பதிவெழுத பத்துக் கட்டளைகள்!

நான் (உருப்படியாக) பதிவிடத் தொடங்கி முழுதாய் இன்றோடு ஒரு மாதம் ஆகிறது! எனது முதல் பதிவு, பிப்ரவரி 12ம் தேதி இட்டதாயிருந்தாலும் அதை நான் கணக்கில் கொள்ளவில்லை - படித்துப்பார்த்தால் ஏனென்று உங்களுக்கே புரியும்! இந்த ஒரு மாத காலத்தில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்! அவை ஒருவேளை உங்களுக்கும் உபயோகப்படலாம். எனவே, புதியதாய் பதிவெழுத தொடங்குபவர்களுக்கான பத்துக் கட்டளைகள் இதோ!



1. விளம்பரம்:
  • முறை: உங்களால் முடிந்த வரை உங்கள் தளத்தை விளம்பரப்படுத்துங்கள்! உதாரணத்திற்கு, Facebook / Google போன்ற சமூகத்தளங்களிலும், Indli  போன்ற திரட்டிகளிலும், மற்ற பிரபல பதிவர்களின் பின்னூட்டப் பெட்டிகளிலும், உங்கள் நண்பர்களிடமும்! பதிவர்கள் விசயத்தில் மட்டும் ஒரு அளவோடு வைத்துக்கொள்ளுங்கள்! நமது Indirect விளம்பரம் மூலம் அவர்களை எரிச்சல் படுத்துவது அவ்வளவு நல்லதல்ல!
  • நிறை: நாம் எழுதுவதை படிக்கவும், கேவலமாய் திட்டவும் ஆட்கள் கிடைப்பார்கள்! ;)
  • குறை: இன்டர்நெட் பிச்சைக்காரன், மானங்கெட்டவன் போன்ற இலவசப் பட்டங்கள் :)
  • எனது பார்வை: படிக்க ஆள் பிடிப்பதை நான் கேவலமாக நினைக்கவில்லை! பிச்சைக்காரன் போன்ற பட்டங்களை உள்வாங்கி மன உளைச்சலும் கொள்வதில்லை! நான் பதிவெழுதுவது பிறர் படிக்கதான்! நானே எழுதி, நானே படிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை :) அதற்கு பதில் டைரியில் எழுதி பத்திரமாய் பெட்டிக்குள் வைத்துக்கொள்ளலாம்!
  • ஜாலி டிப்ஸ்: உங்கள் Profile-லில், பெயருக்கு பதிலாக - உங்கள் பதிவின் தலைப்பையும், தளத்தின் முகவரியையும் வைத்துக்கொண்டு மற்றவர் பதிவுகளில் பின்னூட்டமிட்டால், நாம் விளம்பரம் செய்கிறோம் என யாரும் குத்திக்காட்ட முடியாது! நம் புரொபைல் பெயர், நம் இஷ்டம் ;)

ஒரு முக்கிய நடுக்குறிப்பு!
நண்பர்களே! எனது வலைத்தளம் உங்களுக்கு பிடித்திருந்தால், பிறர்க்கும் அறிமுகப்படுத்துங்களேன்! இல்லையெனில், குறைந்த பட்சம் உங்களின் எதிரிகளுக்காவது இத்தளத்தின் முகவரியை தெரியப் "படுத்துங்கள்" ;)


2. பதிவுகள்:
  • முறை: சீரான இடைவெளியில் தொடர்ந்து பதிவெழுதுங்கள்! தேவைப்பட்டால் படங்களை இணைத்து பதிவை சுவாரசியப்படுத்துங்கள்! உங்கள் மனதுக்கு பிடித்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பியுங்கள், விருப்பமிருந்தால் பின்னாளில் உங்கள் எழுத்தின் வீச்சினை பிற துறைகளிலும் காட்டலாம்!
  • நிறை: நிறைய எழுத, எழுத நமது எழுத்தின் தரம் கூடுவதை காணலாம்!
  • குறை: விஷயமே இல்லாமல் எழுதிக்கொண்டே போனாலும் பயனில்லை!
  • எனது பார்வை: பதிவெழுத ஏதாவது புதிய யோசனை கிடைத்தால், அதை உடனே டிராப்டில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் கிடைக்கும் போது அவற்றை ஒவ்வொன்றாக முழுமை செய்து, வெளியிடுங்கள்!
  • ஜாலி டிப்ஸ்: நீங்கள் ஒரு புதிய பதிவிட்டால், அதனுள் மற்ற பழைய பதிவுகளின்  சுட்டிகளை ஆங்காங்கே தெளித்து வையுங்கள்! புதிய வாசகர்கள் உங்களின் பல பதிவுகளை படிக்க இது வழி வகுக்கும்! இதை நான் இந்த பதிவிலும் (டபிள் மீனிங்!) நடைமுறைப் படுத்தியிருப்பதை காணலாம் ;)

3. விடாமுயற்சி:
  • முறை: ப்ளாக் ஆரம்பித்து, பத்து பதிவு போட்டு விட்டு யாரும் படிக்க வரவில்லை என்பதற்காக துவண்டு விடக்கூடாது! விளம்பரம் சரியாக செய்தும் நம் பதிவுகளை யாரும் படிக்கவில்லை என்றால் நம் பதிவுகளில் ஏதாவது குறை இருக்கலாம்! நாம் எழுதும் முறையோ, பதிவுகளின் உள்ளடக்கமோ பிறரை கவராது போயிருக்கலாம்!
  • நிறை: நம் திறன் மீது நமக்குள்ள அகம்பாவத்தை அசைத்து பார்த்து, வானில் மிதக்காமல், நம்மை தரையில் நடக்கச் செய்ய இது உதவும்!
  • குறை: விடாமுயற்சி = கால விரயம்!
  • எனது பார்வை: மனச்சோர்வு அடையாமல், பதிவுகளின் தரத்தை மேம்படுத்தி, முடிந்தவரை தொடர்ந்து எழுதுங்கள்! 
  •  ஜாலி டிப்ஸ்: விளம்பர முயற்சியை தீவிரப்படுத்தி, நம்மைப் பார்த்தாலே பவர்ஸ்டாரை பார்த்தது போல மற்றவர்கள் பயந்து ஓடிடச் செய்யலாம்! நண்பர்களையும், உறவினர்களையும் மிரட்டி அல்லது லஞ்சம் கொடுத்து படிக்க வைக்கலாம்!

4. விமர்சனம்:
  • முறை: எல்லாரும் நமக்கு சார்பாகவும், எல்லாமும் நாம் நினைத்தது போலும் நடந்து விட்டால் அதில் சுவாரசியம் ஏது?! உங்களுக்கு சரியென்று தோன்றுவதை எழுதுங்கள்! மற்றவர்கள் விமர்சனத்தை கண்டு அஞ்ச வேண்டாம்! அதேபோல நாம் எழுதியதிற்கெல்லாம் பின்னூட்டங்கள் / விமர்சனங்கள் வந்திட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்!
  • நிறை: ஒரு விஷயம் = பல கோணம்
  • குறை: கடுமையான விமர்சனங்கள் = மன உளைச்சல்
  • எனது பார்வை: அதற்காக எல்லாவற்றையும் போட்டு அலசி ஆராய்ந்து தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் உங்களை பற்றிய தவறான யூகங்கள் வந்திட வழிவகுத்திடக் கூடாது!
  • ஜாலி டிப்ஸ்: எதையாவது கிளப்பி விட்டு விட்டு மற்றவர்கள் பின்னூட்டம் போட்டு அடித்துக் கொண்டு சாவதை சாவகாசமாய் சாய்ந்து உட்கார்ந்து ரசிக்கலாம்!

5. அணி சேராமை:
  • முறை: வலைப்பதிவுலகில் கோஷ்டிகளுக்கும், கோஷ்டிப் பூசல்களுக்கும், பின்னூட்ட வன்முறைகளுக்கும் பஞ்சமில்லை! அந்த வலையில் மட்டும் சிக்கி விடாதீர்கள்!
  • நிறை: யாருக்கும் பயப்பட, ஒத்து ஊதத் (ஜால்ரா!) தேவையில்லை!
  • குறை: பச்சோந்தி, டபுள் ஏஜன்ட் போன்ற உயரிய பட்டங்கள் மற்றும் எல்லா கோஷ்டிகளாலும் புறக்கணிக்கப் படுவது!
  • எனது பார்வை: உங்களுக்கு சரியென பட்டதை கோஷ்டி பேதம் பார்க்காமால் ஆதரவளியுங்கள். தேவைப்பட்டால் ஏதும் பேசாமல் ஒதுங்கி இருங்கள். எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் நல்ல பெயர் வாங்கிடுவது முடியாத காரியம்! அது தேவையும் இல்லை!
  • ஜாலி டிப்ஸ்: முடிந்தால் நீங்கள் ஒரு புது கோஷ்டி ஆரம்பித்து, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகளோ, உறுப்பினர்களோ கிடையாது என விளம்பரம் செய்திடலாம்! 

6. வடிவமைப்பு:
  • முறை: உங்கள் தளத்தில் முதலில் கவனிக்கப்படப் போவது உங்கள் பதிவோ அதன் உள்ளடக்கமோ அல்ல! உங்கள் தளம், கண்டதும் ஈர்க்கும் வகையில் இருந்தாலே பாதி வெற்றிதான்! படிக்க ஏதுவான வெளிர் நிற பின்னணிகளை உபயோகிப்பது நலம்! பின்னணியிலும், எழுத்துக்களிலும் வர்ணஜாலம் செய்து படிப்பவர் கண்ணை பதம் பார்த்திட வேண்டாம்! முடிந்தவரை தேவையில்லாத "Gadget"களை தவிர்க்கவும்!
  • நிறை: புதிய வாசகர்கள், தள வடிவமைப்பால் கவரப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பதிவையாவது படிப்பார்கள்!
  • குறை: சிறந்த வடிவமைப்பு, மிகுந்த நேரம் பிடித்திடும் காரியம்!
  • எனது பார்வை: நான் பதிவுலகிற்கு புதிது என்பதால், வடிமைப்பை பொறுத்தவரை எனது தளம் "ஜஸ்ட் பாஸ்" வகையை சார்ந்ததுதான் என எண்ணுகிறேன்! நல்ல, விளம்பரங்கள் இல்லாத, இலவச "Blogger Template"களை எனக்கு பரிந்துரையுங்கள் நண்பர்களே!
  • ஜாலி டிப்ஸ்: நடிகைகள் மற்றும் நடிகர்களின்(!) கவர்ச்சிப் படங்களை பின்னணியில் உபயோகித்தால் அவர்களை பார்ப்பதற்காகவாவது வாசகக் கண்மணிகள் வந்திடுவார்கள்! படங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம் ;)

7. சமூகப்  பங்கேற்றம்:
  • முறை: இதில் சில விஷயங்கள் 'விளம்பரம்' தலைப்பிலேயே சொல்லப்பட்டுவிட்டன. உங்கள் வலைத்தளத்துடன், Facebook, Google+ & Twitter போன்ற சமூகத்தளங்களை இணைத்திடுங்கள்! Indli போன்ற திரட்டிகளின் வோட்டுப் பட்டைகளையும் அளித்திடுங்கள்!
  • நிறை: வாசகர் பங்கேற்பு மற்றும் கருத்துப் பரிமாற்றம் பெருகிடும்! புதிய நண்பர்களும், எதிரிகளும் கிடைப்பார்கள்! :)
  • குறை: வாசகர்கள் பெருகப் பெருக, எல்லாரிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்திடுவது, பதிலூட்டம் போடுவது என இது ஒரு முழு நேர வேலையாகி விடும்!
  • எனது பார்வை: நான் இன்னும் Facebook Social Plugins-களையும், திரட்டிகளின் வாக்கு பட்டைகளையும் இத்தளத்துடன் இணைக்கவில்லை. Template-ஐ HTML எடிட்டருடன் மாற்ற வேண்டும் என்றாலே பீதியாய் இருக்கிறது! :D
  • ஜாலி டிப்ஸ்: Voting Widget மூலம் அவ்வப்போது ஏதாவது மொக்கை கேள்வி போட்டு கருத்துக்கணிப்பு நடத்திடலாம்! ஆனால் நீங்கள் விரும்பும் பதிலை ஓட்டளிப்பவர்களிடம் திணித்தல் அவசியம் ;). உதாரணத்திற்கு, கேள்வி: உங்களுக்கு இந்த வலைத்தளம் பிடித்திருக்கிறதா?. பதிலுக்கான ஆப்ஷன்கள் இவ்வாறு கொடுத்திடலாம்!: A) ரொம்பப் பிடித்திருக்கிறது, B) மிகவும் பிடித்திருக்கிறது, C) சூப்பராய் இருக்கிறது!, D) செம! பின்னிட்டீங்க தல!

8. பாதுகாப்பு:
  • முறை: உங்கள் தளம் இயங்குவது மற்றவர்களின் தயவில் என்பதை நினைவில் இருத்தி, பதிவுகளை அவ்வப்போது Backup எடுத்திட வேண்டியது அவசியம்! அதே போல உங்கள் தளத்தை வடிவமைக்கும் முன்போ அல்லது வடிவமைத்த பின்னரோ, Template Backup-ம் எடுத்துவிடுங்கள்! முடிந்தால் "Custom Domain" ஒன்று வாங்கிவிடுங்கள். நீங்கள் எந்த Blog provider-க்கு மாறினாலும் உங்கள் தளப்பெயர் மாறாதிருக்க இது உதவும்!
  • நிறை: நமது வலைத்தளம் நீக்கப்பட்டாலோ அல்லது நாம் வேறு Blog service-க்கு மாற நினைத்தாலோ, நாம் எடுக்கும் Backup-பின் உதவியுடன் எளிதில் செய்திடலாம்!
  • குறை: தற்போதைய நிலவரப்படி ".com" - Top Level Domain-இல் ஒரு பெயரை நமதாக்கிக் கொள்ள 'வருட வாடகை' ஏறக்குறைய 500 ரூபாய்!
  • எனது பார்வை: நான் எப்போதும் புதிய பதிவு இட்ட பின் செய்யும் முதல் காரியம், மொத்த தளத்தையும் "Backup" எடுப்பதுதான்! Custom Domain-உம் வாங்கி விட்டதால் இப்போதைக்கு கவலையில்லை :)
  • ஜாலி டிப்ஸ்: "www.everyone-reads-my-blog-everyday.com" என்று ஏதாவது ரகளையான domain பெயரை வைத்து விட்டால், யாரும் படிக்காவிட்டாலும் நமக்கு நாமே திருப்தி பட்டுக்கொள்ளலாம்!

ஒரு குட்டி கமர்சியல் ப்ரேக் ;) படித்து விட்டீர்களா?:

என்னாது? மீதி ரெண்டு கட்டளைகளை காணோமா?! அட விடுங்க பாஸ், பதிவோட தலைப்பு ஒரு ரைமிங்கா இருக்கணும்கறதுக்காக அப்படி வச்சேன், அவ்ளோதான்! ;)

வேணும்னா, என்னோட இந்த பதிவுல இருக்குற சில விஷயங்களில் இருந்து, மீதி இரண்டு கட்டளைகளையும் நீங்களாக கட்டமைத்துக் கொள்ளுங்க! :D

Bye, bye!

கருத்துகள்

  1. If you don't know Tamil, then you can try reading this post in English with the help(!) of Google Translate! Beware, you'll end up forgetting English as well in the process ;)

    பதிலளிநீக்கு
  2. இனி உங்களுக்கு போன் யாராவது செய்தால் ‘bladepedia.com ” பேசுகிறேன் என்று பேச ஆரம்பியுங்கள் :-).

    படிக்க வித்தியாசமாக, சரளமான எழுத்து நடையுடன் இருக்கிறது உங்கள் ப்ளாக். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, இந்த ஐடியா நல்ல இருக்கேன். பிரச்சனை என்னன்னா நம்ம வெப்சைட் பேர கேட்டதும் டக்குன்னு போன வச்சுருவாங்க - அப்புறமா தனியா பேசிட்டிருக்க வேண்டியதுதான்! :D

      நீக்கு
  3. கட்டளைகள் ஐந்தும் அருமை. (என்ன ஐந்தா? என கேட்காதீர்கள். சும்மா ரைமிங்கா இருக்கணும்கறதுக்காக அப்படி சொன்னேன்)

    மேலும் சில பதிவுகளையும் படித்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை நண்பா! நேரமிருக்கும்போது எல்லாவற்றையும் படிக்கிறேன்.

    // நண்பர்களே! இந்த வலைத்தளம் பிடித்திருந்தால், பிறர்க்கும் அறிமுகப்படுத்துங்களேன்! Indli போன்ற திரட்டிகளுக்கும் பரிந்துரைக்கவும்! நன்றி!//

    ஓட்டுபட்டை இல்லாமல் எப்படி பரிந்துரைப்பது? அதனை வையுங்கள் நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>>என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை<<<
      நன்றி நண்பரே :) have fun!

      >>>ஓட்டுபட்டை இல்லாமல் எப்படி பரிந்துரைப்பது? அதனை வையுங்கள் நண்பா!<<<

      இதுதான் பிரச்சினையே! ;)
      >>>நான் இன்னும் Facebook Social Plugins-களையும், திரட்டிகளின் வாக்கு பட்டைகளையும் இத்தளத்துடன் இணைக்கவில்லை. Template-ஐ HTML எடிட்டருடன் மாற்ற வேண்டும் என்றாலே பீதியாய் இருக்கிறது!<<<

      நீக்கு
    2. நண்பா! இது தொடர்பாக நீங்கள் என்னை basith27[at]gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

      நீக்கு
    3. தற்போதைக்கு இவற்றை இணைப்பது பற்றிய தகவல்களை இணையத்தில் படித்து வருகிறேன்! உதவிக்கு மிக்க நன்றி நண்பரே, தேவைப்பட்டால் அவசியம் தொடர்பு கொள்கிறேன்!

      நீக்கு
    4. ஏதாவது நல்ல blogger templates-களை பரிந்துரையுங்கள்!

      நீக்கு
  4. //ஏதாவது நல்ல blogger templates-களை பரிந்துரையுங்கள்!//

    என்னுடைய தளத்திற்கும் ரொம்ப மாதமாக தேடிக் கொண்டிருக்கிறேன். :) :) :)

    சில தளங்கள்:

    http://btemplates.com/ (மற்ற தளங்களில் உள்ளவற்றையும் இங்கு பகிர்கிறார்கள்)
    http://www.dhetemplate.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா! உங்கள் தளத்தை கண்டேன், வடிவமைப்பு neat and clean ஆக உள்ளது! :) இந்த MEGA தொடர் நன்றாக உள்ளது! மெதுவாய் உட்கார்ந்து முழுவதும் படிக்க முயல்கிறேன்!

      நீக்கு
    2. வாழ்த்துக்கு நன்றி நண்பா!

      நீக்கு
    3. http://www.parkandroid.com/
      எப்படி ரெண்டு ப்ளாக் மேய்க்க முடியுது?! :)

      நீக்கு
  5. //எப்படி ரெண்டு ப்ளாக் மேய்க்க முடியுது?! :)//

    என்னாது? ரெண்டு ப்ளாக்கா?

    http://www.bloggernanban.com/2011/06/version-20.html இந்த பதிவை பாருங்க புரியும்..

    :) :) :)

    பதிலளிநீக்கு
  6. ஒரு மாசத்திலயே நல்ல ப்ளேடு போட கத்துகிட்டீங்க சாரி பதிவு போட கத்துகிட்டீங்க. பின்னுங்க

    பதிலளிநீக்கு
  7. அனைத்து வோட்டு பட்டைகளையும் இணைத்து பட்டையை கிளப்பியாயிற்று! தாங்க்ஸ் டு ப்ளாகர் நண்பன்! :)
    http://www.bloggernanban.com/2011/10/add-tamil-vote-buttons.html

    பதிலளிநீக்கு
  8. பதிவெழுத வந்து ரெண்டு மாசம் ஆகலே! அதுக்குள்ள மத்தவங்களுக்கு ஆலோசனையா? ரொம்ப வேகமா வளர்ந்துட்டீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. பார்த்துப் பார்த்து செதுக்கி உள்ளீர்கள் அருமை. உங்கள் அனைத்துக் கருத்துக்களும் எனக்கும் பயன் உள்ளது. ஏன் என்றால் நானும் புதியவன்.

    பதிலளிநீக்கு
  10. @ பழனி.கந்தசாமி ஐயா: மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள என்ன உபதேசம்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுதுங்க ஐயா! :) உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! :)

    பதிலளிநீக்கு
  11. @சீனு: நன்றி நண்பரே! உங்களுக்கு இப்பதிவு பயன் பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி! :)

    பதிலளிநீக்கு
  12. @Bladepedia கார்த்திக்

    புது டெம்ப்ளேட்டும், ஓட்டுப்பட்டைகளும் நன்றாக உள்ளது நண்பா! சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டும். பின்னூட்டத்தில் சொன்னால் பெரிதாகிவிடும். நீங்கள் விருப்பப்பட்டால் basith27[at]gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி நண்பா! நானே உங்களை சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்! உடனே தொடர்பு கொள்கிறேன்! உங்களுடைய அற்புதமான ப்ளாகர் நண்பன் technical பதிவுகளுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி மற்றும் பூங்கொத்து! :)

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு. உதவும் படியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  15. உங்களிடம் நகைச்சுவை துள்ளி விளையாடுகிறது உண்மையும் கூட

    பதிலளிநீக்கு
  16. எல்லா கட்டளைகளும் அருமை...

    கீழே கொடுத்திருக்கும் டிப்ஸ் இன்னும் அருமை!!

    பதிலளிநீக்கு
  17. பழைய எழுத்தாளர்.புதிய பதிவுகள் !!இப்படித்தான் உங்களை கருதுகிறேன்..நீங்க நல்லா எழுதுறிங்க...அதனால என் பக்கம் வந்து எதையாவது எழுதி போடுங்க.(ஒரு விளம்பரம்..) http://tamilmottu.blogspot.in/2012/06/blog-post.html

    பதிலளிநீக்கு
  18. @ Arun & Prem: Thanks guys!

    @Satheesh: Thanks! Sure I will take a look at your blog!

    பதிலளிநீக்கு
  19. பதில்கள்
    1. இவ்ளோ பண்ணியும் ஒரு பய படிக்க மாட்டேன்கறான்! அஞ்சு வாரத்துல 50000 ஹிட்சுக்கு என்னய்யா மேஜிக் பண்ணே? ;)

      நீக்கு
  20. புதிய பதிவர்களுக்கு அருமையான தகவல் நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  21. வலைசரம் மூலம் நீங்கள் எனக்கு அறிமுகம் உங்கள் தளத்தின் பதிவுகள் சுவாரசியம் ஆனால் படிக்க சுலபமாக இல்லை கருப்பில் மின்னும் எழுத்துக்கள் பாதியிலே கண்களை இருடடைய செய்கிறது நீங்கள் சொன்னது போல பின்னணி வெளிர் நிறத்தில் இருந்தால் படிக்க எதுவாகஇருக்கு ............நன்றி

    என் தளம் http://kovaimusaraladevi.blogspot.in நேரம் இல்லாவிட்டாலும் வருகை தாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! வெளிர் பின்னணி (வெள்ளை நிறம்), கருப்பு எழுத்துக்கள் - இப்படிதானே எனது தளம் இப்போதும் உள்ளது?!

      //நேரம் இல்லாவிட்டாலும் வருகை தாருங்கள்//
      :) :) :) நிச்சயம்!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia