லாப்டாப் மற்றும் ப்ரிண்டர்களை மேய்க்க ஒரு தனி டீமே இருக்கும்! அதே போல, கம்ப்யூட்டர்களை விற்கும் நிறுவனங்கள், தாம் விற்ற சாதனங்களை பராமரிக்க ஒரு டீமை வைத்திருக்கும்! தமது நிறுவனம் சப்ளை செய்த இடங்களுக்கு எல்லாம் அலைந்து திரிந்து, திட்டு வாங்கி வருவது இந்த டீமின் முக்கிய வேலை! அவ்வளவு ஏன், ரேடியோ ரிப்பேர் ரேஞ்சுக்கு பெட்டிக்கடையில் பழைய கம்ப்யூட்டரை  பிரித்து மேய்ப்பவரும் ஒரு டெஸ்க்டாப் அட்மின்தான்!

கஸ்டமர் சப்போர்ட்:
கணினி விற்பனை நிறுவனங்களில் சேல்ஸ் டீமுக்கு எப்போதும் ராஜ மரியாதை உண்டு - போனஸ், இன்சென்டிவ் என அமர்க்களப்படுத்துவார்கள்! பெரிதாக ஆர்டர் பிடித்து விட்டு பிஃட்சா சாப்பிட, பெப்சி குடித்தவாறே போய் விடுவார்கள்! அதற்கப்புறம் என்ன பிரச்சினை வந்தாலும் ஆஃப்டர் சேல்ஸ் சப்போர்ட் டீம்தான் பொறுப்பு! பெரிய நிறுவனத்தை விடுங்கள், 'அலமேலு இன்ஃபோடெக்' போன்ற ஏதாவது ஒரு பெயரில் பேனர் வைத்துக்கொண்டு அசெம்பிள்ட் PC விற்கும் பெட்டிக்கடை கம்பெனிகளிலோ ப்ரீ-சேல்ஸ், சேல்ஸ், ஆஃப்டர் சேல்ஸ் என எல்லாவற்றுக்கும் இரண்டு மூன்று பேர்தான் இருப்பார்கள்!

இந்த கஸ்டமர் சப்போர்ட் என்ஜினியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தலையை சொரிய வைக்கும் ரகம்! 'கஷ்ட'மர்கள், வித விதமாக கடுப்பேற்றுவார்கள், சாம்பிளுக்கு சில:
- 'சிஸ்டம் பூட் ஆகுது, ஆனா ஸ்க்ரீன்ல ஒண்ணும் தெரியல' - ண்ணா, மொதல்ல மானிடர் சுவிட்சை போடணும்ணா...
- 'உங்க கம்பெனி லாப்டாப் ரொம்ப ஸ்லோ, IRCTC-ல டிக்கெட்டே கிடைக்கறது இல்ல' - அது எந்த கம்பெனி லாப்டாப்லேயும் கிடைக்காது!
- 'ஷட் டௌனா?! அப்படின்னா? நான் யூஸ் பண்ணி முடிச்சதும், மெயின் சுவிட்ச்சை டொப்புன்னு ஆஃப் பண்ணிருவேன்!' - அடப்பாவி!
- 'இப்படித்தான் சார், எவ்ளோ நேரம் ட்ரை பண்ணாலும் இன்டர்நெட் கனெக்ட் ஆவ மாட்டேங்குது' - பில் கட்டலேங்கறதை இப்படி அரை மணி நேரம் கழிச்சா சொல்லுவ?!
- 'DVD டிரைவில், VCD ப்ளே ஆகுறப்போ ப்ளூரே டிஸ்க் மட்டும் ஏன் ப்ளே ஆக மாட்டேங்குது' - நல்ல வேளை ஹார்ட்டிரைவ் ஏன் ப்ளே ஆகலைன்னு கேக்காம இருந்தியே!
- 'PC-யை நீங்க சரியா செட் பண்ணாததால்தான் வைரஸ் அட்டாக் பண்ணுது' - பஃர்ஸ்ட்டு மிட் நைட்ல கண்ட கண்ட சைட் மேயுறது கட் பண்ணு, எல்லாம் செட் ஆயிரும்!
- 'பார்மேட் பண்ணா சிஸ்டம் பாஸ்டா ஓடும்னு ஃபிரெண்ட் சொன்னான்! D டிரைவ்ல டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் - அதுல இருந்த பைல்ஸ் எங்க போச்சுன்னு தெரியல!' - உங்க ஃபிரெண்ட் ரொம்ப நல்லவர் சார்!

எல்லாம் சரி, உனக்கு மட்டும் ஏன் சிஸ்அட்மின்கள் மேல் உலகத்தில் இல்லாத இந்த அக்கறை என கேட்கிறீர்களா? 15 வருடங்களுக்கு முன் என் IT உலக வாழ்கையை HCL-இல் 'கஸ்டமர் என்ஜினியர் ட்ரைனீ' ஆக துவக்கியவன் என்பதால்தான்! :) அடுத்த பாகத்தில் சந்திப்போம்!

cd /sysadmin_story/part-[ 1 | 2 | 3 ]/; echo 'you are reading Part 1 now!'

கருத்துகள்

 1. சீரியசான பதிவு போல! நான் ப்ளாக் அட்மினா இருக்கேன். :) :) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சீரியசான பதிவு போல! //
   அதனாலதான் இது ஒரு "சொல்லத் தவிர்த்த கதை" :D

   //நான் ப்ளாக் அட்மினா இருக்கேன்//
   ஒங்க ரேஞ்சே வேற, நீங்க ப்ளாக் மேனேஜர்! :) :) :)

   நீக்கு
 2. படிக்கும் போது "என் சோக கதைய கேளு பதிவுலகமே!" அப்படீன்னு நீங்க பாடுற மாதிரியே இருக்கு.. :D :D :D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பீலிங்க்ஸ்ஸை ஓவரா பிழிஞ்சுட்டேனோ! :)

   நீக்கு
  2. ஹா..ஹா.. ஹா.. அப்படி இல்லை நண்பா! சும்மா காமெடிக்கு சொன்னேன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. இது என்ன மாதிரி ஆளுங்களோட பெர்சனல் ட்ராஜடி! :D

   நீக்கு
 4. உங்க கம்பெனி PC சுத்த மோசம்.., எழுத்துக்கள் சரியாய் தெரியமாட்டேங்குது - யோவ் கண்ணாடியை ஒழுங்கா போட்டுக்கிட்டு பாருய்யா :D

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமான பதிவு. சொந்தக்கதை பெரிய சோக கதையா இருக்கும் போல தெரியுதே :)

  பதிலளிநீக்கு
 6. சொகத்தை யாரும் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடலாம்
  சோகத்தை மிக சுவாரஸ்யமாகச் சொல்லிப்போக
  தனித் திறன் வேண்டும்
  மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்ததிற்கு ரொம்ப நன்றி சார்! நானும் சீரியஸா எழுதகூடாதுன்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் சோகம் லைட்டா தலை காட்டிடுச்சு போல! :)

   நீக்கு
 7. யோ ப்ளேடு நீ பாட்டுக்கு வந்து நீங்க எழதி தினமலர் வந்துச்சான்னு கேட்டு புட்ட ஆளு ஆளுக்கு என்ன மொக்க பண்ணுராய்ங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்யா, நான் எழுதிதான் தினமலர்ல வெளிவந்துச்சுன்னு தைரியமா 'அடிச்சு' சொல்லுங்க நம்பிறுவாய்ங்க ;)

   நீக்கு
 8. என் அனுபவத்தை வாசித்தது போல் இருந்தது!!!. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. நன்றி தனபாலன்! படித்ததிற்கும், ப்ளேட்பீடியாவில் இணைந்ததிற்கும்! :)

   நீக்கு
 10. DVD டிரைவில், VCD ப்ளே ஆகுறப்போ ப்ளூரே டிஸ்க் மட்டும் ஏன் ப்ளே ஆக மாட்டேங்குது' - நல்ல வேளை ஹார்ட்டிரைவ் ஏன் ப்ளே ஆகலைன்னு கேக்காம இருந்தியே!
  'பார்மேட் பண்ணா சிஸ்டம் பாஸ்டா ஓடும்னு ஃபிரெண்ட் சொன்னான்! D டிரைவ்ல டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் - அதுல இருந்த பைல்ஸ் எங்க போச்சுன்னு தெரியல!' - உங்க ஃபிரெண்ட் ரொம்ப நல்லவர் சார்!

  ha ha ha.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில பேர் காஃபி ட்ரேயா யூஸ் பண்ணதாவும் நெட்டுல ஜோக்ஸ் இருக்கு! :)

   நீக்கு
 11. I was previously in sales, so I may not have much to comment on this post except that I admire sys-admins and support engineers :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. thank you buddy! hope you were not offended by this generalized comment ;)
   //ஆர்டர் பிடித்து விட்டு பிஃட்சா சாப்பிட, பெப்சி குடித்தவாறே போய் விடுவார்கள்! //

   even we admins had some great friends and great times with some of sales folks! :)

   நீக்கு
 12. ஹாஹா!!! நானும் இந்த குப்பையில்தான் இருக்கேன்... என்ன நான் DBA வாக இருக்கேன்.. இந்த மாதிரி அனுபவங்கள் எனக்கும் நிறைய உண்டு.. ITஇல் சப்போர்ட் என்பது ஒரு கொடுமையான விசியம்தான். என்ன பண்றது, இதைஎல்லாம் சகிச்சுகொண்டல்தான் பணம் பார்க்க முடியும்.. சும்மாவ கிடைக்கும் காசு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Cool! முன்ன சிஸ்அட்மினா இருந்தேன், ஆனா இப்ப என்னவா இருக்கேன்னு எனக்கே தெரியல! :) ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட்ஸ்! ;)

   நீக்கு
 13. அனைத்து துறையிலும் இதே கதிதான் . நல்ல பதிவு ....
  36 மணி நேரத்தில் 32 பதிவு . நல்ல முன்னேற்றம்.


  மாற்றம் ஒன்று மட்டும் தான் மாறாதது . இதனை நிரூபிக்கும் வண்ணம் வலைதள வடிவை மாற்றிகொண்டே இருங்கள் .. நன்று

  பதிலளிநீக்கு
 14. அனுபவங்களை புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா வேலைகளிலும்.. சில கஷ்டங்கள் சந்தோஷங்கள் இருக்கவே செய்கிறது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia