1985-ஓ அல்லது 86-ஓ சரியாக நினைவில்லை - நாங்கள் வேலூரில் இருந்த சமயம், அப்போதுதான் ஸ்பைடர்மேன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது! எங்கள் வீட்டில் அப்போது டிவி இல்லாத காரணத்தினால் இவற்றை பார்க்க, நானும், என் அண்ணனும் மாமா வீட்டிற்கு சென்று விடுவோம்! மாமா அப்போது ப்ளாக் அண்ட் வைட் சாலிடர் டிவிதான் வைத்திருந்தார்! நல்ல Wide ஸ்க்ரீன் டிவி! உடனே கற்பனையை LCD ரேஞ்சுக்கு ஒட்டாதீர்கள்! டிவி ஸ்க்ரீன் என்னமோ 4:3 தான். ஆனால், டிவி பெட்டிதான் wide-ஆக இருக்கும், அதற்கு அழகாக இரண்டு ஷட்டர்கள் வேறு! ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும்! சானல்களை மாற்ற Knob-ஐ தான் திருக வேண்டும் - ரிமோட் எல்லாம் கிடையாது!
ஆசையாக வந்து ஆன் செய்தால், அடிக்கும் காற்றில் ஆன்ட்டெனா திரும்பி ஒரே புள்ளி ராஜாக்களாய் தெரியும்! அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்று வைத்திருந்தான்! 'நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்' என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான்! தொலைதொடர்புக்கு செல் போன் டவரைப் போல சமையலறையின் புகை போக்கி டவர் ஒன்று இருந்தது! அதன் வழியாக குரல் கொடுப்பான் - 'இப்போ தெரியுதா?' நான் 'இல்லேடா இன்னும் கொஞ்சம் லெஃப்ட்டுல திருப்பு' என்று சம்பந்தமில்லாமல் உளருவேன்! ஒருவழியாக அண்ணன் அப்படி இப்படி ஆன்டென்னாவைத் திருப்பி சிக்னல் கிடைக்குமாறு செய்வான் - 'என்னடா பண்ணே' என்று கேட்டால் "பூஸ்டர் அட்ஜஸ்ட் பண்ணேன்" என்று ஏதோதோ சொல்வான் - எனக்கு அப்போது ஒன்றும் விளங்கியதில்லை!
ஸ்பைடர்மேன் தீம் மியூசிக் அவ்வளவு அற்புதமாக இருக்கும் - நானும் அர்த்தம் புரியாமலேயே குத்து மதிப்பாக மனப்பாடம் பண்ணி வைத்திருந்தேன்! இப்போது இன்டர்நெட்டில் தேடியதில் இது 1967-இல் வெளியான டிவி சீரீஸ் என தெரிகிறது! அந்த ஓபனிங் சாங்கை பாருங்களேன்! (நீங்கள் 1990-க்கு அப்புறம் பிறந்தவராக இருப்பின், இதை பார்த்து செம காமெடி என்று நிச்சயம் சிரிப்பீர்கள்!) :) :) :)
இதன் பாடல் வரிகள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்!
ஸ்பைடர்மேன் தொடரில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வில்லன் என செம கலக்கலாக இருக்கும்! வில்லன்களை விட என்னை கவர்ந்த நபர், ஸ்பைடர்மேன் - பீட்டர் பார்கராக இருக்கும் வேளைகளில் பணியாற்றும் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜேம்சன்தான்! மனிதர், ரஜினி ஸ்டைலில் சுருட்டை ஊதித் தள்ளிக்கொண்டே நறநறவென பேசுவார்! BP எகிறினால் முஷ்டியை ஓங்கி மேஜையின் மேல் ஒரு குத்து விடுவார் :)
ஒரு சில நண்பர்கள் வீட்டில் அப்போது கலர் TV வந்திருந்தது - ஸ்பைடர்மேன் தொடர் கிட்டத்தட்ட ஈஸ்ட்மேன் கலரில்தான் இருந்தது என்றாலும் - கருப்பு வெள்ளையில் பார்த்து விட்டு திடீரென கலரில் ஸ்பைடியை கண்டதும் எங்களுக்கு ஏக்கமாக போய் விட்டது! அதற்கும் என் அண்ணன் ஒரு வழி செய்தான்! மாமா வீட்டு சாலிடர் டிவியின் ஸ்க்ரீன் மேல் உப்பலாக இருந்த நீல வண்ண கண்ணாடியை மெதுவாக நெம்பி எடுத்தான், பிறகு டிவியை போட்டால் கிட்டத்தட்ட பிரவுன் கலரில் படம் தெரிந்தது! அப்புறம் என்ன, மீதித் தொடரை முழு பிரவுனில் பார்த்தது தமிழ்நாட்டில் நாங்கள் இருவராய் மட்டுமே இருக்க முடியும்! :)
பிறகு சேலத்து மாற்றலாகி போன பிறகு, ஹி-மேன் தொடங்கியிருந்தது! கர்ண கடூரமாக 'ஹி-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற குரல் ஓங்கி ஒலிக்க, ஹி-மேன் ஏதேதோ பேசிக்கொண்டே வாளைத் தூக்கிக் காட்டுவார் - எங்களுக்கு அப்படியே புல்லரிக்கும்! ;) வழக்கம் போல எனக்கு ஹி-மேனை விட அதில் வரும் வில்லனான ஸ்கெலிட்டரை ரொம்பப் பிடித்துப் போனது! அதே போல ஹி-மேனின் தொடை நடுங்கிப் புலியும், காமெடி மேஜிசியன் Orco-வும் (செம கியூட்!) ரொம்ப பாப்புலர்! அப்போது, ஹி-மேன் படம் கூட வெளிவந்ததாய் ஞாபகம் - ஓடவில்லை!
பள்ளிக்கு அருகே, ஃபிளாட்பாரக் கடைகளில் ஹி-மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் இவர்களின் விதவிதமான ஸ்டிக்கர்கள் கிடைக்கும். பெட்ரோல், கெரசின், தின்னர், நெயில் பாலிஷ் - இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்தது போன்ற ஒரு கிறக்கமான வாசத்தை அந்த ஸ்டிக்கர்கள் கொண்டிருக்கும்! அவற்றை நோட்டுகளில் ஒட்டி ஆசிரியர்களிடம் திட்டு வாங்கியதுண்டு! அப்புறம், இஸ்திரி செய்தால் துணியின் மேல் ஒட்டும்படியான ஸ்டிக்கர்களும் கிடைத்தன! நல்ல வேளை, அவற்றை ஸ்கூல் யூனிஃபார்மில் ஒட்டவில்லை - இல்லையென்றால் TC குடுத்து அனுப்பியிருப்பார்கள்! அப்போது லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மோகமும் பீக்கில் இருந்தது - அந்த ஸ்பைடரின் ஸ்டிக்கர்கள் கிடைக்குமா என்று தேடியலைந்த கதையும் உண்டு!
அப்புறம் மெதுவாக தொண்ணூறுகளில் இவர்களை மறந்தே போனேன்! கார்ட்டூன் நெட்வொர்க்கில் புதிய ஸ்பைடர்மேன் தொடர்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன்! சுட்டி டிவி-யில் ஹி-மேன் மறு ஒளிபரப்புகளையும் பார்த்திருக்கிறேன்! புதிதோ, பழையதோ எதுவாக இருந்தாலும் இப்போது பார்க்கும் போது கொஞ்சமும் பிடிப்பது இல்லை! ஆனாலும் அவை, இளம் வயது இனிய நினைவுகளை கிளறிச் செல்ல ஒருபோதும் தவறுவது இல்லை! :)
பி.கு.: புதிய ஸ்பைடர்மேன் படத்தின் விமர்சனம்: தி அமேஸிங் ஸ்பைடர்மேன் - 2012 - எங்கேயோ பார்த்த ஞாபகம்!
1985-க்கு பிறகு பிறந்தவன் தான். ஆனால் நானும் ஸ்ப்டைர்மேன், ஹீமேன் போன்றவைகளைப் பார்த்து தான் வளர்ந்தோம் ... குறிப்பாக சூப்பர் ஹியுமன் சாமுராய் போன்ற நாடகத் தொடர்களும் மறக்க முடியாது ... !!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே! என் கணக்கு தவறாகி விட்டது! ;) 1990 என மாற்றி விட்டேன் :)
நீக்குநம்பினால் நம்புங்கள். நேற்றுதான் இந்த ஸ்பைடர் மேன் பாட்டு பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். கூகுளில் அரைமனதோடு தேடிவிட்டு நாளை தேடிக்கொள்ளலாம் என்றுவிட்டுவிட்டேன். காலையில் வந்து பாத்தால் உங்கள் பதிவு.
பதிலளிநீக்குமறக்கமுடியாத நினைவுகள் . சனிக்கிழமை மாலை வரும் இந்த பதினைந்து நிமிடங்களுக்காக காலையில் இருந்தே நண்பன் வீட்டின் அருகில் சுற்றிக்கொண்டே இருப்பேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது.
மற்றொரு கார்ட்டூன் ஞாயிறு காலையில் வரும் டிஸ்னி (மிக்கி மௌஸ்).
வருகைக்கு நன்றி நண்பரே! நீங்கள், அவர் இல்லையா?! :)
நீக்கு//மற்றொரு கார்ட்டூன் ஞாயிறு காலையில் வரும் டிஸ்னி (மிக்கி மௌஸ்).//
ஆம்! அவையும் அட்டகாசமாக இருக்கும்!
ஹி man பார்பதற்காக ஒவ்வொரு வீடாக அலைந்தது நினைவிற்கு வருகிறது.
பதிலளிநீக்குஒவ்வொரு புதன் or வியாழன் மாலை 6.30 மணி அளவில் ஒளிபரப்பாகும்.
நன்றிகள் நண்பரே நினைவு படுத்தியதற்காக.
எனக்கும் ஒளிபரப்பான நேரம் நினைவில்லை!
நீக்குNan sinna vayasula parthathu ellam
பதிலளிநீக்குramayanam
mahaparatham than movies athikam parthullen
vetla tv vanthathu 1993 than athe soliter
சாலிடரையும், டயனோராவையும் மறக்க முடியுமா?!
நீக்குஅந்தக் கால நினைவுகளை ஞாபகப் படுத்தி விட்டீர்கள். ஆனால் அன்று இருந்த சந்தோசம் இன்று இல்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் (கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் படிப்பிற்கும், உடலுக்கும்) நஞ்சு !
பதிலளிநீக்குஹீ-மே ஐ இதுவரை ஸ்டிக்கரில் மட்டுமே பார்த்துள்ளேன். டிவி தொடர்கள் என்றால் அலிஃப் லைலா மட்டும் தான் இப்பொழுது ஞாபகம் வருகிறது.
பதிலளிநீக்குஎனக்கு ஹிந்தி சீரியல்கள் என்றாலே அலெர்ஜி! :) விக்ரம் அண்ட் வேதாள் பார்த்திருக்கிறேன்!
நீக்குஅலிஃப் லைலா நான் தமிழில் பார்த்திருக்கிறேன். :D
நீக்கு//டிவி ஸ்க்ரீன் என்னமோ 4:3 தான். ஆனால், டிவி பெட்டிதான் wide-ஆக இருக்கும், அதற்கு அழகாக இரண்டு ஷட்டர்கள் வேறு! ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும்!//
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா...
//ஆசையாக வந்து ஆன் செய்தால், அடிக்கும் காற்றில் ஆன்ட்டெனா திரும்பி ஒரே புள்ளி ராஜாக்களாய் தெரியும்! அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்று வைத்திருந்தான்! 'நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்' என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான்!//
எனக்கு இந்த அனுபவம் நிறையவே உண்டு. கரெக்ட்டா செட் பண்ணிட்டா ஏதோ கார்கில் போரில் ஜெய்த்த மாதிரி ஒரு பந்தா லுக் ஒன்னு விடுவோம் பாருங்க...
நல்ல பதிவு நண்பரே சிறு வயதில் நாம் அனைவருமே ரசித்த விசயங்களை & அனுபவங்களை மிகவும் அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களின் வீட்டில் இவற்றை பார்த்தவன் நான். அவர்கள் ஊருக்கு சென்று விட்டால் அந்த வாரம் கோவிந்தாதான்.
பதிலளிநீக்குஇங்கும் அதே கதைதான்! ஓசி டிவி பார்க்க ரொம்பவே சங்கடமாக இருக்கும்! :)
நீக்கு//ஆசிரியர் ஜேம்சன்தான்// எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்
பதிலளிநீக்குநண்பா சொல்ல போனால் நான் ஒரு கார்ட்டூன் வெறிபிடித்தவன் இன்னும் நான் கார்ட்டூன் பார்ப்பதை நிறுத்தவில்லை நீங்க சொன்ன களத்தில் எல்லாம் எங்க வீட்டிலும் சரி ஊரிலும் டிவி கிடையாது கிராமம் தானே....ஆனாலும் ஹீமேன் spider இரண்டையும் முழுமையாய் பார்த்து உள்ளேன்...டிஸ்னி வரும் பல கார்ட்டூன் செம்மையா இருக்கும் இன்றளவும் பார்த்து கொண்டு தான் உள்ளேன் வீட்டில்,நண்பர்கள் எல்லாம் திட்டுவாங்க குழந்தையானு....
பதிலளிநீக்குநான் இன்னும் கார்ட்டூன் பிரியன் தான்,, பாட்டி வீட்டில் பழைய சாலிடர் டீவியில் கார்ட்டூனை பிளாக் அன்ட் ஒயிட்டில் பார்த்து இரசித்த காலம் அது.. அதிகமாக கார்ட்டூன்களை இலங்கையின் எம் டீவியிலும் கண்டேன்,, இந்த ஹீமேனுக்கு முற்றிலும் மாறுபட்ட ஹீமேன் கார்ட்டூனை எம் டீவியில் கண்டு ரசித்த காலம்... பின்னர் எம் டீவியில் air wolf, robo car, சிறுவனும் கரடியும் நடித்த தொடர்களுக்கு இரசிகனானேன்...
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களை பகிர்ந்ததிற்கு நன்றி வலைஞரே! கார்ட்டூன் நினைவுகள் அழிவதில்லை! :)
நீக்குமறக்க முடியுமா ?
பதிலளிநீக்குமுடியாது! ;)
நீக்குமுடியாது முடியாது .......முடியவே முடியாது
நீக்குபின்னால் குச்சியை முதுகில் செருகி வைத்து கொண்டு ஹீ மேன் போல வாளை உருவி ஓலமிட்டு (கதறிக்கொண்டு) நண்பர்களை சிரிக்க வைத்து(வெட்கமில்லாமல் ) உற்ச்சாக படுத்தியதை.............................மறக்க முடியவில்லை...... இல்லை.....இல்லை
நீக்குரசிக்க வைக்கும் அட்டகாசமான உழைப்ப்ப்பிற்கு எனது முதல் நன்றி
நீக்குநன்றி! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்!
நீக்குஅது நம் முன்னே டிவி தோன்றிய காலமென்று நினைக்கிறேன்...............
பதிலளிநீக்குசண்டே மாலை ஸ்பைடர் மேன் ,பின்பு திரை படம் ,வீடு வீடாக, வீதி வீதியாக டிவி தேடி அலைந்த காலம் வேறென்ன சொல்வது
பின்பு சில ஆண்டுகள் கழிந்த பின்னே சண்டே காலை ஹீ மேன் ,ராமாயணம் என பார்த்த பதிவுகள்............
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ..................
தொலைந்து போன என்னை தூசி தட்டி எழுப்பி உள்ளீர்கள் நன்றி நண்பரே
நன்றி நண்பரே! அது ஒரு பொற்காலம்! :)
நீக்குஅருமையான் பதிவு நண்பா! சிறுவயது ஞாபகங்கள் சூழ்ந்துவிட்டன. ஸ்பைடர்மேன், ஹீமேன்,ஜங்கிள் புக் , முத்து,ராணி, லயன், பூந்தளிர் என்று அது ஒரு வசந்த காலம்!
பதிலளிநீக்குநிச்சயமாக! Nostalgia போட்டுத் தாக்குகிறது! :D
பதிலளிநீக்குஅன்பு நண்பர் கார்த்திக்குக்கு சேலம் மாநகரிலிருந்து உங்கள் நண்பன் ரமேஷ் நீங்கள் சொன்ன வருடங்களில் உங்களை போலவே காமிக்ஸ் கதைகளுக்கு பழைய புத்தக கடைகளை மொய்த வ(வா)ண்டுகளில் நானும் ஒருவன். இப்போதும் எங்காவது இந்த புத்தகங்கள் கிடைக்குமா என்று சொல்ல முடியுமா அல்லது இணைய தளங்களில் ஏதேனும் கிடைக்குமா நண்பரே
பதிலளிநீக்கு