சிஸ்அட்மின் - 3 - மே மாசம் ஷூ வாசம்!

ஃபீல்ட் என்ஜினியர்: கஸ்டமர் சப்போர்ட் என்ஜினியரின் ஊர் சுற்றும் அவதாரம்தான் இந்த ஃபீல்ட் ஆஃபிசர்! :) நீங்கள் மெடிக்கல் ரெப்புகளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?! அச்சு அசல் நம் ஃபீல்ட் என்ஜினியரும் அதே கெட்டப்பில் தான் இருப்பார்! இஸ்திரிக்கப்பட்ட டார்க் கலர் பேன்ட்டில் சிக்கென்று டக்-இன் செய்யப்பட்ட கோடு போட்ட லைட் கலர் சட்டை! காலையில் ப்ரேக் பாஸ்ட் உண்ணாது மெலிந்த இடுப்பை பக்கென்று இறுக்கிப் பிடித்திட - பக்கிள்ஸ் போட்ட ஒரு இன்ச் பெல்ட்! கழுத்தில் இறுக்கக் கட்டியதொரு டை (கம்பெனி பாலிசியை பொறுத்து)! பேன்ட்டின் - பின்புறம் சொருகிய சீப்பு, இடப்பக்க பையில் ஒரு கட்டம் போட்ட கர்சிஃப், வலதில் கிரெடிட் கார்டுகள் மட்டும் அடங்கியதொரு பர்ஸ்! கால்களில் பெல்ட்டின் கலரைப் பொறுத்து - டையடிக்கப்பட்டதால் பளபளப்பான கருப்பு அல்லது பிரவுன் ஷூ! கையில் ஒரு பிரீஃப்கேஸ் அல்லது தோளில் ஒரு தோல் பை... முத்தாய்ப்பாக கோட்டில் வைத்த ரோஜாவாய் சட்டைப்பையில் பார்க் செய்யப்பட்ட பார்க்கர் பேனா! - என மாப்பிள்ளை கெட்டப்பில் காலையில் பைக்கை கிக்குவார்கள்!

பின்னர் கஸ்டமர் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, கசங்கிய ரோஜாவாய் (வேற மாதிரி தின்க் பண்ணப்படாது ;) மாலையில் திரும்பும்போது மேற்கண்ட வர்ணிப்புகள் தம் வர்ணம் இழந்திருக்கும்! டீக்கடை முன் பைக்கை - சைட் ஸ்டாண்டில் தளர்வாய் நிறுத்தி, டீக்கடை பெஞ்சில் அமர்ந்து, ஷூவை கழற்றினால் எங்கிருந்தோ இதமாய் வீசும் இளந்தென்றல், ஷூவுக்குள் நாள் முழுதும் இருந்ததால் வெந்து போன  சாக்ஸ் அணிந்த கால்களை பதமாய் வருடிச் செல்ல அட்மினின் முகத்தில் படரும் அந்தச் சுகம்... தென்றல் சும்மாயிருந்திராமல் சாக்ஸில் தங்கிய வேர்வை வாடையை தன்னோடு அரவணைத்து அருகில் இருப்பவர் மூக்கை வருடும் போது அந்நபர் முகத்தில் படரும் கலவர ரேகைகளாய் தொடரும்!

'நம்முடைய மூக்கானது நாம் அணிந்திருக்கும் சாக்ஸ்ஸின் வேர்வை வாடையை மட்டும் உணராத வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்படிருக்கிறது' என்ற பேருண்மையை, மற்றொரு அட்மின் டீக்குடிக்க அருகில் ஷூவை கழற்றி அமரும் போது மட்டுமே நம் அட்மின் உணர்வார்! 'டாய்ய்ய்ய்ய்.. கணையாழிக்கு கட்டுரையா எழுதிட்டு இருக்கே?!' என நீங்கள் உதைக்கும் முன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன்! :)

யாருமே இல்லாத ஊரில் கூட, கம்பியூட்டர் சாதனங்களை விற்கும் சேல்ஸ் டீமின் திறமையை நொந்தவாறு, அந்த இடத்தின் தூரத்திற்கேற்ப பைக்கிலோ, பஸ்சிலோ அல்லது ட்ரைனிலோ கிளம்ப வேண்டியதுதான்! மாங்கு மாங்கென்று கஸ்டமர் இடத்திற்கு போய்ச் சேரும் போதே லஞ்ச் டைம் ஆகி விடும்! சரி முதலில் வேலையை முடித்து விட்டு சாப்பிடலாம் என உள்ளே நுழைந்தால், கம்பியூட்டர் செக்ஷனின் இன்சார்ஜ் - பிரச்சினைகளை பட்டியலிட்டு விட்டு லஞ்சுக்கு வீடு கிளம்பி விடுவார்! சரி என்று பெட்டியை திறந்தால், முந்தைய நாள் சக அட்மின் ஒருவர் ஸ்க்ரூ டிரைவர் செட்டை கடன் வாங்கி போன காட்சி ப்ளாஷ்பேக்காய் பெட்டிக்குள் ஓடும்! இன்சார்ஜ் வயிற்றை சார்ஜ் செய்ய சென்று விட்ட படியால், தலையை பிய்த்துக்கொண்டு - சரி லஞ்சையாவது முடிக்கலாம் என்றால் பொட்டல் காட்டு கஸ்டமர் இடத்தில் மாட்டிக்கொண்டது அப்போதுதான் உறைக்கும்! இன்சார்ஜ் திரும்பியதும் அவரிடம் ஸ்க்ரூ டிரைவரை வாங்கி பிரச்சினைகளை சரி செய்து, அவரையே ஸ்டேசனில் டிராப் செய்யச் சொல்லி, லஞ்ச் சாப்பிடுவதற்குள் டின்னர் டைமே வந்திருக்கும்! அதுவரைக்கும் கஸ்டமர் கொடுக்கும் 2, 3 கப் டீதான் ஆகாரம்! :)

ஓகே ஓகே, கண்களை துடைத்துக்கொள்ளுங்கள்! ;) அகமதாபாத், HCL-இல் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது! பைஜூ என்ற சக அட்மின் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதொரு கஸ்டமர் இடத்திற்கு பைக்கில் செல்ல நண்பரிடம் வழி கேட்டிருக்கிறார்! அவரும், ஒரு குறிப்பிட்ட ஹைவேயில் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் ஒரு இரயில் சிக்னல் வரும் அதற்கு பக்கத்தில்தான் இருக்கிறது என - நம்மாளும் ஒரு மணிநேரம் கழித்து இன்னமும் இரயில் சிக்னல் வரலியே என்று டென்ஷன் ஆகி மீண்டும் போன் செய்து கேட்டிருக்கிறார்! புது பைக் வாங்கிய ஜோரில், மணிக்கு 100km ஸ்பீடில் ஓட்டி அநேகமாக இலக்கை அரை மணியில் கவனிக்காமல் கடந்திருக்க வேண்டும் என்பது பிறகு விசாரித்ததில் தெரிய வந்தது! :)

cd /sysadmin_story/part-[ 1 | 2 | 3 ]/; echo 'you are reading Part 3 now!'

கருத்துகள்

 1. பதில்கள்
  1. போன இரண்டு அட்மின் கதை போல இதில் இன்டிரஸ் இல்லை ஒரு வேலை எனக்கு தான் அப்படியோ...

   நீக்கு
  2. அதீத வர்ணனை காரணமாய் இருக்குமோ? :)

   நீக்கு
  3. அப்படியே இத கொஞ்சம் படிச்சிட்டு ஏதாவது சொல்லு....

   MISSION IMPOSSIBLE

   நீக்கு
  4. //சொல்லு....//
   சரி சின்ன மலை தாத்தா!

   நீக்கு
  5. இப்ப எதுக்கு தாத்தான்னு சொன்ன

   நீக்கு
  6. உங்களுடைய சரமாரியான ஒருமைச் சொல் பிரயோகங்கள் அந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது! :) அல்லது சென்னை எஃபெக்ட்டா? ;) ஏனோ, தெரியவில்லை நேரில் பார்த்து, நெருங்கிப் பழகிய நண்பர்களை தவிர திடீரென என்னால் புது நண்பர்களிடம் அவ்வாறு பேச முடிவதில்லை! :) :)

   நீக்கு
  7. நண்பா நான் தாத்தா எல்லாம் கிடையாது i am young man

   நீக்கு
 2. Boss... Attakasam...!!! I've also started my career as Desktop Admin - Field Engineer @ Mumbai!!! I've traveled all remote places @ Mumbai where you won't see any hotels!!! Survived with Tea alone for an entire day!!!

  Unga katturai attakasama irukku!!! Superb!!!

  பதிலளிநீக்கு
 3. //கசங்கிய ரோஜாவாய் (வேற மாதிரி தின்க் பண்ணப்படாது ;)//

  இது தான் குசும்பா?

  சொந்த அனுபவமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஸ்டமர் அழகிய இளம் பெண்ணாக இருந்தாலன்றி இப்படிப்பட்ட கேள்விகளை கேட்காதீர்! ;) குசும்பு என்றே அர்த்தம் செய்து கொள்ளுங்கள்! :D

   நீக்கு
 4. ஹிஹி.. சிரிச்சு மாளலை... வாழ்த்துக்கள்..........

  பதிலளிநீக்கு
 5. பிரமாதமாய் எழுதியிருக்கிறீர்கள். மிக கொஞ்ச காலம் ஆபிசில் இத சப்போர்ட் பண்ணியபோதே நொந்து போனேன்.. ஒரு முறை என்னை படுத்திய கம்பனி ரெப்பை எங்கள் சிஸ்டத்தை ரிப்பேர் செய்ய எடுத்து செல்லும்போது , cpu - 1 , monitor - 1 , mouse -1, keyboard - 1 (101 கீ இருக்கிறதா என்று செக் செய்யவும்) என்று எழுதி , அவர் எங்கள் security - இடம் பட்ட பாட்டை சொல்லப்போவதில்லை :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia