ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு!

என்னுடைய கீழ்க்கண்ட தொழில்நுட்ப பதிவு, ப்ளாக்கர் நண்பன் வலைப்பூவின் - விருந்தினர் பக்கத்தில் 23, ஜூன் 2012 அன்று வெளியாகி உள்ளது! இதன் மூலம் என் பதிவை அதிகம் பேரிடம் சேர்த்த நண்பர் அப்துல் பாஷித் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! நண்பர் பாஷித், இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப பதிவுகளை, குறிப்பாக கூகிள் பிளாக்கரை உபயோகிப்பது பற்றிய பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் பகிர்ந்து வருகிறார்! இனி பதிவுக்கு செல்வோம்...


ப்ளாக்கர்  நண்பனில் வெளியான இந்த பதிவு, சிறிய திருத்தங்களுடன் இங்கே மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது!

SEO என்றொரு சங்கதி இருக்கிறது - Search Engine Optimization! அதாவது நமது தளத்தில் உள்ள தகவல்கள், தேடு பொறிகள் மூலம் எளிதாக கிடைத்திடுமாறு - தளத்தை வடிவமைக்கும் சூத்திரம்! இதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம் - சிறந்த முறையில் SE Optimize செய்யப்பட்ட தளம் அதிகம் பேரை சென்றடையும்! ஆனால், அவ்வாறு வடிவமைப்பது எளிதா என்று நீங்கள் கேட்டால் - நிச்சயம் இல்லை! இதைப்பற்றி விரிவாக எழுதவேண்டுமானால் தலையணை சைஸுக்கு பெரிய புத்தகமாய் எழுத வேண்டியிருக்கும்! சரி, இருப்பதிலேயே எளிதான ஒரு ஆலோசனையைப் இந்தப் பதிவில் பார்ப்போம்!

அர்த்தமுள்ள URL முகவரி:
உங்கள் தளத்தில் உள்ள பல்வேறு பக்கங்களின் பெயர்களை - அந்த பக்கத்தில் என்ன தகவல் உள்ளதோ அதற்கேற்ப பொருத்தமாக வைக்க வேண்டும்! உதாரணத்திற்கு, உங்களை தொடர்பு கொள்ளுவதற்கான விவரங்கள் உள்ள பக்கத்திற்கு contact.html என தலைப்பு வைக்கலாம்! ஆனால் நீங்கள் பதிவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவின் URL முகவரியை நிர்ணயிக்கும் உரிமை உங்களிடம் இல்லை மாறாக அது உங்கள் பதிவின் தலைப்பை சார்ந்து உள்ளது! உதாரணத்திற்கு நீங்கள் Avengers படத்தின் விமர்சனம் எழுதி, பதிவின் தலைப்பை 'The Avengers - 2012 - Movie Review' என வைத்தால், பதிவின் URL முகவரி "www.mydomain.com/YYYY/MM/avengers-2012-movie-review.html" என பொருத்தமாக வந்திடும்!

இந்த முகவரி விதிவிலக்கு ;) ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே -  காரணம், ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழிகளில் டொமைன் நேம் மற்றும் URL முகவரிகள் வைக்கும் வசதி இன்னமும் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை! எனவே, நீங்கள் பதிவின் பெயரை தமிழில் வைத்தால் கூகிள் ப்ளாக்கர் - தன்னிச்சையாக ஏதாவது ஒரு முகவரியை தெரிவு செய்யும்! முகவரிகளின் தலைப்பிற்கும், உங்கள் பதிவில் உள்ள தகவலிற்கும் எவ்வொரு தொடர்பும் இன்றி "1.html", "blog-post_19.html" என்று உபயோகமில்லாத ஒன்றாய் இருக்கும்!

உதாரணத்திற்கு எனது கீழ்க்கண்ட பதிவின் பெயர் முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால்,
என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி!

இதன் URL முகவரி இவ்வாறாக வந்துள்ளது:
http://www.bladepedia.com/2012/05/blog-post_16.html

பதிவின் பெயரில் ஆங்கில கலப்பு கீழ்க்கண்டவாறு இருந்தால்,
சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்!

URL முகவரியில் அந்த ஆங்கில சொற்களை காணலாம்! உண்மையில் இந்த SEO டிப்ஸ் பதிவை நான் எழுதக் காரணமாய் இருந்ததே மேற்கண்ட சலூன் பதிவுதான்! URL-இல் "sci-fi" என்ற ஆங்கில சொல் இருந்ததை கவனித்து ஆச்சரியப்பட்டு மற்ற பதிவுகளின் URL-களை ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்த உண்மை உறைத்தது!:
http://www.bladepedia.com/2012/06/sci-fi.html

சரி இதற்கு என்னதான் தீர்வு?! உண்மையில் பெரும்பாலானோர், தேடு பொறியில் தகவல்களை தேடும் போது ஆங்கிலத்தைத்தான் உபயோகிக்கிறார்கள்! உதாரணத்திற்கு ஆன்லைன் ஷாப்பிங் வழிமுறைகள் பற்றி தேடவேண்டுமானால், பொறுமையாய் தமிழில் யாரும் டைப் செய்து தேடுவதில்லை! மாறாக, "Online Shopping Tips" என்றே தேடுவார்கள்! எனவே, பதிவின் தலைப்பை முதலில் ஆங்கிலத்தில் வையுங்கள், பிறகு பப்ளிஷ் செய்த பின் கீழ்க்கண்டவாறு உடனடியாக* எடிட் செய்து மீண்டும் தமிழில் மாற்றிக் கொள்ளலாம்! :)
Dashboard --> Posts --> பதிவை Edit செய்யவும் --> தலைப்பை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றவும் --> Update --> அவ்ளோதான்! :)

உடனடியாக*: தமிழ் தலைப்பையும் முதலிலேயே நிர்ணயித்து, அதை copy செய்து buffer-இல் வைத்துக்கொள்ளுங்கள்! மேற்கண்டவாறு publish செய்த உடன், மீண்டும் பதிவை edit செய்து copy செய்து வைத்திருக்கும்  தமிழ் தலைப்பை paste செய்து மின்னல் வேகத்தில் re-publish செய்து விடலாம்! ;)

இன்னொரு முக்கிய விஷயம்! முதலில் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது அதன் நீளம் 39 கேரக்டர்களை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! ஆம், அதுதான் உச்சபட்ச தலைப்பு நீளம். நான் '39 characters limitation' என குறிப்பிடுவது URL-இன் இந்த போஸ்ட் டைட்டில் பகுதியை மட்டும்!
seo-tips-meaningful-url-for-tamil-blogs (.html சேர்க்காமல்!)

அதே போல முடிந்த அளவு உங்கள் தலைப்பில் "Tamil" என்ற சொல் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள் - எதற்கு என்று அறிய ப்ளாக்கர் நண்பரின் இந்த பதிவை பாருங்கள்: தமிழ் என்றால் ஆபாசமா?. உதாரணத்திற்கு, இந்த பதிவின் தலைப்பை முதலில் கீழ்க்கண்டவாறு வைக்குமாறு நண்பர் அப்துல் பாஷித்தை கேட்டுக் கொண்டேன்!
"SEO Tips Meaningful URL for Tamil Blogs"

பிறகு பப்ளிஷ் செய்த பின் உங்களுக்கு பிடித்த தமிழ் பெயராக மாற்றிக்கொள்ளுங்கள் என்ற அரிய வாய்ப்பையும் ;) அவருக்கு வழங்கினேன்! எனவே, நீங்கள் URL முகவரியில் காண்பது நான் வைத்த பெயர்! பதிவின் தலைப்பில் காண்பது 'ப்ளாக்கர் நண்பர்' வைத்த பெயர்! :) அப்புறம் என்ன, தமிழ் தெரியாத யாராவது ஒருவர் "Meaningful URL for Blogs" என்று தெரியாத்தனமாக தேடி வைத்தால் நம் தமிழ் பதிவும் அவர் தேடலில் இடம் பெற்று அவர் மண்டையை சொரிய வைக்கும்! ;)

என்ன புரிந்ததா நண்பர்களே?! :) வாழ்த்துக்கள்! நீங்கள் மேற்கண்ட பதிவை படித்ததின் மூலம் மேலும் சில SEO ஆலோசனைகளையும் பக்க விளைவுகளாக பெறுகிறீர்கள்! அவை என்ன என்று பார்ப்போம்! (யாருப்பா அங்கே தம் அடிக்க ஓடுவது?!)

2. அதிகமான Backlinks:
Backlink என்பது மற்றொரு தளத்தில் உங்கள் தளத்துக்கான இணைப்பு இருப்பது! இணைப்புக்களின் எண்ணிக்கை மற்ற தளங்களில் (குறிப்பாக பிரபல தளங்களில்) அதிகரிக்க அதிகரிக்க - உங்கள் தளத்தின் மதிப்பும், தேடு பொறியில் உங்கள் தளம் முன்னணியில் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்! அதே போல Alexa மற்றும் Google Page Rank-இல் உங்கள் தளம் முன்னேறும்! இந்த பதிவில் மட்டும் எனது ப்ளேட்பீடியா வலைப்பூவில் வெளியான மூன்று பதிவுகளின் URL-களை சுட்டிகளாக ஆங்காங்கே தெளித்துள்ளேன்! பிரபல தளமான ப்ளாகர் நண்பனில் இவ்வாறாக எனது Backlinks-இன் எண்ணிக்கையை கள்ளத்தனமாக அதிகரித்துள்ளேன்! :)

3. அருமையான Advertisement:
இதை படித்துக்கொண்டிருக்கும் ப்ளாகர் நண்பனின் - லட்சக்கணக்கான வாசக நண்பர்களிடம், ப்ளேட்பீடியா என்றொரு வலைப்பூ இருக்கிறது, அதில் கார்த்திக் என்ற ப்ளேடு பார்ட்டி படு மொக்கையாக எழுதி வருகிறார் என்ற (தமிழ்)நாட்டுக்கு தேவையான தகவலை பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்துள்ளேன்! இதன் மூலம் எனது வலைப்பூவை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும்(!) வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!

இந்த முழுநீளப் பதிவை முழுதாய் படித்த வாசக நண்பர்களுக்கும், விருந்தினர் பக்கத்தில் விரிவாய் எழுத வாய்ப்பு வழங்கிய நண்பர் அப்துல் பாஷித்துக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் ப்ளேட்பீடியாவின் மனமார்ந்த நன்றிகள்! மாறாக ரொம்பவே கடித்திருந்தால் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! :)

Reference: Official Google Search Engine Optimization Starter Guide

பி.கு.: அப்படியே இந்த பதிவைப் பற்றிய, நண்பர் பாஷித்தின் அப்டேட் பதிவையும் படித்துவிடுங்கள்! மிக முக்கியமானதொரு தகவல் அதில் உள்ளது!

14 comments:

 1. சும்மா சொல்ல கூடாது நண்பா அருமையான யோசனை நான் இதற்கு முன்பு இருந்தே இதை போல தான் செய்துகொண்டு உள்ளேன் அதில் SEO ஒரு சங்கதி இருப்பது இப்ப தான் தெரியும்..

  ReplyDelete
 2. விரிவா ன விளக்கம். நானும் முதலில் ஆக்கிலத் தலைப்புதான் வைக்கிறேன்.

  ReplyDelete
 3. Replies
  1. M GOOD என்றால் என்ன அர்த்தம் நண்பரே? :) வலைச்சர ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்!

   Delete
 4. @Chinna & Nizamudeen:
  இதை நீங்கள் முதலில் இருந்தே கடைபிடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது! :)

  ReplyDelete
 5. SEO என்னும் பெரிய விஷயத்தை மிக எளிதாக தங்கள் நகைச்சுவை பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே! :) பார்ட் 2 விரைவில் வெளிவரலாம்! - ஓடாதீங்க பாஸ்! :)

   Delete
 6. Replies
  1. முதலில் அதை செய்யுங்கள் ;)

   Delete
 7. எது எப்பிடியோ இன்னொரு பதிவும் தேத்தியாச்சு :D :D

  நகைச்சுவையோடு கருத்துக்களை எழுதும் எழுத்து நடை எவர்க்கும் அத்தனை சுலபமாக வராது நண்பா. தங்களுக்கு அந்த திறமை நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர :)

  ReplyDelete
  Replies
  1. //எது எப்பிடியோ இன்னொரு பதிவும் தேத்தியாச்சு :D :D//
   :) :) :)

   //வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர :)//
   இதுக்கு மேல உயரமா வளர முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்! ;)

   Delete
 8. //////மேலே உள்ள Facebook கருத்துப்பெட்டி மூலமாவும் பின்னூட்டமிடலாம்!///

  யாருய்யா ஆட்டைய போட்டது என் கண்ணுக்கு தெரியலையே :D

  ReplyDelete
  Replies
  1. Template மாத்துனதுல இருந்து காணாம போயிருச்சு நண்பா! சரி பண்ண இன்னும் டைம் கெடைக்கல! :D

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia